மனித உடலுக்கு தேவையான காப்பர் சத்து நிறைந்துள்ள சிறந்த 10 உணவு வகைகள்(Best 10 Foods High In Copper to add your diet)
மனித உடலில் பல வளர்சிதைமாற்ற இயக்கத்தை சரியாக நடத்த காப்பர் சத்து அவசியம் தேவைப்படுகிறது எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க காப்பர் சத்து உடலுக்கு தேவையான தாதுக்களை கொடுக்கிறது அதனாலதான் அந்த காலத்தில் செம்பு பாத்திரத்தை நம் முன்னோர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள் இது ஒரு முக்கியமான தாதுப்பொருள் என்பதால் மனித உடலின் அடிப்படை செயல்பாட்டிற்கு இது உதவி செய்கிறது
தாமிரச்சத்து
தாமிரமும் இரும்பும் இணைந்து மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது இந்த தாதுக்கள் மனித உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது இவை செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டு செல்ல வழிவகை செய்கிறது.
தேசிய மருத்துவ நூலகம் (என் எல் ம்) படி மனித உடலில் இரத்த நாளங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு நரம்பு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் தாமிரம் பாதுகாக்கிறது.
நாம் உயிர் வாழ்வதற்கு தாமிரம் மிக அவசியம் தாமிர குறைபாட்டால் செலியாக் நோய், மென்கேஸ் நோய் போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
தாமிர ஊட்டச்சத்தின் வேலைகள் என்ன
இரத்த சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்கிறது
இருதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது
மனித உடலில் இரும்பை உறிஞ்ச உதவுகிறது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கிறது
எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
எவ்வளவு தாமிரம் எடுத்துக் கொண்டால் நல்லது
இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் பரிந்துரைப்படி பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 0.9 மில்லி கிராம் அளவிற்கு தாமிரம் போதுமானதாக இருக்கிறது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1.3 மில்லி கிராம் அளவிற்கு தாமிரம் தேவை
ஒருவேளை நீங்கள் தாமிர ஊட்டச்சத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்புள்ளது இதனால் உங்களுடைய கல்லீரல் பாதிப்பு, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், தசைபிடிப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி எடுத்தல், போன்றவை ஏற்படும்.
இது குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கருத்தின்படி செம்பு பாத்திரத்தில் ஏற்படும் அரிப்பு காரணமாக தாதுக்கள் நீரில் கலந்து நச்சுத் தன்மையாக மாற வாய்ப்பு உள்ளது ஆனால் இது ஒரு அரிதான நிகழ்வாக இருக்கும்
தாமிர சத்து அதிகம் உள்ள உணவுகள்
மாட்டு இறைச்சி கல்லீரல் (11.8 மி.கி 1,1313 % DV)
மாட்டு இறைச்சி கல்லீரலில் குறைந்த கலோரிகள் மட்டுமே உள்ளது ஆனால் மனித உடலுக்கு தேவையான தாமிரம் இதில் அதிக அளவில் கிடைக்கிறது 1313% காப்பரையும் 100% விட்டமின் பியையும் மற்றும் விட்டமின் ஏயையும் தருகிறது
மேலும் 704% DV அளவு விட்டமின் ஏயையும் தருகிறது எனவே அதிகப்படியான மாட்டிறைச்சி நீங்கள் எடுத்துக் கொண்டால் வைட்டமின் ஏ நச்சுத் தன்மையாக மாற அதிக வாய்ப்பு உள்ளது இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாக மாறிவிடும்
காளான்கள்
இவற்றில் அதிக கலோரிகள் கொழுப்பு குறைவாகவும் புரதச்சத்து நிறைந்ததாக உள்ளது இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நல்ல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு
ஒரு தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் இது முதன்மையாக உள்ளது 5 முட்டை அளவிற்கு புரதத்தை இதில் நீங்கள் பெறலாம் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து சிறந்த உணவாக காணப்படுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 79% DV அளவிற்கு காப்பர் உள்ளது இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு சிறிதளவு ஆரஞ்சு நிறத்தில் காணப்படுவதால் இதில் உள்ள பீட்டா, கரோட்டின் மிக முக்கியமாக பங்கு வகிக்கிறது மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக் கோளாறுகளை போக்குகிறது நல்ல ஆரோக்கியமான கண் பார்வைக்கு வழிவகை செய்கிறது.
முந்திரி மற்றும் கொண்டைக்கடலை
ஒரு அவுன்ஸ் முந்திரியில் நல்ல இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்புகள், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் காப்பர் 70%DV போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை கனோலா போன்றவற்றில் சேர்ந்து பயன்படுத்தலாம்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து புரதம், இரும்பு மற்றும் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது ஒரு கப் சமைத்த கொண்டைக்கடலையில் 64%DV தாமிரம் உள்ளது
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதை விட்டமின் ஈ ஆக்சிஜனேற்ற பண்புகளை அதிக அளவில் கொண்டுள்ளது இதனால் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்கள் வழங்குகிறது சூரியகாந்தி விதைகளில் தாமிரம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது ஒரு அவுன்ஸ் உலர்ந்த சூரியகாந்தி விதைகளில் 56%DV தாமிரம் உள்ளது
அவகோடா பழம்
இந்த அவகோடா பழத்தில் நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது அவகோடா பழத்தில் 42% DV அதிக அளவு காப்பர் உள்ளது.
கொய்யா, மாதுளை, மாம்பழம் இவற்றிலும் தாமிரம் அதிக அளவில் நிறைந்துள்ளது மேலும் அவகோடா பழத்தில் நிறைவுறாத கொழுப்புகள் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது எனவே இந்த பழத்தை நீங்கள் சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வுகளை பெறுவீர்கள்