Avatar movie 2 release date best tips
ரிலீசுக்கு முன்பே கலெக்ஷனை தட்டி தூக்கிய அவதார் 2 எகிறும் எதிர்பார்ப்பு..!
அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் முன்பதிவு டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டில் வெளியான அவதார் படம் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டது.
அதனுடைய வசூல் என்பது பலமடங்காக இருந்தது,இதுவரை உலகத்தில் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை.
Titanic,The Terminator,Judgement,The 2 Terminator,போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய இயக்குனர்.
இவருடைய படங்கள் எப்போதும் தனித்துவமாகவும் அதிக வசூல் செய்ய கூடிய படமாகவும் இருக்கிறது.
படத்தின் டீசர் கடந்த மே மாதம் வெளியாகி 24 மணி நேரத்தில் 146 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்தில் மிரட்டி உள்ளார்கள்.
படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது அவதார் தொடரின் 3வது பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் 4ம் பாகம் 2026 ஆம் ஆண்டு 5ம் பாகம் 2028 ஆம் ஆண்டும் திரையரங்கில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சாதனை படைத்துள்ளது
Avatar movie 2 release date best tips இந்த நிலையில் அவதார் 2ம் பாகத்தின் திரைப்படத்திற்கான முன்பதிவு இப்பொழுது அசுர வேகத்தில் தொடங்கியுள்ளது.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் முழு டிக்கெட்டும் விற்பனையாகியுள்ளது.
Avatar movie 2 release date best tips தற்போது வரை ரூ 10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை ரிலீஸாக உள்ள நிலையில் முன்பதிவில் அவதார் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த திரைப்படம் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
Avatar movie 2 release date best tips இதுவரை உலகத்தில் வெளியாகியுள்ள திரைப்படங்களை விட இந்த படத்தில் அதிக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, மிகப்பிரமாண்டமாக பிரமிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த படத்திற்கான டிக்கெட்டை இணையதளம் மூலம் புக் செய்யலாம்.
அனைத்து படங்கள் போலவும் இந்த படமும் இணையதளத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் பொது மக்களிடத்தில் எழுந்துள்ளது.