Best 5 foods increase in your immunity
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் சளி காய்ச்சலா மெத்தனம் இருக்கக் கூடாது நிபுணர்கள் விடும் எச்சரிக்கை..!
பொதுவாக குளிர்காலம் என்றாலே எல்லாருக்கும் சளி காய்ச்சல் போன்ற அடிப்படை நோய்கள் ஏற்பட ஆரம்பிக்கும் ஆனால் கடந்த 2 வருடங்களாக குளிர்காலம் வந்தால் எல்லோருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.
கொரோனா வைரஸ் இந்த உலகத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது அன்று முதல் குளிர்காலம் வந்தால் எல்லோருக்கும் பிரச்சனைகளை ஆரம்பித்து விடுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை கவனித்துக் கொள்வது மிக முக்கியம், நீங்கள் பாதுகாப்பக ஆரோக்கியமாக இருக்க சில குளிர்கால உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வருடமும் வைரஸ் பிறழ்வு மாறுபட்டு மக்களை அச்சம் அடைய செய்கிறது, அதுமட்டுமில்லாமல் அதிக அளவில் மக்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துகிறது.
நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க பின்வரும் இந்த உணவு முறைகளை பின்பற்றினால் குளிர்காலம் மற்றும் பருவ காலத்திற்கேற்ப உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது இது ஒரு பருவகால பழமாகும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் இது காய்ச்சல் மற்றும் நோய்களை உடலில் தடுக்கிறது.
தினைகள்
தினையில் நார்ச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது இவை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளன, மேலும் அவை பல ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
மருத்துவ நிபுணர்களின் கூற்றின்படி அவற்றை குளிர்கால உணவில் சேர்த்துக்கொள்வது உடலை மிகவும் வழிப்படுத்தும் உதாரணமாக ராகியை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும் என்கிறார்கள்.
ஏனெனில் அதில் உள்ள அமினோ அமிலம் பசியை குறைக்கும், நார்ச்சத்து நிறைந்த ராகி, செரிமானத்தை மேம்படுத்த உதவும், இது தூக்கமின்மை பதட்டம், மற்றும் மன சூழ்நிலை உங்களுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.
இஞ்சி
இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது இது குளிர் காலத்தில் தொண்டை புண்ணை குணப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது இருதய நோய்கள், புற்றுநோய்கள், செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், ஆகியவற்றின் பெருமளவு குறைத்து விடுகிறது.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை இருதய நோய் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோயை குறைக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரித்து விடுகிறது.
நாட்டு சர்க்கரை
இரும்புச் சத்து நிறைந்த ஆதாரமாக நாட்டுச் சர்க்கரை உள்ளது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தினைப் இணைக்க உதவுகிறது ஆயுஷ் அமைச்சகத்தின் கூற்றின்படி நாட்டுச்சர்க்கரை தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
மாதம்தோறும் பென்ஷன் வேண்டுமா எல்ஐசி ஜீவன்
காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது ஏனெனில் அதிக உடல் வெப்பநிலை நுண்ணுயிர் வளர்ச்சி குறைவாகவே உள்ளது.
common weight loss mistakes to avoid in 2022
இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செலினியம், மற்றும் பொட்டாசியம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது.