Best 5 foods improve for memory power

நினைவாற்றலை அதிகரிக்க உதவும் வகையான உணவுகள்(Best 5 foods improve for memory power)

உங்கள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க கீழ்க்கண்ட உணவினை உங்கள் குழந்தைக்கு கொடுங்கள் மீன், வால்நட் போன்றவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது.

இதன் மூலம் உங்களுக்கு மற்றும் உங்கள் குழந்தையின் நினைவாற்றல் மேம்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

உடலில் உள்ள எந்த உறுப்புகளையும் விட அதிக அளவு ஆக்சிஜனை எடுத்துக் கொள்வது மூளைதான்.

பொதுவாக மறதி என்பது வயதான காலத்தில் ஏற்படும் ஒரு பாதிப் ஆகவே கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் மறதி என்பது எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

தேவையான சத்துணவு, தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத போது மூளைக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்து விடுவதால் அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் ஞாபக சக்தியை ஒரு முகக்கவனத்தோடு செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், முதலியவை ஏற்படுகிறது.

Best 5 foods improve for memory power

சில குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் ஆனால் தேர்வில் ஞாபக மறதி காரணமாக சரியாக அவர்களால் செயல் படமுடியாது இதற்கு முக்கிய காரணம் அவர்களின் மூளை செயல்பாடு சரியாக இல்லாமல் இருப்பதுதான்.

எனவே எந்த வயதில் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களின் நினைவாற்றல் திறனை அதிகரிக்க கட்டாயம் அதற்கு தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஞாபக மறதியைப் ஒருவேளை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் காலப்போக்கில் மூளையில் உள்ள பெரும்பாலான செல்கள் அழிந்து ஒரு நிரந்தரமான ஞாபகமறதி நிலை ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே நினைவாற்றலை அதிகரிக்க, முதலில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். அந்தவகையில் மூளை ஆரோக்கியத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் பற்றி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான உணவுகள் மூளையில் ரத்த ஓட்டத்தையும் மற்றும் ஆக்சிஜனையும் அளித்து நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மத்திய தரைக்கடல் டயட் முறைகள் வயதான நபர்களுக்கு கூட நினைவாற்றலை நல்ல கூர்மையாக வைத்திருக்க உதவி செய்யும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Best 5 foods improve for memory power

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும் அதற்கு கொழுப்பு, வெண்ணெய், நெய், முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்புகள் தீங்கானது மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஒரு எளிய வழி உண்டு.

ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால் இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள், போன்றவை நிறைந்துள்ளது.

ஒருவேளை ஞாபக சக்தி குறைவாக இருக்கும் நபர்கள் பின்வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள் பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், அன்னாசி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்துமல்லி, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, பச்சை பட்டாணி, பருப்பு, கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெ, பால், தயிர், அரிசி, கோதுமை, போன்ற உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இரத்தத்தில் புதிய செல்கள் உருவாகவும், மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் இந்த உணவுகள் உதவுகிறது.

மூளை சுறுசுறுப்புக்கு

அரிசி, கோதுமை, கேழ்வரகு, போன்ற உணவு வகைகளுடன் பேரிச்சம்பழம், பட்டாணி, போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இரும்புச் சத்து அதிகமாக கிடைக்கும். கோபம், பதற்றம், போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்ல குறைந்து நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.

முட்டைக்கோஸ், அடர்ந்த பச்சை இலை காய்கறிகள், போன்ற காய்கறிகள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த உதவி செய்யும். கீரைகள் போன்றவற்றை சாலட் செய்து சாப்பிடலாம், காய்கறி சாலட் கீரை போன்றவை மதிய மற்றும் இரவு உணவை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஒமேகா-3 கொழுப்பு உணவுகள்

மூளை ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்பு அமிலங்கள் அவசியம் எனவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.

கடலுணவு, பாசி மற்றும் கொழுப்பு மீன் ,சால்மன் மீன் ,டியூனா, மத்தி மற்றும் ஹெர்ரிங் போன்றவற்றில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA காணப்படுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மீன்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

மீன் எண்ணெய், கடற்பாசி, அல்லது மைக்ரோ ஆல்கர போன்றவை மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. இதிலிருந்து நீங்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA பெற முடியும் இதன் மூலம் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.

வால்நட்ஸ்

வால்நட், பருப்புகள், இதய ஆரோக்கியத்தை, மட்டுமல்ல மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியது. இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, நீங்கள் வறுத்தே அல்லது பச்சையாகவே சாப்பிடலாம்.

What are the Benefits of eating Beef?

வெள்ளைப் பூண்டு

மனதை அமைதிப்படுத்தி தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு, செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல், பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு அதிக பங்கு இருக்கிறது.

Nipah virus symptoms treatment new update 2021

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கிறது, எனவே ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

Leave a Comment