Best 10 tips get well sleeping in tamil
ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம்.
நல்ல தூக்கம் உங்களை நன்றாக உணர செய்யும் மற்றும் உங்கள் உடலையும் மூளையும் சரியாக செயல்பட வைக்கும்.
சில நபர்களுக்கு தூங்குவதில் என்ற பிரச்சினை இருக்காது இருப்பினும் சில நபர்கள் இரவு முழுவதும் சரியாக தூங்குவதற்கு கடுமையாக சிரமப்படுகிறார்கள்.
கற்றல், நினைவாற்றல், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் பல்வேறு உயிரியல் செயல்பாடு காரணமாக, உங்கள் உடல் மற்றும் மூளையின் பல பாகங்களில் மோசமான தூக்கம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
குறைவான வெப்பநிலை
நீங்கள் தூங்கும் போது உங்கள் உடலின் வெப்பநிலை மாறுகிறது அதாவது உங்கள் உடல் வெப்பநிலை குளிர்ச்சி அடைகிறது மற்றும் நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உங்கள் உடல் வெப்பம் அடைய தொடங்குகிறது.
நீங்கள் தூங்கும் அறை மிகவும் சூடாக இருந்தால் நீங்கள் தூங்குவதற்கு கடினமாக இருக்கலாம் எனவே தூங்கும் அறையின் வெப்பநிலையை நீங்கள் கட்டாயம் பேணிக்காக்க வேண்டும்.
இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலின் வெப்ப நிலையை மாற்ற உதவும் இதனால் உங்களுக்கு சீக்கிரமாக தூக்கம் வர ஆரம்பிக்கும்.
சுவாச முறைகளைப் பயன்படுத்தலாம்
இரவு நேரங்களில் உங்களுக்கு அதிகமான மன அழுத்தம்,பதட்டம், கோபம்,எரிச்சல், போன்றவை இருந்தால் நீங்கள் சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இதன் மூலம் உங்களுடைய ரத்த ஓட்டம் சீராகவும் உடல் குளிர்ச்சியடையும்.
குறிப்பாக இரவு நேரங்களில் நீங்கள் அதிகமாக எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஆழமாக சிந்திக்க கூடாது.
இதற்கு நீங்கள் மூச்சுப் பயிற்சி செய்தால் போதும்
சரியான நேரத்தை எப்போதும் பின்பற்றுங்கள்
மனித உடலில் சர்க்கடியான் ரிதம் எனப்படும் அதன் சொந்த ஒழுங்குமுறை உள் கடிகாரம் அமைப்பு உள்ளது இந்த கடிகாரம் உங்கள் உடல் பகலில் விழிப்புடன் இருப்பதை குறிக்கிறது.
ஆனால் இரவில் உடலை தூங்குவதற்கு செய்திகளை அனுப்புகிறது ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுந்ததும் படுக்கைக்குச் செல்வதும் உங்கள் கடிகாரம் வழக்கமான அட்டவணையை வைத்திருக்க உதவும்.
இந்த அட்டவணையை உங்கள் உடல் சரி செய்தவுடன் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குவது விழிப்பது எளிதாக இருக்கும்.
ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதும் மிக முக்கியம் இது வயது வந்தவருக்கு நல்லதாக இருக்கும்.
தூங்க செல்லும் முன்பு குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு முன்பு முழுவதும் ஓய்வெடுங்கள் எதையும் பற்றி அதிகமாக சிந்திக்காதீர்கள் அமைதியாக தனிமையில் இருங்கள்.
இருள் சூழ்ந்த அறை தேவை
இரவில் தூங்குவதற்கு உங்களுடைய அறை முழுவதும் ஒளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் உடம்பில் இருக்கும் ஒழுங்குமுறை கடிகாரம் சரியாக செயல்பட வேண்டும்.
உங்கள் உடலில் உள்ள உள் கடிகாரத்தை ஒளி பாதிக்கலாம் இது தூக்கத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒழுங்கற்ற ஒளி வெளிப்பாடு சர்க்கடியான்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் இதனால் தூங்குவது மற்றும் விழித்திருப்பது கடினமாகிறது.
