உங்கள் நிதி நிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது முதல் 5 யோசனைகள்(Best 5 ideas how to improve financial status).
பணத்தை எப்படி சரியான வழியில் சேமிப்பது மற்றும் பணத்தை உயர்த்துவது எப்படி என்பதைப் பற்றி நமது கல்விமுறையில் அதற்கான ஒரு பாடத்திட்டம் இருக்காது. நமது வாழ்க்கையில் வரும் 80 சதவீத பிரச்சனைகள் பணத்தை சார்ந்ததாக மட்டும் இருக்கும்.
நமது வாழ்க்கையில் நிதி சுதந்திரமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை சந்தோசமாக, சுதந்திரமாக, ஆரோக்கியமாக, வாழ முடியும் ஆனால் இன்றைய கால கட்டங்களில் இருக்கும் 97% மக்கள் நிதி சுதந்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவசர காலங்களில் உங்களுக்கு பணம் கொடுத்து உதவ நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லாமலிருந்தால் நீங்கள் கடன் அட்டை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இது உங்கள் நிதி நிலையை மேலும் அபாய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கடன் அட்டை தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தினால் நீங்கள் அபாயகரமான நீதி நிலையில் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறது என்பதாகும்.
உங்களுக்கு பல குறிக்கோள்கள் இருக்கலாம் புதிய கார் வாங்குவது புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது அல்லது பெரிய அளவில் பணத்தை சேமிப்பது இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி நீங்கள் ஆராய வேண்டும்.
இதுவரை நீங்கள் பணத்தை சேமிக்க கையாண்ட விதம் உங்களுக்கு பெரிய அளவில் உதவி உள்ளதா என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.
இப்பொழுது நீங்கள் எப்படி பணத்தை சேமிக்கலாம் அல்லது இன்னும் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை பற்றி யோசிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் குறைந்தது 10 சதவீத அளவிற்கு பணத்தை சேமியுங்கள் இதனை ஒரு உண்டியலில் வைக்க வேண்டாம் மற்றும் உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைக்க வேண்டாம் ஏனென்றால் இதனால் உங்கள் பணம் வளராது.
நிலையான வைப்பு, மியூச்சுவல் ஃபண்ட், தேசிய சேமிப்பு திட்டம்,( fixed deposit Mutual Fund National Saving Scheme) போன்ற திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவில் பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணம் வளர்வதை நீங்கள் பார்க்கலாம்.
புத்திசாலித்தனமாக இருங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த.
நீங்கள் பணத்திற்கு சம்பளத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தால் மாதம் முடிவதற்குள் நீங்கள் பணத்திற்கு சிரமப்படுவீர்கள்.
இதனால் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை முறைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களுக்கு வரும் பணம் சிறிய தொகை அல்லது பெரிய தொகையாக எது வேண்டுமானாலும் இருக்கலாம் அதனை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுடைய நிதிநிலை அமையும்.
ஒருவேளை திட்டமிடாத செலவுகள் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டால் அதனை சமாளிக்க கூடிய அளவில் உங்களுக்கு பணம் இல்லாமல் இருக்கலாம் இதனை தடுப்பதற்கு நீங்கள் சரியான ஒரு பட்ஜெட்டை அமைக்க வேண்டும்.
உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுடைய பட்ஜெட் இருந்தால் உங்களுடைய பணப்புழக்கத்தை நீங்கள் எளிதாக கட்டுப்படுத்தலாம்.
உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது அது எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை உங்களுடைய பட்ஜெட் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
உங்களுக்கு 3 விதமான செலவுகள் ஏற்படும்.
தொடர்ச்சியான செலவு மற்றும் தொடர்ச்சியற்ற செலவு என இருவகைப்படுத்தலாம்.
அவசர செலவு மற்றும் பிற அவசர செலவு என வகைப்படுத்தலாம்.
ஆடம்பரம் தவிர்க்க கூடியது மற்றும் தவிர்க்க முடியாத ஆடம்பரம் என இரு வகை உண்டு.
இது போன்ற முறைகளில் நீங்கள் பட்ஜெட்டை அமைத்தால் உங்களுக்கு சிறப்பான வழிமுறை கிடைக்கும் பணத்தை சேமிப்பதற்கு.
இதற்கு நீங்கள் அதிக முன்னுரிமை கொடுத்தால் இதனால் உங்களுடைய பணம், ஆரோக்கியம், சந்தோஷம், போன்ற வளங்கள் உயர்வகை உங்கள் கண் முன்பு நீங்கள் பார்க்கலாம்.
