Ban on import of laptop tablet computers in India
லேப்டாப் கணினி உள்ளிட்ட சில மின்னணு பொருட்களுக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடுகள் கலக்கத்தில் பெரு நிறுவனங்களும் கல்லூரி மாணவர்களும் என்ன காரணம்..!
மத்திய அரசு லேப்டாப்,கணினிகள் உள்பட சில மின்னணு பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை திடீரென்று விதித்துள்ள நிலையில் இது இந்தியாவுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை முக்கிய உத்தரவை திடீரென்று பிறப்பித்துள்ளார்.
அதாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், டேப்லெட், கம்ப்யூட்டர்கள்,உள்ளிட்டவைக்கு சில வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இனிமேல் இந்தியாவில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய விரும்பும் எந்த ஒரு நிறுவனமும்.
இறக்குமதி செய்ய அனுமதி பெற வேண்டும் இது இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மத்திய அரசு HSN CODE 8471 என்ற விதியின் கீழ் இந்த உத்தரவை திடீரென்று பிறப்பித்துள்ளது.
உள்நாட்டில் இதுபோன்ற பொருட்கள் உற்பத்தி செய்வதை அதிக அளவில் ஊக்குவிக்க இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே மின்னணு பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதை தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதை இந்த கட்டுப்பாடு காட்டுகிறது.
ஊக்கத்தொகை அறிவிப்பு திட்டம் பலன் கொடுக்குமா
இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பொழுது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து விற்கும் நிறுவனங்கள்.
இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் இந்த ஊக்கத்தொகைக்கு அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது கணினியில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு.
தரவுகள் வெளிநாடுகளில் திருட வாய்ப்புகள் இருக்கிறது இப்போது (Tech) துறையில்.
குறிப்பிட்ட நாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்க நிலையில் இது இந்தியர்களுக்கு எதிராக மாறலாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல ஆய்வு சோதனை மதிப்பீடு பழுது பார்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 20 பொருட்கள் வரை ஒரே பேக்கேஜில் இறக்குமதி செய்ய உரிமம் பெற தேவையில்லை.
மத்திய அரசின் இந்த முடிவு உள்நாட்டு உற்பத்தியை நிச்சயம் அதிகரிக்கும்,சமீபத்தில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற புதிய லேப்டாப்பை குறைந்த விலைக்கு வெளியிட்டு இருக்கிறது.
இப்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் மேலும் பல உள்நாட்டு தயாரிப்புகள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொழுது இந்திய சந்தையை ஆதிக்கம் செலுத்தி வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு கடுமையான சிக்கல்.
ஒன்று அவர்கள் உள்நாட்டில் உற்பத்தியை தொடங்க வேண்டும், இல்லையென்றால் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டி இருக்கும்.
இது Apple,Lenovo,HP,Samsung,Acer போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தி விட்டது.
இப்பொழுது இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான லேப்டாப்கள், கணினிகள், சீனாவில் தயாரிக்கப்பட்டது.
அதை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊக்கத்தொகை கோரி விண்ணப்பிக்கும் என தெரிகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to apply new ration card in tamilnadu
New SP 160 Honda Unicorn Bike Specifications Price