தினந்தோறும் சிறிது நேரம் மதிய வேலையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்(Benefits of getting at least 10 min sleep)
மனித உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் சிறந்த புத்துணர்வை கொடுக்கக்கூடியது தூக்கம் மட்டுமே பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது உங்களுடைய மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்
ஒவ்வொரு மனிதருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் சரியான முறையில் இயங்க வைப்பது மூளை மட்டுமே அதுமட்டுமின்றி உங்களின் சிந்தனைகளுக்கு எண்ணங்களுக்கும் புத்திக்கூர்மை களுக்கும் மிகவும் முக்கியமானது மூளை என்பதில் சந்தேகமில்லை
இவ்வாறு முக்கியமானதாக நமது மூளை புத்துணர்ச்சியுடன் இருப்பது மிக முக்கியம் அதற்கு சரியான தூக்கம் மட்டுமே தீர்வாக அமையும்
குட்டித் தூக்கம் அவசியம் தேவை
குட்டித் தூக்கமானது சரியான நேரத்தில் சரியான அளவில் தினம்தோறும் கிடைக்கும்மானால் உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை
தூக்கம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலகில் நடைபெற்றுள்ளது இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வழக்கமாக எப்பொழுதும் பிற்பகலில் உணவு உண்ட பிறகு எல்லோருக்கும் கண்டிப்பாக தூக்கம் வரும் மேலும் சிறிது நேரம் தூங்குவதால் உங்களது மூளையை கூர்மையாகவும் விழிப்புணர்வுடன் வைத்திருக்க முடியும் என தெரியவந்துள்ளது
பிற்பகலில் தூக்கம் சோம்பேறித்தனமானது என்றுதான் நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் பகலில் நீங்கள் தூங்கினால் உங்களுடைய மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மையான விஷயம்
பிற்பகல் தூக்கம் அவசியம் மூளையின் ஆரோக்கியத்திற்கு
தூக்கம் குறித்து சீனாவில் நடந்த ஆய்வில் பிற்பகலில் தூங்கும் நபர்களுக்கு தங்களின் இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருந்துள்ளது
அத்துடன் பேசுவதை சரளமாக பேசவும் நினைவாற்றலுக்கு தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது இந்த ஆய்வில் 60 வயதுடைய 2,314 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் ஆயிரத்து 1,534 பேர் பிற்பகல் தூக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளார்கள் மீதமுள்ள நபர்கள் 680 பகலில் தூங்காமல் இருப்பவர்கள்
அவர்களுக்கு அனைத்து விதமான உடல் சோதனைகளும் மினிமின்டர் ஸ்டேட் என்ற டெஸ்ட் வைக்கப்பட்டுள்ளது இந்த இரு பிரிவினர்களும் இரவு நேரத்தில் சராசரியாக ஆறரை மணி நேரத்திற்குமேல் உறங்குபவர்கள் ஆக உள்ளார்கள் மதிய உணவுக்கு பின்னர் தூங்கும் குழுவினர் 5 நிமிடத்தில் இருந்து அதிகபட்சமாக 2 மணி நேரம்வரை உறங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது
பகலில் தூங்கும் நபர்கள் தங்களின் செயல்திறன் அதிகரிப்பு நினைவாற்றல் அதிகரிப்பு சிக்கலான சூழ்நிலைகளுக்கு சரியான தீர்வு காண்பது தங்கள் இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
ஒரு நபர் குறைந்தது ஒரு நாளைக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்கவேண்டும் இதை சரியாக கடைபிடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் மேலும் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும் உடல் உறுப்புகள் சரியாக செயல்படும்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
தூக்கம் குறித்த ஆராய்ச்சிகள் உலகில் பல்வேறு நாடுகளில் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டு உள்ளது அதில் சரியாக தூங்கும் நபர்களுக்கு மட்டுமே புத்திக்கூர்மை உடல் ஆரோக்கியம் சரியாக சிந்திக்கும் திறமை உடல் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் வளர்ச்சி சரியாக இருந்துள்ளது மேலும் சுறுசுறுப்பு மற்றும் முகத்தில் சுருக்கங்கள் கரும்புள்ளிகள் போன்றவை இல்லாமல் இருந்துள்ளது
top 4 symptoms of weak immune system
ஒருவேளை நீங்கள் பகலில் அதிக நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் வராமல் போகலாம் உங்களுக்கு பகலில் நீங்கள் சிறிய தூக்கம் வேண்டும் என முடிவு செய்தாள் 2 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளுங்கள் இதனால் உங்களுக்கு எந்த ஒரு தீங்கு விளைவுகள் நேராது
மனித உடலுக்கு தேவையான காப்பர் சத்து நிறைந்துள்ள சிறந்த 10 உணவு வகைகள்