Best 5 life lessons covid-19 has taught me

2020 ஆம் ஆண்டு மூலம் நாம் கற்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி பார்ப்போம்.!!!(Best 5 life lessons covid-19 has taught me)

கடந்த 20 வருடங்களாக அதிக அளவில்  உலகில் ஏதாவது ஒரு மூலையில் இயற்கை சீற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் அதனால்   குறிப்பிட்ட பகுதியில் உள்ள  மக்கள் மட்டும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தனிப்பட்ட நபர்கள் உட்பட பல வழிகளில் உதவிகள் கிடைக்கும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மிக விரைவில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் ஆனால் 2020 ஆம் ஆண்டு அப்படி நடக்கவில்லை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து மக்களையும் பாதித்துவிட்டது.

உறவினர்கள் முதல் நண்பர்கள் வரை யாருக்கும் யாருமே உதவி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது வீட்டை விட்டு வெளியே வந்தாள் மிகப்பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்ற நிலை ஏற்பட்டது இதனால் வேலைவாய்ப்பு ,பொருளாதாரம், முற்றிலும்  முடங்கிப்போனது.

உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் மேலும் இது போன்ற கொடிய வைரஸ் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

வரும் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

Best 5 life lessons covid-19 has taught me

இதில் முக்கியமானது என்றால் உங்களுக்கு உங்கள்  குடும்பத்தினர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம் வருங்காலங்களில் தேவைப்படும் ஏனென்றால் 2020ஆம் ஆண்டு பல லட்சம் மக்கள் தங்கள் சேமித்து வைத்திருந்த அடிப்படை நிதியிலிருந்து பணத்தை எடுத்து அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தினார்கள் மேலும் அவர்களுடைய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் போன சூழ்நிலை உண்டானது.

மாத சம்பளம் வாங்கும் குடும்ப தலைவர்களுக்கு திடீரென்று அவசர சிகிச்சைக்கு பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் அவர்களால் நிதி திரட்ட முடியாது. அதனால் சிறிய அளவில் உங்களுடைய குடும்பத்திற்கு இன்ஷூரன்ஸ் செய்து வைத்தாள் அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பணத்தை சேமிக்கும் பழக்கத்தை இன்றே துவங்குங்கள்.

கொரோனா வைரஸ்  வேகமாக பரவுவதை தடுப்பதற்கு இந்திய அரசு இந்திய முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்வதற்கு பணம் இல்லாமல் போன சூழ்நிலை பல குடும்பங்களுக்கு ஏற்பட்டது வரும் காலங்களில் உங்கள் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க தொடங்கினாள் இது போன்ற அவசர சூழ்நிலைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்   இந்த  சேமிக்கும் பழக்கவழக்கங்கள்.

வாகன காப்பீட்டு திட்டம்.

வாகன காப்பீட்டு திட்டத்தை பற்றி நீங்கள் முழுவதும் தெரிந்து கொள்வது நல்லது ஏனென்றால் நம்முடைய வாகனங்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டில் புயல், மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படமாட்டாது. எனவே 3ம் தரப்பு காப்பீடு எடுக்க வேண்டும் குறிப்பாக சென்னை போன்ற பெரிய  நகரங்களில் வசிக்கும் மக்கள் எடுத்துக்கொள்வது நவம்பர், டிசம்பர் காலங்களில் உங்கள் வாகனம் பழுதானால் மூன்றாம் தரப்பு காப்பீடு திட்டம் மூலம் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.

முக்கியமாக தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்.

முக்கியமாக EMI என்ற கொள்கையை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவிர்த்தால் நிம்மதியாக உங்கள் வாழ்க்கை அமையும் ஏனென்றால் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் ஆடம்பரப் பொருட்கள் உங்கள் நிம்மதியை கெடுத்து விடும் உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப உங்களுக்கு தேவைப்படும் மின்னணு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பழக்கவழக்கங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் அவசர காலங்களில் உங்கள் கையில் இருக்கும் சிறிய தொகையை கூட உங்களுக்கு பணம் வழங்கிய நிதி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும்.

60,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பினை உறுதி செய்த தமிழக அரசு.!!!

பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாறிக் கொள்வது நல்லது.

Best 5 life lessons covid-19 has taught me

நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றினால் எந்த ஒரு உடல் உபாதைகளும் தோன்றாது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு அதிக அளவில் இஞ்சி, எலுமிச்சம் பழம், சீரகம், மிளகு, மஞ்சள்தூள், கிரீன் டீ ,போன்றவற்றை மக்கள் பயன்படுத்தினார்கள் என்ற செய்திகள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் விளம்பரங்களில்  காண்பிக்கப்படும் உணவு வகைகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க செய்யாது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

What’s App Group.

Telegram group.

Leave a Comment