தவிர்க்கக்கூடிய செலவுகளை நோக்கி உங்கள் பார்வையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்திய பின்பு பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கான சிறிய தொகையை ஒதுக்கலாம் இதன்மூலம் உங்களை நீங்கள் ஊக்கப்படுத்திக் கொள்ளலாம்.
ஏனென்றால் ஒரு மனிதனுடைய உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு அவனை ஊக்கப்படுத்த வேண்டும் இல்லை என்றால் அவனுடைய குறிக்கோளை அடைய சோர்வாகவே எப்பொழுதும் இருப்பான்.
ஒருவாரத்திற்கு செலவு செய்யாத ஒரு நாளை தேர்வு செய்யுங்கள் இதன் மூலம் மாதத்திற்கு குறைந்தது 4 அல்லது 5 நாட்கள் நீங்கள் செலவு செய்யாமல் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.
உங்களுடைய அனைத்து சொத்துக்களையும் மதிப்பிடுங்கள்.
அசையும் சொத்து, அசையா சொத்து, வருமானம் தரக்கூடிய சொத்து, வருமானம் இழக்கக்கூடிய சொத்து, சந்தை மதிப்பு சொத்து, போன்ற சொத்துக்களின் மதிப்புகளை கணக்கிடுங்கள்.
இதன் மூலம் உங்களுடைய சொத்து மதிப்பு முழுவதும் உங்களுக்கு தெரியவரும்.
நண்பர்களிடம் வாங்கிய கடன், வங்கிகளில் வாங்கிய கடன், அடமான கடன், மாதம் EMI கட்டும் கடன், போன்றவற்றை கணக்கிடுங்கள் உங்களது சொத்து மதிப்பு மற்றும் கடன் மதிப்புகளை ஒப்பிட்டுப் பாருங்கள் ஒருவேளை உங்கள் கடன் மதிப்பு அதிகமாக இருந்தால் நீங்கள் உடனடியாக உங்களுடைய சொத்து மதிப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை தேர்வு செய்யுங்கள்.
முக்கியமாக உங்களிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்புகளை அளவீடுகள் குறைந்த அளவு சொத்து வைத்து இருந்தாலும் அதனுடைய மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் பராமரிப்பு செலவு 10 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் இதுபோல் இருக்கும் சொத்துக்களை தேர்வு செய்து உங்களுடைய வாழ்க்கையில் வாங்குங்கள்.
இப்பொழுது உங்களுக்கு உங்களுடைய சொத்து அல்லது பணத்தை எவ்வளவு செலவு செய்தால் நீங்கள் வாழ்க்கையில் அதிக பணத்தை சேமிக்க முடியும் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்படும்.
உங்களுடைய சொத்து நிலமாக இருந்தால் அதனுடைய மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கும் மற்றும் தங்கம் (Gold) மியூச்சுவல் ஃபண்ட்(Mutual Fund) ஷேர் மார்க்கெட் (Share Market) போன்ற சொத்துக்களின் மதிப்பு தினம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதனால் ஷேர் மார்க்கெட் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
உபரி பணத்தை சரியான வழியில் கையாள வேண்டும்.
உங்களுடைய உபரி பணத்தை நீங்கள் எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுடைய எதிர்கால வாழ்க்கை அமைகிறது உங்களுக்கு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருந்தாள் உங்களுடைய பணம் சரியான வழியில் செலவு செய்ய முடியாது.
ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதிக வருமானம் கொடுத்த தொழில் அல்லது வேலையை எழுதி வையுங்கள் மற்றும் அதிக செலவுகளை ஏற்படுத்திய உங்களுடைய நிகழ்வுகளை எழுதி வையுங்கள்.
வருடக் கடைசியில் இதனை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களுடைய பணத்தை நீங்கள் எவ்வாறு அவசர காலங்களில் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெரியவரும்.
இது உங்களுக்கு மேலும் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் பணத்தை சேமிப்பதற்கு.
உங்கள் இலக்குகளை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பணத்தை கையாளுவதற்கு குறுகிய கால இலக்குகள், நடுத்தர இலக்குகள் நீண்ட கால இலக்குகள் என 3 வகையாக இலக்குகளை நிர்ணயிக்கலாம்.
1 முதல் 3 வருடங்களுக்குள் இருக்கும் இலக்குகள் குறுகிய கால இலக்குகள் இதில் நீங்கள் கார், இரண்டு சக்கர வாகனங்கள், ஓய்வூதியத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பது போன்றவற்றை சேர்க்கலாம்.
