Best 3 Herbal plants export details in tamil
மூலிகை செடிகள் ஏற்றுமதியில் அதிக லாபத்தை பெற முடியும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
இயற்கை விவசாயத்தில் மூன்று மூலிகை செடிகளை எப்படி பயிரிடுவது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காண்போம்.
மேலும் இந்த மூலிகை பொருட்களை சாகுபடி செய்து ஏற்றுமதியில் அதிக லாபம் பெற முடியும்.
குறிப்பாக அதிக தண்ணீர் தேவைப்படாது இந்த மூலிகை செடிகளுக்கு, அதிக வேலையாட்கள் தேவையில்லை, ஒரு நபர் இருந்தால் போதும்.
மேலும் அனைத்து பருவ காலத்திலும் செழிப்பாக வளர கூடிய பயிர்களாக இது இருக்கிறது அதிக களை எடுக்கும் பிரச்சனைகளும் இந்த மூலிகை சாகுபடியில் இருக்காது.
அதாவது மருதாணி, அடதொடை, மற்றும் தூதுவளை ஆகியவற்றை எப்படி பயிரிடுவது என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மருதாணி சாகுபடி செய்வது எப்படி
மருதாணியில் இரண்டு இரகங்கள் இருக்கிறது முள்ளிருக்கும் மருதாணி மற்றும் முள்ளில்லாத மருதாணி.
முள்ளில்லாத மருதாணி செடி சாகுபடிக்கு ஏற்ற இரகமாக தமிழ்நாட்டில் இருக்கிறது.
அனைத்து பருவ காலத்திலும் மற்றும் அனைத்து நிலங்களிலும் நன்றாக இந்த மருதாணி செடியை பயிரிடலாம்.
விதை அல்லது போத்து வைத்து செடிகளை நடவு செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 1200 போத்துக்கள் வரை தேவைப்படும்.
2 அடிக்கு 2 அடி இடைவெளியில் போத்துகளை கட்டாயம் நடவேண்டும்.
நீர் நிர்வாகம்
இது வறட்சிக் காலத்திலும் நன்கு வளரக்கூடிய பயிர் என்பதால் அதிக தண்ணீர் இதற்கு தேவைப்படாது.
இருப்பினும் நடவு செய்த காலத்தில் இருந்து செடிகள் நன்கு வளரும் வரை தினமும் ஒரு முறையாவது கட்டாயம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
செடி நன்கு வளர்ந்த பிறகு வாரத்தில் ஒருமுறை மட்டுமே தண்ணீர் தெளித்தால் போதும்.
இதற்கு தேவையான உரங்கள்
இதற்கு இயற்கை உரமான மாட்டு சாணம்,ஆட்டுச் சாணம், கோழி சாணம், மற்றும் சமையலறை கழிவுகள், அழுகிய பழங்கள், காய்கறிகள்,ஆகியவை உரமாக பயன்படுத்தினால் போதும் பயிர் நன்றாக செழித்து வளரும்.
பயிர் பாதுகாப்பு
ஆறு மாதத்திற்கு ஒருமுறை களை எடுத்தால் போதும்
நோய் தாக்குதல் மற்றும் பூச்சித்தாக்குதல் இந்தப் பயிரில் எப்போதும் ஏற்படாது.
நன்கு வளர்ந்து வந்த மருதாணி இலைகளை அறுவடை செய்யலாம் சந்தையில் மருதாணி கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆடாதோடை மற்றும் தூதுவளை பயிரிடும் முறை
தூதுவளை மற்றும் ஆடாதோடை ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பயிராக இருக்கிறது.
குறிப்பாக இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது.
இந்த பயிர்கள் சாகுபடி பொருத்தவரை அனைத்து பருவத்திலும் மற்றும் அனைத்து நிலங்களிலும் எளிதாக சாகுபடி செய்யக்கூடிய பயிராக இருக்கிறது.
போத்து மூலம் மட்டுமே இப்போது தமிழ்நாட்டில் இது நடவு செய்யப்படுகிறது.
2 அடிக்கு 2 அடி இடைவெளியில் போத்துகளை நடவு செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 1400 பூத்துகள் சாகுபடி தேவைப்படும்.
மேற்கூறிய இயற்கை உரங்கள் இதற்கு போதுமானதாக இருக்கிறது.
நடவுக்கு பின் ஒருமுறை உயிர்த் தண்ணீர் விடவேண்டும், பின்பு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதும் இந்த பயிர்களுக்கு.
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்
சந்தை குறிப்பு
மூலிகை ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவு மூலிகை செடிகளை ஏற்றுமதி இப்பொழுது செய்கிறார்கள்.
5 best health benefits list in mushroom
எனவே ஏற்றுமதிக்கு எப்பொழுதும் அதிக அளவு தேவை இருப்பதாலும் மற்றும் சித்த மருத்துவத்திற்கு அதிக அளவு இது பயனுள்ளதாக இருப்பதாலும் மூலிகை செடி சாகுபடி செய்தால் கட்டாயம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பது உறுதி.