இந்த திட்டங்கள் மூலம் மாதந்தோறும் குறைந்தது 3000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்(Best 4 National Pension Scheme in Tamil)
மத்திய அரசு 60 வயது மேற்பட்டவர்களை பாதுகாக்க இந்தியாவில் பல்வேறு சிறந்த நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மற்றும் காலாண்டுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை இந்த திட்டத்திற்கான வட்டி விகிதங்களை ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது.
இந்தியாவில் விவசாயத்துறை பல்வேறு மோசமான இன்னல் சிக்கல்களை சந்திக்கிறது குறிப்பாக விவசாயத்தில் ஏற்படும் பெரிய நஷ்டங்கள் மூலம் தினமும் குறைந்தது ஒரு விவசாயி தற்கொலை என்ற செய்தி தொலைக்காட்சிகளில் வருவதை கேட்டிருப்போம்.
மத்திய அரசு செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது இந்த திட்டங்கள் பற்றி மற்றும் இதில் உள்ள நன்மைகளை பற்றி அதிக அளவில் மக்களுக்கு சென்று அடைவதில்லை.
விவசாயிகளுக்கு மற்றும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு பயன் தரும் வகையில் மாதம்தோறும் சிறிய அளவில் முதலீடு செய்தால் 60 வயதிற்கு மேல் உங்களுக்கு குறைந்தது 3 ஆயிரம் ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்குகிறது.
இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் காணலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் யோஜனா (National Pension Scheme)
சிறு தொழில் செய்யும் வணிகர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாத நபர்களுக்கு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்று சொல்லலாம் ஏனென்றால் இந்தத் திட்டத்தில் உள்ள நன்மைகள் முதியவரின் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆண்டுக்கு வருவாய் 1.5 கோடி அல்லது அதற்கு குறைவாக உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
EPFO / ESIC/ NPS/ PM-SYM உறுப்பினராக இருக்கக் கூடாது. நீங்கள் மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 55 முதல் 200 வரை செலுத்த வேண்டும் இதை நீங்கள் உங்கள் வயது 60 வரை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
குறைந்தபட்சம் ரூபாய் 3 ஆயிரம் மாதம்தோறும் உங்களுக்கு ஓய்வுஊதிய பணமாக வழங்கப்படும்.
பிரதான் மந்திரி கிசான் மன் தன் யோஜனா (Prime Minister Kisan Mann’s plan)
இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது சிறு குறு விவசாயிகள் வைத்திருக்கும் நிலத்தால் பயனடையலாம் மேலும் குடும்பத்தில் உள்ள ஆண் மற்றும் பெண் இருவரும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் அடுத்து 40 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 55 செலுத்தினால் போதும் அல்லது உங்கள் வயது 30 என்றால் நீங்கள் மாதம்தோறும் 110 செலுத்தினால் போதும் அல்லது உங்கள் வயது 40 என்றால் மாதம்தோறும் 200 ரூபாய் செலுத்தினால் போதும் 60 வயது வரை.
உங்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 3 ஆயிரம் இந்த திட்டத்தில் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் திட்டம் (Pradhan Mantri Shram Yogi Maan Dhan Yojana)
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது இதில் இணையும் நபர்கள் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணைய முடியும். மேலும் மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 55 முதல் அதிகபட்சம் 200 வரை அவர்கள் 60 வயதை எட்டும் வரை செலுத்த வேண்டும்.
இதில் இணைந்த சந்தாதாரர் ஒருவேளை இறந்துவிட்டால் அவருடைய துணைவியாருக்கு ஓய்வூதியத்தில் 50 சதவீத பணம் மாதம்தோறும் வழங்கப்படும்.
Top 10 Health benefits of drinking water
அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Scheme)
நீங்கள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் உங்கள் அருகில் இருக்கும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் இதற்கான கணக்கைத் தொடங்கலாம்.
சிறந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டம் 2020.!!!
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். நீங்கள் மாதம்தோறும் ரூபாய் 210 அடுத்த 40 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தால் 60 வயதுக்கு பிறகு குறைந்தபட்சமாக ரூபாய் 5000 ஓய்வூதியமாக வழங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் அதிக பயன் தரும்.