3 முதல் 5 வருடங்களுக்குள் இருக்கும் இலக்குகள் நடுத்தர இலக்குகள் இதில் நீங்கள் அசையா சொத்து அல்லது புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கு தேவையான பணத்தை சேமிக்கலாம்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குகள் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும்.
உங்களுடைய தொழில் அல்லது அவசர காலங்களில் மூலம் உங்களுக்கு குறைந்தது 20 சதவீத அளவிற்கு பணம் இழப்பு ஏற்பட்டாலும் அதனால் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் உங்களுடைய பொருளாதாரத்தில் ஏற்படாத வகையில் உங்களுடைய பொருளாதாரத்தை நீங்கள் நிர்வகித்தால் நீங்கள்தான் சரியான புத்திசாலியான வகையில் பணத்தை கையாளுகிறீர்கள்.
உங்கள் ஓய்வூதியத்தை பற்றி திட்டமிடுங்கள்.
இப்பொழுது இருக்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் முதல் அறிவுரை என்னவென்றால் உங்கள் ஓய்வூதியத்திற்கு தேவையான பணத்தை இப்பொழுதே சேமிக்கத் தொடங்குங்கள் என்று தெரிவிக்கிறது.
அதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
கல்வி மற்றும் மருத்துவம் இரண்டிற்கும் அதிக அளவில் மக்கள் செலவு செய்கிறார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது இதனால் 50 வயதிற்கு மேல் ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் மாதம்தோறும் சிறிய தொகையாக உயரத் தொடங்கும்.
இதனை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், வருங்கால வைப்பு நிதி (Pension Plan, Medical insurance Plan, Provident Fund) போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஒரு பணக்காரர் நீங்கள் சேமிக்க தொடங்கும் முன்பு ஓய்வு பெறுகிறார் இது கூட்டு மந்திரம் காரணமாக நடக்கிறது இந்த முறையில் நீங்கள் விரைவாக எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் ஓய்வு பெறலாம்.
நீங்கள் ஓய்வு பெற முடிவு செய்தாள் அதன்பின்பு ஓய்வு காலங்களில் உங்களுக்கு எவ்வளவு பணம் மாதமாதம் தேவைப்படும் என்பதை ஓய்வுபெற முன்பு முடிவு செய்யுங்கள்.
60 வயதில் நீங்கள் ஓய்வு பெற்றால் அதன்பின்பு மாதத்திற்கு குறைந்தது 20,000 ரூபாய் செலவுக்காக நிர்ணயம் செய்யுங்கள்.
30 வருடங்களுக்கு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் எவ்வளவு தொகை உங்களால் சேமிக்க முடியுமோ ஓய்வு பெறுவதற்கு முன்பே சேமித்து கொள்ளுங்கள் ஏனென்றால் ஓய்வுபெற்ற பின்பு உடல் கடினமாக உழைக்க ஒத்துழைப்பு கொடுக்காது.
குறைந்தது 60 லட்சம் ரூபாய் உங்கள் ஓய்வு காலத்திற்காக நீங்கள் ஒதுக்க வேண்டும்.
உங்களை பாதிக்க கூடிய நிகழ்வுகள்.
இரண்டு சக்கர வாகனம், கார், மடிக்கணினி, கடன் அட்டை, அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, போன்றவற்றிற்கு உங்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் கடனை கட்டுவதற்கு நீங்கள் ஒதுக்கினால் உங்களுடைய வாழ்க்கையில் பணத்தை சேமிக்கவே முடியாது.
உங்கள் பழைய கடனை அடைப்பதற்கு புதிய கடனை வாங்க தொடங்கினாள் உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களுக்கு அதிக நாட்கள் ஆகும் அல்லது உங்களுடைய ஓய்வு காலம் தள்ளிப் போகலாம்.
ஒரு வழியில் வருமானம் வந்தது மூன்று வழியில் உங்களுக்கு செலவு ஏற்பட்டால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் இருப்பீர்கள்.
மூன்று வழியில் வருமானம் வந்து அதனை ஒரு வழியில் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும்.
இந்த திட்டங்கள் மூலம் மாதந்தோறும் குறைந்தது 3000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
தொடர்ந்து உங்களுடைய நிதி நிலைமையை உயர்த்திக் கொண்டே இருப்பதற்கு உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் அல்லது உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
Join our Telegram Group 
இந்திய அரசு கொண்டு வரும் மற்றும் தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் கொண்டுவரும் திட்டங்கள் மூலம் எப்படி உங்களுடைய பணத்தை உயர்த்துவது என்பதை பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யும்.
தினம்தோறும் நிதி அறிவு (Financial knowledge) பற்றி வளர்த்துக் கொள்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள்.