Best 4 home remedies liver fatty to dissolve
கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கும் 4 எளிய வழிமுறைகள்..!
தற்போது இருக்கும் வாழ்க்கை முறையால் நாம் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் முக்கியமானது ஒன்று கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வது.
இந்த கல்லீரலில் சேரும் கொழுப்பிற்கு உடனடியான தீர்வு என்ன, இது உடலுக்கு மிகவும் ஆபத்தானதா,இதற்கு எளிய வீட்டு வைத்தியம் பிரச்சனையை தீர்க்குமா.
கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை குறிப்பாக அதிக கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
கல்லீரல் உயிரணுக்களின் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால், பல பிரச்சனைகள் ஏற்படும் எதிர்காலத்தில், இது பலவகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
கல்லீரல் கொழுப்பு சேர்ந்தால் உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.
இருப்பினும் கல்லீரலில் சேர்ந்து உள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக குறைக்க முடியும் குணப்படுத்த முடியும்.
இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள் கல்லீரலின் வேலை சுத்திகரிப்பு செய்வது.
இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உடற்பயிற்சி செய்வது
உடற்பயிற்சி மூலமும் கல்லீரலின் கொழுப்பை குறைக்க முடியும் இதை செய்ய உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
திடீரென்று அதிக உடற்பயிற்சியை தொடங்க கூடாது அதுவும் பாதகமான விளைவுகளை உடலில் ஏற்படும் முதலில் லேசான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பிறகு படிப்படியாக உடற்பயிற்சி வேகத்தை அதிகரிக்கவும்,வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றுவதால் அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் கல்லீரலில் நிலையை குறித்து பரிசோதிப்பது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சள் பல நோய்களுக்கு நன்மை தரும் பல பண்புகளையும் கொண்டுள்ளது, மஞ்சள் சீன மற்றும் ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பை குணப்படுத்த அதிக அளவில் உதவுகிறது.
மஞ்சள் இதய நோய் மற்றும் கீல்வாதத்திலும் பயன்படுத்தப்படுகிறது மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், கல்லீரல் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.
பால் திஸ்டில்
Best 4 home remedies liver fatty பால் திஸ்டில் ஊதா நிற பூக்கள் கொண்ட ஒரு வகையான தாவரமாகும், இது மருந்து தயாரிப்பதில் முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது.
பால் திஸ்டில் கல்லீரல் மற்றும் பித்தப்பை சிகிச்சையில் முக்கியமானதாக இருக்கிறது.
சில பொதுவான நிலைகளில் பால் திஸ்டில் கல்லீரல் மற்றும் ஹைபட்டிஸ் கற்கள் மற்றும் சிரோசிஸ் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களை தவிர்ப்பதன் மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் நிகழ்கிறது..!
கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பால் திஸ்டில் கல்லீரலை ஆபத்தான நிலையில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் இது சேதமடைந்த கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்குகிறது, இது கொழுப்பு கல்லீரலை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது.
லிப்போட்ரோபிக்
Best 4 home remedies liver fatty லிப்போட்ரோபிக் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, முட்டையின் மஞ்சள் கரு, பீன்ஸ், முட்டைகோஸ், தயிர், போன்றவற்றில் இவை அதிக அளவில் நிறைந்துள்ளது.
அவை கல்லீரலில் இருந்து கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது கல்லீரலில் கொழுப்பு சேரும் அபாயம் குறைகிறது.