Best 10 signs that your heart is unhealthy

உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள சில எளிய வழிகள்!(Best 10 signs that your heart is unhealthy)

மனித உடலில் அதிசயமான இன்றியமையாத உறுப்பு என்றால் அது இதயம் தான். உடல் முழுவதும் இரத்தத்தை சீராக விநியோகம்  செய்யும் பிரதான உறுப்பான இருதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு உண்ணும் உணவு வாழ்க்கை முறையை இருதய நோய்களை முற்றிலும் கட்டுப்படுத்த கருவியாகும்.

எல்லாவகையான இருதய நோய்களுக்கான அறிகுறி தெளிவாக தெரிவதில்லை அப்படியிருக்க நாம் இருதயம்  ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிய முடியும்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இருதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது ஒரு அறிகுறி என்னும் தவறான புரிதல் மக்களிடத்தில் இன்னும் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி மட்டுமல்ல மேலும் சில அறிகுறிகள் தென்படலாம் அவை பின்வருமாறு.

Best 10 signs that your heart is unhealthy

குறட்டை மற்றும் தூக்க கோளாறு

தீராத இருமல் அல்லது தொடர்ச்சியான இருமல்

உடல் சோர்வு

தலைச்சுற்றல்

மயக்கம் உணர்வு

சீரற்ற இதயத்துடிப்பு

நெஞ்சில் அசௌகரியம்

உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி

தொண்டை அல்லது தாடை வலி

கால்கள் கணுக்கால்கள் அடி வயிறு ஆகியவற்றில் வீக்கம்

போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இந்த நோய்களை எளிதாக குணப்படுத்தலாம். அதுமட்டுமில்லாமல் மருத்துவ செலவுக்கு ஆகும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம், அதற்கான நாட்களையும் மிச்சப்படுத்தி விடலாம்.

ஆரோக்கியமான உணவு, போதிய அளவு உடற்பயிற்சி மேற்கொண்டால், இருதயம் எப்பொழுதும் துடிக்கும் நலமுடன்.

குறிப்பாக இதயத் தமனிகளில் உருவாகும் கொழுப்புகள் தான் காரணமாக இருக்கிறது இருதய அடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கு.

இதற்கு கடல் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது இயற்கையான முறையில் விளைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

Best 10 signs that your heart is unhealthy

குறிப்பாக ஒமேகா-3 உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்கள் இதயம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள், பயறு வகைகள், வேர்க்கடலை, ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்புச் சத்து, இரும்பு, சோடியம், உணவுகளை முடிந்த அளவு தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.

சீரான உடல் எடை எப்பொழுதும் பராமரிப்பு வேண்டும், மது அருந்துதல், புகைபிடித்தல், மன இருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், நீரிழிவு நோய், உயர்இரத்த அழுத்தம், உயர் இரத்த கொழுப்பு ஆகியவை இருதய நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.

என்பதால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டிய செயல் முறைகளை நீங்கள் அவசியம் செய்ய வேண்டும்.

கெட்ட கொழுப்பிலிருந்து உங்கள் இருதயத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள்.

மனித உடலில் இருக்கும் அதிக அளவிலான உடல் கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவு பழக்கத்தின் மூலம் எளிதாக சரி செய்யலாம் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

இதயத் தமனிகளில் சேதம் அதிக கொழுப்பு மாரடைப்பு ஸ்ட்ரோக் போன்றவற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

ஹைபர்சொலஸ்டரோலிமிய என்கின்ற பெயரால் அழைக்கப்படும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களில் எச்சமாக கொழுப்பு மற்றும் எடை கூட்டும் பொருட்கள் சேர்வதால் இதய அடைப்பு ஏற்படுகிறது.

இதனால் இரத்த ஓட்டம் சிலசமயங்களில் பாதிக்கப்படுகிறது அல்லது குறைகிறது நெஞ்சுவலி திடீர் வலிப்பு நோய் போன்றவற்றுக்கான ஆபத்து அதிகமாகிறது உடலில்.

எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி உடலில் சேரும் இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அளவினை, இரத்த மாதிரி ஆய்வின் மூலமே கண்டறிய முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகளை நீங்கள் சரியான முறையில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தை கெட்ட கொலஸ்ட்ரால் இருந்து எளிமையாக காப்பாற்ற முடியும்.

பின்வரும் உணவுகள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை குறைக்கிறது.

வெள்ளைப் பூண்டில் இருக்கும் மருத்துவ குணம் உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள் உடலில் காணப்படும் கொழுப்பு கொழுப்பின் அளவை குறைப்பதாக இருக்கிறது.

வேர்கடலை, பாதாம், வால்நட், போன்ற நட்ஸ் வகைகளும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக் கொள்வதால் நன்மை பயக்கும்.

குறிப்பாக பாதாம் உடலில் தோன்றும் கொழுப்பை குறைக்கிறது நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது, இதயத்திற்கு நலம் நார்ச்சத்து தனிமங்களையும் அதிகம் கொண்ட உணவுகளாக இவைகள் இருக்கிறது.

பெரீஸ் எனப்படும் பழ வகைகள் நார்ச் சத்து அதிகம் கொண்டவை. சிவப்பு ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆகியவை உடலில் கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்துகிறது என்கிறது மருத்துவ ஆய்வு அதுமட்டுமில்லாமல் இவைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளது உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முகக்கவசம் அணிந்தால் வாய் துர்நாற்றம் அடிக்கிறது

பட்டாணி, பீன்ஸ், பச்சைப்பயிறு, போன்ற பருப்பு வகைகளில் புரதச் சத்து நிறைந்துள்ளது. இதயத்தை பாதிக்கும் இரத்த கொதிப்பு, இரத்த கொழுப்பு கட்டிகள், ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை இந்த பருப்பு வகைகள்.

எப்பொழுதும் சரியான உணவு முறையுடன் மருத்துவரின் ஆலோசனையும் தேவை, இன்றைய காலகட்டங்களில் குறைந்தது 3 வருடத்திற்கு ஒருமுறை அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறை 35 வயதைக் கடந்தால் முழு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

10 best foods to help increase blood flow

அது மட்டுமில்லாமல் காலை அல்லது இரவு வேளைகளில் நேரம் கிடைக்கும் பொழுது நடைபயிற்சி செய்யுங்கள், உடல் முழுவதும் வேர்வை வருமாறு இது மட்டுமே உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Leave a Comment