வஞ்சிரம் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்(Best 10 health benefits list for King fish)
கடலில் வாழும் இந்த மீன்கள் வேகமாக நீந்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் கடுமையாக போராடும் குணம் பெற்றிருக்கிறது.
இவற்றின் பற்கள் கூர்மையாக இருக்கும் எனவே இவற்றை மீனவர்கள் மிகவும் கவனமாக கையாளுகிறார்கள் இதனுடன் நீண்டு காணப்படும் குறைந்தது 4 முதல் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது தாடைகளில் பருக்கள் கடினமானது.
தமிழ்நாட்டில் இந்த மீனை வஞ்சிரம் மற்றும் சிலா என்று அழைக்கிறார்கள், அதேபோல் கேரளாவில் இந்த மீனை நெய் மீன் மற்றும் ஐகோரை என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில்(seer fish) என அழைக்கப்படும் இந்த மீனுக்கு (King fish) என செல்லப் பெயரும் இருக்கிறது.
இந்த உலகத்தில் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் மீன் எப்போதும் முதன்மையாக இருக்கிறது.
இந்த மீனில் அதிக அளவில் புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த மீனில் உடலுக்கும் மூளைக்கும் நம்பமுடியாத அளவிற்கு அதிகமான நன்மைகளை அளிக்கும் முக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
பக்கவாதம் மற்றும் மாரடைப்பு தடுக்கிறது
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாக மீன் எப்போதும் இருக்கிறது.
ஆச்சரியப்படும் வகையில் சில ஆய்வறிக்கைகள் அதிக அளவில் மீன் எடுத்துக்கொள்வதால் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படுவது குறைகிறது என தெரியவந்துள்ளது.
இதயத் தமனிகளில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதை ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றம்
ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
மனித மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குறிப்பாக (Docosahexaenoic) அமிலம் DHA முக்கியமாக தேவைப்படுகிறது.
இந்த காரணத்திற்காக தான் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் போதுமான அளவில் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
இருப்பினும் சில மீன்களில் அதிக அளவில் பாதரசம் உள்ளது. இது மூளை வளர்ச்சி பிரச்சினைகளுடன் தொடர்புடையது, இதனை கவனத்தில் கொண்டு சரியான மீன்களை தேர்வு செய்ய வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதும் பச்சையாக மற்றும் சரியான முறையில் சமைக்கப்படாத மீன்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
மூளை ஆரோக்கியத்திற்கு
மனிதர்களின் மூளை செயல்பாடு பெரும்பாலும் வயதாகும்போது குறைகிறது.
மன உளைச்சல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது, இதனால் தீவிரமான நரம்பியல் வியாதிகள் மனிதர்களுக்கு தோன்றுவது இப்பொழுது அதிகமாக உள்ளது.
இதனை குறைப்பதற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் உங்களுக்கு சரியான தூக்கத்தையும் கொடுக்கும்.
ஒவ்வொரு வாரமும் மீன் சாப்பிடும் நபர்களுக்கு தங்களுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கிடைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் நினைவாற்றலும் இதனால் அதிகரிக்கிறது.
மனச்சோர்வை தடுக்கிறது
இன்றைய காலகட்டங்களில் மன அழுத்தம் என்பது சிறு வயது முதல் பெரிய நபர்களை கூட பாதிக்கிறது.
இது குறைந்த மனநிலை, சோகம், ஆற்றல் குறைதல், மற்றும் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் ஆர்வம் குறைதல் ஆகியவற்றை வகைப்படுத்துகிறது.
இருதய நோய் அல்லது உடல் பருமன் என இது பற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை என்றாலும் மன அழுத்தம் தற்போது உலகின் மிகப்பெரிய உடல்நல பிரச்சனைகளில் முதன்மையாக இருக்கிறது மனிதர்களுக்கு.
பல சோதனைகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆண்டிடிரஸண்ட்ஸ் மருந்துகளின் செயல் திறனை கணிசமாக அதிகரிக்கிறது.
மீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் இருமுனை கோளாறு போன்ற பிற மனநிலைக்கு உதவக்கூடும்.
வைட்டமின் (டி-யின்) நல்ல உணவு
வைட்டமின்-டி உங்கள் உடலில் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் போல செயல்படுகிறது எப்பொழுதும்.
மீன் மற்றும் மீன் பொருட்கள் வைட்டமின் டி சிறந்த உணவு ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. சால்மன் மற்றும் ஹெர்ரிங் போன்ற கொழுப்புள்ள மீன்களில் அதிக அளவு உள்ளது.
ஒருவேளை உங்களால் சூரிய ஒளி மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி பெற முடியாவிட்டால், இதற்கு நீங்கள் கொழுப்பு சத்து நிறைந்த மீன்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம், இதனால் உங்களுக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட் கிடைக்கும்.
நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
டைப் 1 நீரிழிவு போன்ற நோய்கள் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை தவறாக தாக்கி ஆரோக்கியமான உடல் திசுக்களை அழிக்கும்.
பல ஆய்வுகளில் ஒமேகா-3 அல்லது மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கூட டைப்-1 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது என தெரியவந்துள்ளது.
மீன் மற்றும் மீன் எண்ணெய்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி காரணமாக இருக்கலாம்.
சில மருத்துவ நிபுணர்கள் நீங்கள் மீன் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு முடக்குவாதம் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது என பரிந்துரைக்கிறார்கள்.
ஆஸ்துமா வராமல் தடுக்கிறது
ஆஸ்துமா என்பது உங்கள் காற்றுபாதையின் நாள்பட்ட அலர்ஜியால் வகைப்படுத்தப்படும் ஒரு நோயாக இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமாக மின் நுகர்வு குழந்தைகளில் ஆஸ்துமாவின் 24% குறைவாக அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இளமையாக வைத்திருக்கிறது
வயதானவர்களை அதிக அளவில் பார்வை குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மை தாக்குகிறது இது மாகுலர் டிஜெனரேஷன் ஆகும்.
மீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இந்த நோயிலிருந்து உங்களை பாதுகாக்கலாம் என்று தெரிவிக்கிறது சில சான்றுகள்.
ஒரு மருத்துவ ஆய்வில் வழக்கமாக மீன் எடுத்துக்கொள்வதால் பெண்களில் (AMD) 42% குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
தூக்கத்தை மேம்படுத்துகிறது
இந்த அதிநவீன தொழில்நுட்ப காலகட்டங்களில் சரியான தூக்கமின்மையால் 70% மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
95 நடுத்தர வயது ஆண்களில் 6மாத ஆய்வில் வாரத்திற்கு 3 முறை சல்மான் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் தினசரி செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது
இது வைட்டமின்-டி உள்ளடக்கத்தால் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Click here to view our YouTube channel
சுவையானது மற்றும் எளிமையாக சமைக்கலாம்
மீன் எப்பொழுதும் சுவையானது மற்றும் பல வகைகளில் பிடித்தமாக சமைக்கலாம்.
what are the benefits of eating honey for the skin
வாரத்திற்கு குறைந்தது 2 முறை அல்லது 3 முறை உங்கள் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், இது எப்பொழுதும் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும்.
Black alkaline water benefits list 2021
முடிந்த அளவிற்கு நீங்கள் கடல் மீன்களை எடுத்துக் கொள்ளுங்கள் இது மட்டுமே ஆரோக்கியமான முறையில் வளர்ந்த மீன்கள், ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களில் எடை கூடுவதற்கு ஸ்டெராய்டு ஊசி போடப்படுகிறது.