இருள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை வெளிப்படுத்துகிறது, நாள் முழுவதும் உங்கள் உடலை சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளி தீண்டுவதால் பகலில் உங்களால் அதிக நேரம் உறங்க முடிவதில்லை.
அதனால் தூங்க செல்லும் முன் உங்கள் அறையை இருட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.
யோகா-தியானம் போன்றவற்றை முயற்சி செய்யுங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் பகல் முழுவதும் கடுமையான மன அழுத்தம் அனைத்து நபர்களுக்கும் ஏற்படுகிறது இதனால் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
உடம்பில் தேவையில்லாத ஹார்மோன்கள் சுரக்கிறது இரவில் தூங்குவதற்கு முன்பு யோகா தியானம் போன்றவற்றை நீங்கள் செய்வதால் உடல் அமைதி அடைகிறது.
மனம் அமைதி அடைகிறது உடல் குளிர்ச்சி அடைகிறது உங்கள் உடலில் இருக்கும் மன அழுத்தம் பதற்றம் போன்றவை யோகா தியானம் செய்வதன் மூலம் வெளியேறுகிறது.
பகலில் தூங்குவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்
இரவில் மோசமான தூக்க பிரச்சினை காரணமாக பல நபர்கள் பகலில் தூங்குவார்கள் இதனால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் உடலில் ஏற்படும்.
இரவில் தூங்குவது மட்டுமே சரியான ஆரோக்கியமாக இருக்கும் பகலில் நீங்கள் 10 நிமிடத்திற்கு மேல் தூங்கக் கூடாது முடிந்தவரை பகலில் தூங்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இரவில் உங்களுடைய உணவு பழக்கம் என்ன
அதிகமான கார்ப் உணவுகள் உங்கள் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்.
அதிகமான கார்போஹைட்ரேட் உணவுகள் உங்களை வேகமாக தூங்க வைக்கும் என்றாலும், அது நிம்மதியான தூக்கமாக இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முடிந்தவரை இரவில் பால், தயிர், மோர், பழச்சாறு, காய்கறிகள், கீரை வகைகள், கொட்டை வகைகள், போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
வறுத்த கோழிக்கறி,மாட்டிறைச்சி,பதப்படுத்தப்பட்ட உணவுகளை, முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
மெல்லிய இசையை கேளுங்கள்
Best 10 tips get well sleeping in tamil இரவில் உங்களுக்கு தூக்கம் சரியாக வரவில்லை என்றால் மெல்லிய இசையில் உங்களுக்கு பிடித்த இசையை கேட்கலாம் அல்லது பாடல்களை ஒலிக்க விடலாம்.
இதை தொடர்ந்து சிறிது நேரம் செய்து வந்தால் உங்களுக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பகலில் உடற்பயிற்சி செய்யுங்கள்
Best 10 tips get well sleeping in tamil உடலுக்கு வேலை பளு ஆரோக்கியமான தூக்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது, ஓடுவது, உடல் சம்பந்தமான வேலை செய்வது, விவசாய வேலை செய்வது, போன்ற காரணங்களால் மன அழுத்த ஹார்மோன்கள் சுரப்பது உடலில் குறைகிறது.
Best 10 tips get well sleeping in tamil இதனால் தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவே நீங்கள் பகலில் குறைந்தது ஒரு மணி நேரம் நடைபயிற்சி அல்லது உடல் சம்பந்தமான ஏதோ ஒரு வேலையை செய்யுங்கள்.
புத்தகம் படிக்கலாம்
Best 10 tips get well sleeping in tamil தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைப் படிக்கத் தொடங்கலாம் இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.
உடல் குளிர்ச்சியடையும் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் இரவில் உங்களுக்கு தானாக தூக்கம் வந்துவிடும்.
குறிப்பாக 80 சதவீத அளவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.