Ayushman Bharat digital new health ID 2021
சுகாதார அட்டை(Health ID) என்றால் என்ன அது எப்படி இயங்குகிறது அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள், மோடி இன்று துவக்கி வைத்த மிகப்பெரிய திட்டம் நாட்டில் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவில் இப்பொழுது மருத்துவத் துறை மற்றும் மருத்துவ முறையை மிகப்பெரிய அளவில் கணினி மையமாக்கும் அரசின் சலுகை மற்றும் திட்டங்கள் அனைத்தும்.
அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார் இதற்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் அறிவித்திருந்தாலும் இந்த திட்டத்திற்கு சோதனை ஓட்டமாக இந்தியாவில் 6 யூனியன் பிரதேசத்தில் மட்டும் இயங்கிவந்தது.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் இந்த திட்டம் அமலாக்கம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக பெற வேண்டியது சுகாதார அடையாள அட்டை(Health ID).
இந்த அட்டை மூலம் என்ன பலன் கிடைக்கிறது அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
14 இலக்கு கொண்ட அடையாள அட்டை
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சேவையில் முதல் முக்கிய அடிப்படையை நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 14 இலக்கம் கொண்ட சுகாதார அடையாள அட்டை உருவாக்குவது தான்.
இந்த அடையாள அட்டை கொண்டு டிஜிட்டல் கணக்கில் தான் ஒருவரின் அனைத்து மருத்துவ தரவுகளும் இனிவரும் காலங்களில் பதிவு செய்யப்படும்.
ஆதார் அட்டை
சுகாதார அட்டை, ஆதார் எண், அடிப்படை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்படுவது தனிப்பட்ட எண் தான் இந்த சுகாதார அட்டை இந்த 14 இலக்கம் கொண்ட சுகாதார அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படுவது மட்டுமில்லாமல் ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணும் இணைக்கப்பட உள்ளது.
இந்த சுகாதார அட்டையை வைத்துதான் மருத்துவ நிறுவனங்கள் ஒருவரின் உடல் பரிசோதனை தரவுகளை பெற முடியும்.
டிஜிட்டல் ஹெல்த் இன்பரா (Digital Health Infra)
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை உருவாக்கி வரும் (NDHM) அமைப்பு தெரிவிக்கையில் இந்த திட்டம் மக்களின் அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் ஒன் ஸ்டாப் சொலுஷன் ஆக இருக்கும்.
மேலும் நாட்டின் சுகாதார அடையாள அட்டை திட்டத்திற்கு இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் முதுகெலும்பாக விளங்கும் என தெரிவித்துள்ளது.
மின்னணு முறையில் மருத்துவ தரவுகள்
இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட் இனிவரும் காலங்களில் உருவாக்கப்படும். இந்த ரெக்கார்ட் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் பழைய தரவுகளை சரிபார்ப்பது.
புதிய தரவுகள் சேர்ப்பது இதன் மூலம் மக்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்.
6 யூனியன் பிரதேசத்தில்
இந்தத் திட்டம் முதல் முறையாக இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தாமன், மற்றும் டியு, லடாக், புதுச்சேரி, லட்சத்தீவு, ஆகிய ஆறு யூனியன் பிரதேசத்தில் இப்பொழுது இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியா முழுக்க செயல்பட உள்ளதாக இன்று பிரதமர் மோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்
இந்தத் திட்டத்தில் 4 பிரிவுகள் இருக்கிறது
கணினி சுகாதார அடையாள அட்டை (Digital Health ID)
சுகாதார தொழில்முறை பதிவு (Health professional registration)
சுகாதார வசதி பதிவு (Health facility registration)
மின்னணு சுகாதார பதிவு (Electronic Health Record)
டிஜிட்டல் தளம்
முதல்கட்டமாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் மூலம் இந்தியாவில் ஹெல்த்கேர் பிரிவில் இந்த 4 பிரிவுகள் மூலம் டிஜிட்டல் தளத்தை உருவாக்க வேண்டும்.
அதன் பின்பு அரசின் முக்கிய திட்டங்களாக இருக்கும் பார்மசி மற்றும் டெல்மெடிசின் சேவைகள் இத்துடன் விரைவில் இணைக்க வேண்டும்.
சுகாதார அடையாள அட்டை
இந்த திட்டத்தில் மிகவும் முக்கியமானது சுகாதார அடையாள அட்டை, ஆதார் எண் போலவே ஒருவருக்கு ஒரு அடையாள அட்டை என்பது போல் மிகவும் நிலையான கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
Click here to view our YouTube channel
இந்த சுகாதார அடையாள அட்டை மூலம் உரிய நபருக்கு தான் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது, என்பது முதல் எந்த மருத்துவமனை, எந்த மருத்துவர்,என்ன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என்பன வரையில் நோயாளியின் அனைத்து தரவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
Best 5 foods improve for memory power
ஒன்றிய அரசு தெரிவிப்பது என்னவென்றால் இதன் மூலம் உடல் உறுப்பு திருடுவது, போலியான இன்ஷூரன்ஸ் பாலிசி கிளைம் செய்வது, போலியான மருத்துவர்கள், போலியான மருந்து, மாத்திரைகள், போலியான மருத்துவமனை, சுகாதாரமற்ற மருத்துவமனை, இவைகள் அனைத்தும் கலைக்கப்படும்.
Nethili meen health benefits 5 list in Tamil
ஒரு உறுதியான தரமான மருத்துவ சேவையை நாட்டில் உருவாக வேண்டும் என்பதே ஒரு இலக்கு என தெரிவித்துள்ளது.