இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்தால் 500,000 ரூபாய் வரை பெறமுடியும் (Ayushman Bharat Yojana 2020 details in tamil)
நம் நாட்டில் இருக்கும் பொது மக்கள் இரண்டு விஷயங்களுக்கு மட்டும் அதிக செலவு செய்கிறார்கள் இதனால் அவர்களுடைய பொருளாதாரம் பாதிப்படைகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் நடுத்தரக் குடும்பம் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு பயன்படுகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு நல்ல தரமான சுகாதார வசதியை மலிவான விலையில் கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்ட அரசின் சூப்பரான திட்டமே இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1,350 வகையான சிகிச்சைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களும் சாமானிய மக்களும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகளை மிகப்பெரிய மருத்துவமனையிலும் தீவிர உடல் நலக் குறைபாட்டுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் தகுதியானவரா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற வேண்டுமானால் முதலில் நீங்கள் இந்தத் திட்டத்தில் தகுதியானவரா என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முதலில் இந்த திட்டத்தில் இணைவதற்கு https://pmjay.gov.in/ என்ற அரசின் இணையதளத்தில் சென்று I am eligible என்பதை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு.
Indian government in5 best project for peoples
உங்களுடைய வயதை தெரிந்து கொள்ள ஆதார் கார்ட் அல்லது பான் கார்டு ஏதேனும் ஒன்று தேவை. உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், உங்கள் மொபைல் எண் மற்றும் முகவரி, வருமான சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் இந்த திட்டத்திற்கு தேவைப்படும்.
இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ள 30 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். https://pmjay.gov.in/ என்ற பகுதிக்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு ஓ டி பி வரும் அதனை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
பின்பு I am eligible என்ற பகுதியில் சென்று நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து விட்டீர்களா என்று தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் இந்த திட்டம் உங்கள் வாழ்க்கையில் உதவிகரமாக இருக்கும்.
இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை பெற முடியும்.
திட்டத்தின் மூலம் தீவிர சிகிச்சைகள் மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள் தங்குமிடம் மருத்துவ உள்வைப்பு சேவை உணவுத் சேவைகள். மருத்துவமனைக்கு பிந்தைய 15 நாட்கள் வரையிலான செலவுகள் அவசரகால நோய்த் தொற்றுகளால் ஏற்படும் செலவுகள் போன்றவைகளை ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற முடியும்.
24 மணி நேரமும் சேவை.
மக்கள் இந்த திட்டம் குறித்து தகவல்கள், உதவிகள், புகார்கள் மற்றும் குறைகளுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800 111 565 என்ற எண்ணை தொடர்பு கொள்ள முடியும் அல்லது pmjay.gov.in இணையதளத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் இந்த திட்டம் மூலம் 50 கோடி இந்திய மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை வகைகள்.
மூளை அறுவை சிகிச்சை,புற்றுநோய், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக பிரச்சனை, நுரையீரல் மாற்றுதல், முதுகெலும்பு சரிசெய்தல், கொரோனா வைரஸ் தாக்கம் போன்ற அவசர சிகிச்சைகளுக்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அரசின் இணையதளத்தில் சென்று பார்க்கவும்.