உங்கள் அருகில் இருக்கும் ஒரு நபர் உங்களை இப்படி பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்(Best 5 Different Type of Eye Contacts for love)
தமிழ் சினிமாவில் கண்களால் கொல்கிறாள் கண்களால் கவிதை பேசுகிறாள் கண்கள் கைது செய்துவிட்டால் அந்த வசனங்கள் காதலைப் பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் அழகாகவும் தெரிவித்துவிடும்
வார்த்தைகளை விட ஒருவரின் கண்களில் இருந்து வெளிப்படும் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அதிகம் அதுவும் உங்களுக்கு பிடித்த அவர்களிடமிருந்து கண்களால் வரும் செய்திகள் தான் அதிக மதிப்பை ஏற்படுத்துகிறது உங்கள் உறவில்
கண்கள் ஒருபோதும் பொய் சொல்வது கிடையாது மனதில் உள்ளதை கண்கள் எளிதில் வெளிப்படையாக காட்டும் அது உண்மைதான் ஒரு நபருக்காக உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்துவதற்கு சிறந்த வழிகள் கண்கள் மட்டுமே
நீங்கள் உங்களுக்குப் பிடித்த நபரை காதலிக்கிறீர்களா இல்லையா என்பதை அறிய உங்கள் கண் பார்வை போதும் என்று பலர் தெரிவிக்கிறார்கள்
நீங்கள் ஒரு நபரை கவனிக்கும் பொழுது முதல் விஷயங்களில் கண்பார்வைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவே கண் தொடர்பான அனைத்து விவரங்களும் காதலுக்கு முதன்மையாக இருக்கிறது என்று நாம் ஆணித்தரமாகக் கூறலாம்
எனவே இதன் அடிப்படையில் பல்வேறு வகையான கண் தொடர்பான விஷயங்களில் அது உண்மையில் எதை குறிக்கிறது என்பதையும் இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்க்கலாம் உங்களுடைய ஈர்ப்பு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
தெரிந்தும் கண்களை பார்ப்பதில்லை
ஒரு நபர் உங்கள் அருகில் இருந்தும் எப்பொழுதும் உங்கள் கண்களைப் பார்க்காமல் இருப்பதற்கு அவர்கள் உங்கள் மீது அன்பு எனும் ஆர்வத்தை காட்டவில்லை என்று அர்த்தம் கண் தொடர்பான இந்த அறிகுறி அந்த நபர் உங்களை பார்ப்பதற்கும் தவிர்ப்பதற்கும் உணர்வுபூர்வமான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதாகும்
ஒருவேளை உங்கள் காதலன் அல்லது காதலி உங்கள் மீது குறைந்து அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை இது குறிக்கும் எந்த ஒரு காதல் உறவையும் தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்பதை இது தெரிவித்து விடும்
கண் தொடர்புடைய செய்திகளை கண்டுகொள்வதில்லை
நீங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் உங்கள் காதலன் அல்லது காதலி நீங்கள் அவர்களை பார்க்கும் பொழுது அவர்கள் உங்கள் கண் தொடர்புடைய செய்திகளை கண்டுகொள்ளவில்லை என்றாள் உங்கள் திசையில் வேறு ஏதாவது அவர்களின் கண்களை ஈர்த்துக் கொண்டிருக்கலாம்
அவர்கள் உங்களை பார்ப்பதற்கு பதிலாக வேறு பக்கம் திரும்பி அல்லது வேறு எதையாவது பார்த்து கொண்டிருக்கலாம் அவர்கள் உண்மையில் உங்களை மறந்து விட்டார்கள் நீங்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் வேண்டும்மென்று கவனிக்கவில்லை என்பது இதன் அர்த்தமாகும்
மனதிற்குள் காதலை வைத்திருக்கலாம்
உங்களை ஒரு நபர் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள் நீங்கள் எப்பொழுதாவது அந்த நபர்களை பார்க்கும் பொழுது அவர்கள் சட்டென்று விலகி பார்ப்பார்கள் அவர்கள் தங்கள் உணர்வுகளை பற்றி மிகவும் மகிழ்ச்சியாக வெட்கப்படுகிறார்கள்
நீங்கள் தொடர்ந்து அந்த நபரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த நபர் விரைவில் உங்களை விட்டு விலகி பார்ப்பார்கள் இதன் பொருள் என்னவென்றால் அந்த நபர் உங்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார் என்பதாகும்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
உங்கள் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார்
ஒரு நபர் உங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் பொழுது அந்த நபர் நொடி பொழுதில் உங்களை விலகி பார்ப்பார் நீங்கள் அவர்களை ஒரு வேலை பார்க்கும் பொழுது மீண்டும் அந்த நபர் உங்களை பார்த்துக் கொண்டே இருப்பார் இதன் பொருள் அந்த நபர் உங்கள் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார் என்று அர்த்தம் பெரும்பாலும் இது உடல் ரீதியான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பமாக அமையலாம்
MOST READ திருமண உறவுக்குள் எத்தனை வகை நெருக்கம் உள்ளது
உண்மையான அதீத அக்கறை
உலகில் உள்ள அனைத்து மக்களும் கண் தொடர்பான செய்திகளில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் உங்களுக்குப் பிடித்த நபர் அழகிய புன்னகையுடன் அழகான கண் பார்வை உங்கள் மீது செலுத்தும் போது உங்களுடைய உறவு அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்கிறது என்பதாகும் சில சமயங்களில் தீவிரமாய் பார்ப்பது பேசுவதைவிட விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல உங்கள் இருவருடைய கண்பார்வையும் முதன்மையாக அமைகிறது