Best 4 tips how to reduce belly fat in tamil
அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க இதை செய்து பாருங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய உடலை அழகாக காண்பிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
பொதுவாக அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
ஏனென்றால் இந்த இடத்தில் அதிகமான சதைகள் சேர்ந்து விடுவதால் உடலின் அழகை கெடுத்துவிடுகிறது.
இதற்கு பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் இருந்தாலும்,இயற்கை முறையில் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கான வழிகளை பின்பற்றுங்கள்.
ஏனென்றால் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடைக்காது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
இந்த கட்டுரையில் அடி வயிற்றில் உள்ள தேவையற்ற சதையை எப்படி குறைப்பது என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.
பொதுவாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தான் இந்த தொப்பை பிரச்சனை இருக்கும், இந்த தொப்பையை குறைக்க மிகவும் எளிய மருந்துகளை இப்பொழுது பார்க்கலாம்.
சுரைக்காய் சூப் பயன்படுத்தலாம்
அடி வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் சுரக்காய் நாட்டு சுரக்காய் இருந்தால் மிகவும் நல்லது.
சுரைக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு வேகவைத்து பிறகு அதை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதில் சிறிதளவு உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் பலன் அதிகமாக கிடைக்கும்.
கரு சீரகம் பயன்கள்
அடி வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க கருசீரகம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
கரு சீரகத்தை டீ போட்டு சாப்பிட்டாலும் உங்கள் அடிவயிற்றில் உள்ள தொப்பை விரைவில் குறையும்.
சீரகத்தை நன்றாக அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள் அதனை 1/4 டீஸ்பூன் எடுத்து 150 மீ.லீ வெண்ணீரில் ஒரு டீ மாதிரி போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால்.
அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுண்டைக்காய் பயன்படுத்தலாம்
Best 4 tips how to reduce belly fat in tamil உங்கள் வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கும் சுண்டைக்காய் அடி வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
ஏனென்றால் சுண்டைக்காய் ஒரு சிறந்த மலநீக்கியாகவும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும்.
இதனால் இந்த சுண்டைக்காய் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால்,அடி வயிற்றில் தொப்பை குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்
Best 4 tips how to reduce belly fat in tamil நெல்லிக்காயின் நன்மைகள் என்பது அனைவராலும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கிறது அடி வயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
நெல்லிக்காயை முழுதாக சாப்பிடாமல் அதனை ஒரு ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால் அடி வயிற்றில் தொப்பை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, இவை அனைத்தையும் நன்றாக அரைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.