Best 3 symptoms of liver disease and treatment

கல்லீரல்,சிதைவு,நோய்கள்,சுருக்கம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்(Best 3 symptoms of liver disease and treatment)

கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது, அவற்றில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது கல்லீரல் சுருக்கம் தான். அது எப்படி ஏற்படுகிறது என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கல்லீரல் நோய்கள் அதிகமாக ஏற்படுவதற்கு முக்கியமாக இருப்பது மது அருந்துவது, உணவுகள் போன்ற வேறு பல காரணங்களாலும் கல்லீரல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கல்லீரல் நோய்கள் ஏன் ஏற்படுகிறது

பொதுவாக கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு இப்பொழுது அடிப்படையாக இருப்பது  ஆல்கஹால் தான். அதனை அடுத்து ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாகவும் கல்லீரல் நோய்கள் ஏற்படுகிறது.

சாப்பிடுகின்ற உணவில் உள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், மெக்னீசியம், ஆகியவை நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொடுக்கிறது.

நம்முடைய உடலுக்கு தேவையான சில முக்கியமான புரதங்களை உற்பத்தி செய்து கல்லீரல் அனுப்புகிறது, அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவக்கூடிய ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி இவை கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலை பலவீனப்படுத்தி சில வருடங்களில் இதனை சேதப்படுத்துகிறது.

இதன் ஒரு உருவம் தான் கல்லீரல் சுருக்கம் ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் இதனை நிச்சயம் கண்டறிய முடிவதில்லை ஆனால் தற்போது ஹெபடைடிஸ் தடுப்பூசி இருப்பதால் ஓரளவு இதனை கட்டுப்படுத்தலாம்.

Best 3 symptoms of liver disease and treatment

இது எதனால் ஏற்படுகிறது

பொதுவாக உடலில் ஆல்கஹாலை செரிமானம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது, அதற்கு கல்லீரல் ஆல்கஹால் டிஹைட்ரோகீனஸ் என்னும் சில குறிப்பிட்ட என்சைம்கள் மூலம் செரிமானம் அடைய செய்கிறது.

அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில வகை வேதிப்பொருட்கள் கல்லீரல் செயல்பாட்டை குறைக்கிறது.

தொடர்ச்சியாக கல்லீரல் செயல் திறன் குறைய ஆரம்பிக்கும் பொழுது கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

உலக அளவில் கல்லீரல் நோய்களால் உயிரிழப்பவர்களின் 90% பேர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

Best 3 symptoms of liver disease and treatment

ஹெபடைட்டிஸ்-சி

இந்த ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் காரணமாகவும் கல்லீரல் பாதிப்படைகிறது, இதற்கு தற்போது தடுப்பூசி கிடையாது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் என்ற நிலை இருந்தது, சமீபத்தில் தான் இதற்கான சிகிச்சைகளை மருத்துவத்துறை அறிமுகம் செய்துள்ளது அவற்றின் மூலம் இந்த ஹெபடைட்டிஸ்-சி பிரச்சினையை இப்பொழுது சரி செய்யலாம்.

ஆல்கஹால் எடுக்காமல் இருக்கும் நபர்களுக்கு

ஆல்கஹால் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் சில நபர்களுக்கு கூட சில நேரங்களில் அதிக கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து விடுகிறது, உதாரணமாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அதிக உடல் எடை காரணமாக அவதிப்படுபவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேரும், 20- 30 வருடங்கள் கழித்து கல்லீரல் சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதனால்.

இதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கவழக்கம் தான், ஒருவேளை மது எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் நபர்கள் அதிக அளவில் குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளலாம், இதனால் சர்க்கரை மற்றும் நொறுக்குத் தீனிகளில் உள்ள வேதிப் பொருட்கள் அதிகளவில் கல்லீரலில் கொழுப்புகளாக படிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதனை எப்படி தடுப்பது

இதற்கு மதுப்பழக்கம் முதன்மையாக இருக்கிறது கல்லீரல் உடலில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான உள்ளுறுப்பு ஏனென்றால் கல்லீரலில் உள்ள தேவையற்ற கழிவுகளை கல்லீரலே சுத்தம் செய்து கொள்ளக் கூடியது.

அது மட்டுமில்லாமல் 70% கல்லீரல் பாதிப்பு அடைந்தால் கூட அது தொடர்ந்து தன்னுடைய பணியை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கும் அத்தகைய சிறப்புமிக்க உறுப்பை நிச்சயம் அதிகமாக பாதுகாக்க வேண்டும்.

Click here to view YouTube channel

பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனை அல்ட்ராசானிக் பரிசோதனையின் மூலம் மட்டுமே கல்லீரலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டறிய முடியும் அப்படி பரிசோதனை செய்யும் பொழுது ஃபைப்ரோஸிஸ் பிரச்சினை இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும்.

உடனே மருத்துவரை அணுகி கொள்ளுங்கள் ஏனெனில் இந்த ஃபைப்ரோஸிஸ் நிலைமைதான் இதற்கான ஆரம்பகட்ட நிலை என்று சொல்லப்படுகிறது.

How to get rid of wastes in the body 5 amazing

இந்த ஃபைப்ரோஸிஸ் நிலை வந்த உடனே கல்லீரல் சுருக்கம் நோய்க்கான சில அறிகுறிகள் உடலில் தோன்ற ஆரம்பிக்கும், சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்று வலி, போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

முன்பெல்லாம் கல்லீரல் நோய்களை கண்டறிய பயாப்சி என்னும் சோதனை மேற்கொள்ளப்படும் இப்பொழுது அதிநவீன சோதனைகள் வந்துவிட்டது.

 

Leave a Comment