அதிமுக மாநாட்டில் உணவு சமைக்க சமையல் கலைஞர்கள் 10000 நபர்கள் உணவு பரிமாற 5000 நபர்கள் டன் கணக்கில் அரிசி காய்கறிகள் குவிக்கப்பட்டுள்ளது..!August 20 AIADMK grand conference in Madurai 2023

August 20 AIADMK grand conference in Madurai 2023

அதிமுக மாநாட்டில் உணவு சமைக்க சமையல் கலைஞர்கள் 10000 நபர்கள் உணவு பரிமாற 5000 நபர்கள் டன் கணக்கில் அரிசி காய்கறிகள் குவிக்கப்பட்டுள்ளது..!

அதிமுக மாநாட்டுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே முழுமையாக இருப்பதால் மதுரை முழுவதும் இப்பொழுது திருவிழா போல் இருக்கிறது.

அதிமுக மாநாட்டில் குறைந்தபட்சம் 10 லட்சம் நபர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,அவர்களுக்கு உணவு சமைக்கும் பணி மிகவும் பரபரப்பாக தற்பொழுது நடைபெற்று வருகிறது.

நெல்லை கேட்டரிங் என்ற தனியார் நிறுவனம் உணவு சமைக்கும் ஆர்டரை பெற்றுள்ளது,நேற்றிலிருந்து அந்த கேட்டரிங் டீம் உணவு சமைக்க தொடங்கிவிட்டது.

அந்த வகையில் உணவு சமைக்க மட்டும் 10000 சமையல் கலைஞர்களும்,பரிமாறுவதற்கு 5000 நபர்களும் பணியமற்றப்பட்டுள்ளார்கள்.

தனித்தனி வெரைட்டி சாதம் தயாரிக்கப்படுகிறது, தயிர் சாதம், பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம், என வெரைட்டி வெரைட்டியாக உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக டன் கணக்கில் அரிசி மூட்டைகளும், வெங்காயம், தக்காளி, உட்பட காய்கறி மூட்டைகளும் தற்போது மலைக்கோல் குவிந்துள்ளது.

நாளை காலை முதல் தொண்டர்கள் மாநாட்டுக்கு வர தொடங்கி விடுவார்கள்,என்பதால் நாளை முதலே அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியும் தொடங்கிவிடும்.

எல்லாவற்றையும் விட நாளை மறுதினம் தொடர்ந்து அடுப்பை அணைக்காமல் தொடர்ச்சியாக சமையல் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக எரிவாயு சிலிண்டர் லோடுலொடாக கொண்டுவரப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு மட்டும்தான் இந்த உணவு அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் அவர்கள் தங்கும் விடுதிகளில் சாப்பிட்டுகொள்வார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு படைக்கும் அதிமுகவின் மாநாடு

அதிமுக என்ற மிகப் பெரிய ஒரு இயக்கத்தை தொடங்கிய டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு அந்த இயக்கம்.

செல்வி ஜெ ஜெயலலிதா என்ற இரும்பு பெண்மணி இடம் சென்றது, அதற்கு பிறகு தற்போது,அந்த இயக்கம் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கைவசம் சென்றுள்ளது.

மற்ற இரு தலைவர்கள் போல் நானும் இந்த இயக்கத்தை வழி நடத்துவேன்,இயக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் இயக்கத்தை வெற்றிப் பாதை அழைத்து செல்வேன் என எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இதுவரை இந்தியாவில் யாரும் நடக்காத மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி தன் கட்சியின் தொண்டர்கள் பலம் என்ன என்று நிரூபிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டு இந்த மாநாட்டை தொடங்கியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மாநாடு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கு நீங்கள் செல்வதற்கு இலவசமாக பேருந்துகள் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து புறப்படும்.

நீங்கள் புறப்பட்ட சென்றால் அங்கு உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்,உணவு,குடிநீர்,கழிப்பறை வசதி,உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Nokia G42 Smartphone Price Specifications

ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு எச்சரிக்கை செய்தி

தாய் பத்திரம் தொலைந்து விட்டதா மூலப்பத்திரம்

மாரடைப்பை தூண்டும் மிக மோசமான உணவு பட்டியல்..!

Leave a Comment