Best 4 foods for Hair Growth in tamil

அழகான பளபளப்பான கூந்தலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் (Best 4 foods for Hair Growth in tamil)

ஆண் பெண் இருபாலரும் தற்போது இருக்கும் காலகட்டத்தில் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் கூந்தல் பிரச்சனை முதன்மையாக உள்ளது ஏனென்றால் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் கூந்தலுக்கு சென்று சேர வேண்டிய சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.

திரைப்படம் அல்லது விளம்பரங்களில் வரும் அழகான கூந்தல் போன்று பெறவேண்டும் என்று அனைவரும்  ஆசைப்படுவோம் அதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மற்றும் பல்வேறு ஷாம்பு, ஆயில்கள் பயன்படுத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் வெறுப்படைந்து இருப்போம்

ஆனால் சரியான ஊட்டச்சத்துக்கள் மூலம் மட்டுமே நம்முடைய கூந்தலை சரியான அளவில் அழகாக பராமரிக்க முடியும்.

நம்முடைய உடல் இயங்குவதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் போன்ற கூந்தல் அழகாக வளர்வதற்கு ஊட்டச்சத்துகளும் தேவைப்படுகிறது அதை நாம் உண்ணும் உணவிலிருந்து எடுத்துக் கொண்டால் நமக்கு பணமும் மிச்சமாகும் மேலும் ஆரோக்கியமான உடம்பு மற்றும் கூந்தல் நமக்கு கிடைக்கும்.

Best 5 agriculture business ideas Best 5 agriculture business ideas

அவசியமாகத் தேவைப்படும் வைட்டமின் சி.

Best 4 foods for Hair Growth in tamil

நமது முடியில் உள்ள கொலஜனை வலிமையாக்க வைட்டமின் சி அத்தியாவசியமாக தேவைப்படுகிறது வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயை தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் ஒரு நெல்லிக்காயில் குறைந்தது 600 முதல் 700 வரை வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது.

வைட்டமின் சி அடங்கியுள்ள உணவுகள் நெல்லிக்காய், ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம், மற்றும் பச்சை இலைக் காய்கறிகள். மேலும் வைட்டமின் சி நமது உடலின் இரும்புச்சத்தை  உறிஞ்சவும் உதவுகிறது இதனால் இவை கூந்தல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டசத்தாக அமைகிறது.

நம்முடைய தலைக்கு போதுமான ஈரப்பதம் வேண்டும்.

Best 4 foods for Hair Growth in tamil

கூந்தல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது இதற்கு வைட்டமின் ஈ சரியான அளவில் தேவைப்படும் இதனால் பளபளப்பான கூந்தல் மற்றும் உதிர்வை தடுக்கிறது வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ  அதிகம் உள்ள உணவுகள்.

பருப்பு வகைகளில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது பாதாம், பருப்பு, வேர்க்கடலை, கோதுமை, சூரியகாந்தி விதைகள்,  இதுபோல் உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டால்  முடி உதிர்வு பிரச்சினை குறைய ஆரம்பிக்கும்.

கூந்தலுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் தேவை.

Best 4 foods for Hair Growth in tamil

இரும்புச்சத்து உங்கள் தலைக்கும்  கூந்தலுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது இதனால் கூந்தலுக்கும்  தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது மேலும் கூந்தலை  புத்துயிர் பெறச் செய்கிறது.

அசைவ உணவுகளில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது ஆட்டு இறைச்சி மீன் கோழிக்கறி இவற்றில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது ஆனால் இரும்புச்சத்தை உறிஞ்சிக் கொள்வதற்கு வைட்டமின் சி உடலுக்கு அவசியமாக தேவைப்படுகிறது இதனால் வைட்டமின்-சி உணவுகளையும்  எடுத்துக் கொள்ளுங்கள்.

கூந்தல் வளர்ச்சியைத் தூண்ட வைட்டமின் பி.

வைட்டமின் பி   ல்  பயோட்டின் என்ற சத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டி புதிய கூந்தல்  வளரச் செய்கிறது.

நாம் உண்ணும் உணவில் விட்டமின் பி சத்துக்களை அதிகளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதிகமாக கூந்தல் பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திப்போம் மேலும் உங்களுக்கு அடிக்கடி கூந்தல் சார்ந்த பிரச்சனைகள் இருந்து கொண்டே இருந்தால் அதற்கு வைட்டமின் பி குறைபாடு ஒரு காரணமாக அமையலாம்.

மருத்துவரின் சரியான ஆலோசனையில் பயோட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது முட்டை, பாதாம், பருப்பு, பால் போன்றவைகளில் அதிகளவில் பயோட்டின் உள்ளது இவைகளை உணவில் சரியான முறையில் எடுத்துக் கொண்டால் முடி உதிர்வு பிரச்சனையை தவிர்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் ட்விட்டர் பக்கத்தை   லைக் செய்யுங்கள்  Like our Twitter page

கூந்தல் உடையாமல் தடுப்பதற்கு வைட்டமின் ஏ வேண்டும்.

Best 4 foods for Hair Growth in tamil

நமது உடலுக்கு சரியான தனிமங்கள் இருந்தாள் ஆரோக்கியமாக இருப்போம் அதுபோலவே கூந்தலுக்கு எண்ணெய் சத்து சரியாக அமைய வேண்டும் அப்பொழுதுதான் கூந்தல் வரண்டு போய் உடையாமல் தடுக்க முடியும் இதற்கு வைட்டமின் ஏ  மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

கேரட், பச்சை இலை, காய்கறிகள், பால் பொருட்கள், மாம்பழம்,சர்க்கரைவள்ளி கிழங்கு, சோயா பீன்ஸ், கடல் உணவுகள், போன்றவற்றில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளது. உடல் பருமனின் ஆச்சரியமான விளைவுகள்.

இந்த உணவுகளை தொடர்ந்து சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் மேலும் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

Join us Our Telegram group  8 side effects of obesity in Tamil

Leave a Comment