Best 10 Tips for Curing Nervousness in tamil
நரம்புத் தளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாட்டு வைத்தியம் என்ன..!
நம் உடல் நலனை பாதுகாப்பதில் கீரைகளுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது கீரைகள் பல்வேறு நோய்களை உடலில் வளரவிடாமல் தடுக்கிறது.
கீரை பல நோய்களை குணப்படுத்துகிறது, பலருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் நரம்பு தளர்ச்சி பொன்னாங்கண்ணிக்கீரை மிகச்சிறந்த மருந்தாகும்.
கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி விரைவில் குணமடையும், நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும் பல வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நரம்பு தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு
நெல்லிக்கனிகளை தினமும் சாப்பிடும்போது நரம்புத் தளர்ச்சி தானாகவே குணமாகிவிடும்.
2 அல்லது 3 வெற்றிலைகளை வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் செரிமான பிரச்சனைகள் சரியாகும், நன்கு பசி எடுக்கும் மேலும் உடல் நரம்புகளை வலுப்படுத்தும்.
உடலை வலுப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது, முருங்கைக்கீரையுடன், முருங்கைப் பூவை சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் நரம்புகள் வலுவடையும்.
பேரிச்சை பழத்துடன் பால் கலந்து குடித்தால் உடல் நன்கு வலுப்பெறும் மேலும் நரம்புகளும், எலும்புகளும் வலுவடையும்.
மஞ்சளில் உள்ள ஆன்டி-செப்டிக் எனும் ஊட்டச் சத்து உடலுக்கு வலிமை தரும் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி கட்டுப்படுத்தும், வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும் மற்றும் உடல் சூடும் குறையும்.
வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் வதக்கி சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.
தினமும் குறைந்தது 5 அத்திப்பழத்தை சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமடையும்.
Best 10 Tips for Curing Nervousness in tamil சுக்கு, மிளகு, திப்பிலி, சம அளவு எடுத்துப் பொடி செய்து தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி முற்றிலும் குணமாகும்.
இலவங்கப்பட்டையை தேனில் கலந்து குடித்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடைந்து விடும்.
தினமும் காலை மற்றும் இரவு வேளையில் சாதிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
இன்றைய காலகட்டத்தில் மனித இனத்திற்கு மிகப்பெரிய தீராத தலைவலியாக இருப்பது தூக்கமின்மை பிரச்சினை நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் சரியாக தூங்கினால் உங்கள் உடம்பில் நல்ல ஆரோக்கியமாக மேம்படும்.