Bank deposit new insurance increase to 5 lakh

Bank deposit new insurance increase to 5 lakh

வங்கி டெபாசிட் க்கான இன்சூரன்ஸ் 1லட்ச ரூபாய் 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது..!

இந்திய வங்கிகளில் மக்கள் செய்யும் வைப்பு நிதிக்கான இன்சூரன்ஸ் அளவினை மத்திய அரசு வெறும் 1 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படாமல் மொத்த வங்கித் துறைக்கு அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியில் வங்கியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது, அந்த நிலையில் வைப்புநிதியளர்களின் பணத்திற்கு கட்டாய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

வங்கியின் வைப்புநிதியளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனில் வங்கிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

Bank deposit new insurance increase to 5 lakh

1,300 கோடி ரூபாய்

சமீபத்தில் சுமார் 1 லட்சம் வைப்பு நிதி யாளர்களுக்கு சுமார் 1,300 கோடி ரூபாய் பணம் அளிக்கப்பட்டுள்ளது அடுத்த சில நாட்களில் மீதமுள்ள 3 லட்சம் வைப்புநிதி யாளர்களுக்கு.

தங்களின் டெபாசிட் தொகையை இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் வாயிலாக திருப்பி அளிக்கப்பட உள்ளது எனவும் மோடி அறிவித்துள்ளார்.

வங்கி வைப்பு நிதிக்கான இன்சூரன்ஸ் தொகை 1 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாய் வரை அதிகரிக்க சுமார் 27 வருடம் தேவைப்பட்டது நம் நாட்டிற்கு.

இதேபோல் வங்கி திவாலாகும் பட்சத்தில் வங்கி வைப்பு நிதியாளர்களுக்கு தங்களின் டெபாசிட் தொகையை திருப்பி அளிக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது 90 நாட்களில் ரிசர்வ் வங்கி அதற்கான தீர்வை அளித்துள்ளது.

Bank deposit new insurance increase to 5 lakh

98 சதவிகித நபர்களுக்கு பாதுகாப்பு

மேலும் வங்கி வைப்பு நிதிகளுக்கு அளிக்கப்படும் (Deposit insurance credit guarantee scheme) திட்டம் மூலம் சுமார் 98 சதவீத நபர்கள் பாதுகாப்பு பெற்றுள்ளார்கள்.

மக்கள் பெரும் நம்பிக்கை உடன் வங்கியில் முதலீடு செய்யும் பொழுது அவர்களுக்கு வங்கிகள் முழு நம்பிக்கையை கொடுக்க வேண்டும் எனவும் மோடி அறிவித்துள்ளார்.

Deposit insurance credit guarantee scheme என்னும் திட்டத்தின் மூலம் ஒரு வங்கி திவாலாகும் பட்சத்தில் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு 5 லட்ச ரூபாய் வரையில் காப்பீட்டு அளிக்கப்பட்டு, அரசு அவர்களின் பணத்தை திருப்பி அளிக்கும்.

எவ்வளவு தொகை கிடைக்கும்

தோராயமாக நீங்கள் வங்கியில் 10 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்து வைத்திருந்து அந்த வங்கி திவாலானால் Deposit insurance credit guarantee scheme திட்டம் மூலம் 5,00,000/- ரூபாய் மட்டுமே பெற முடியும்.

அதேவேளையில் 3,50,000 /-ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் மொத்தமாக 3,50,000 /- வரையில் பணம் கிடைக்கும். இதற்கு முன்பு இந்த காப்பீட்டு தொகை அளவு வெறும் 1 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற்றுத்தரும் முட்டை ஓடு பவுடர் விற்பனை..!

இப்பொழுது நம் நாட்டில் சுமார் 17 வங்கிகளில் மக்களுக்கு தங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Deposit insurance credit guarantee scheme திட்டம் மூலம் இன்சுரன்ஸ் பாதுகாப்பை 5 லட்சம் ரூபாய் வரையில் அதிகரித்தது மட்டுமில்லாமல்.

Paywave ATM card safety full details 2022

ஒருவேளை வங்கி திவாலானால் மக்களுக்கு கொடுக்கக்கூடிய பணத்தை வெறும் 90 நாட்களுக்குள் கொடுக்கப்படவேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment