Best 5 Foods That Improve Brain Health
காலை உணவில் இந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொண்டால் உங்களுடைய மூளை ஆரோக்கியமாக வேலைசெய்யும்..!
உங்கள் மூளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கவும் மூளையைக் கூர்மையாக்கும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளும் சில குறிப்பிட்ட உணவு வகைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
உணவில் மஞ்சளை கட்டாயம் சேர்க்க வேண்டும்
வைட்டமின்-சி மூளை செல்களை சேதப்படுத்தும் பிரீ-ரேடிக்கல்களை தடுக்கும்
பிராக்கோலி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிவேகமாக இயங்கும் இந்த அறிவியல் உலகத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது இப்பொழுது சற்று கடினமான செயலாக இருக்கிறது.
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உங்களுடைய அனைத்து வேலையையும் சரியாக செய்ய முடியும்.
இதற்கு உங்களுடைய மூளை மற்றும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஏனென்றால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய உங்களுடைய உடலுக்கு கட்டளை கொடுப்பதும் மூளைதான், மூளையையும், மனதையும், நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களுடைய மனதை ஒருமுகப்படுத்த உடற்பயிற்சி, யோகா, போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கிறது.
ஆனால் உங்கள் உணவில் கவனம் செலுத்துவதில் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும், இது மட்டுமே 80% உடலின் செயல்பாடுகளை தீர்மானிக்கும்.
நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உங்களது மூளை பலவீனமாகி விடும்.
ஆனால் சிறந்த உணவு குறிப்புகளை பின்பற்றினால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய தொடங்கும், எனவே காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் யாவை என்று பார்ப்போம்.
காலையில் காப்பி குடிக்கலாம்
காலை உணவில் காபியை நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம் காபியில் நிறைய காஃபின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்து, விழிப்புணர்வை அதிகரிக்க செய்து, சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது.
நாட்டுக்கோழி முட்டை
முட்டையில் புரதச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது இதில் வைட்டமின் பி-6 மற்றும் பி-12 நிறைந்துள்ளது, காலை உணவாக முட்டை சாப்பிடுவது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது முட்டை உண்பதால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
உணவில் மஞ்சளை சேர்க்கலாம்
மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அனைவருக்கும் முழுமையாக தெரியவரும்.
நோய்களை குணப்படுத்துவதில் மட்டுமில்லாமல் மனதையும் கூர்மையாக்கும்.
இது மூளை செல்களை மேம்படுத்தும் மேலும் மஞ்சளை உட்கொள்வதால் நினைவாற்றல் கூடும் இதை உங்கள் காலை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.
ஆரஞ்சு பழம்
Best 5 Foods That Improve Brain Health உங்கள் உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம் நீங்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம், ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது.
இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்கும் சிறப்பு சட்டங்கள் என்ன..!
வைட்டமின் சி என்பது மூளை செல்களை சேதப்படுத்தும் பிரீ-ரேடிக்கல்களை தடுக்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்தாகும்.
பருப்புகள் மற்றும் பாதாம்
Best 5 Foods That Improve Brain Health இதனுடன் கோதுமை, பருப்பு மற்றும் பாதாம் பருப்பு போன்ற மூளையின் ஆற்றலை அதிகரிக்கும்,இந்த பருப்பு வகைகள் மூளையை சேதப்படுத்தும் செல்களை எதிர்க்கும் திறன் கொண்டவை.