Best 5 Omega nutrition 3 rich fishes in tamil
இந்த 5 மீன் வகைகள்ல தான் ஒமேகா 3 ஊட்டச்சத்து அதிகமாக நிரம்பியுள்ளது..!
நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒமேகா-3 கொழுப்பு ஊட்டச் சத்து முக்கியமானதாக இருக்கிறது, இந்த ஊட்டச் சத்துக்கள் அசைவ உணவுகளில் வழியாகவே அதிகமாக உடலுக்கு கிடைக்கிறது.
முக்கியமாக மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது, எனவே ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ள உணவுகளை பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என்பவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு சிறந்த ஊட்டசத்தாக இருக்கிறது மனித உடலுக்கு.
இன்றியமையாத ஒரு ஊட்டச் சத்தாகவும் கொழுப்பமிலம் இன்றுவரை உள்ளது, ஆனால் இது இயற்கையாக இது உடலில் உருவாகுவதில்லை, இதை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒமேகா-3 ஊட்டச்சத்தின் அவசியம் என்ன
ஈகோசபெண்டொனோயிக் அமிலம் மற்றும் டோகோசாஹேக்ஸெனோயிக் அமிலம் ஆகிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளன.
அதிகபட்சம் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் மீன் வகைகளில் நிறைந்து காணப்படுகிறது, மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவுகிறது.
எனவே அதிகமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் வகைகளையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
சால்மன் மீன்
ஒமேக 3 கொழுப்பமிலங்கள் அதிகமாக கொண்ட மீன்களில் சால்மன் மீன் எப்போதும் முதன்மையாக இருக்கிறது சாதாரணமாக இணையத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளே தேடினால்.
சால்மன் மீன் அதில் முதலில் இருக்கும் இதை பல வகைகளில் உணவாக்கிக் கொள்ள முடியும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி வேறு உயர்ரக ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.
பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், விட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்து உள்ளதால் எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு எப்பொழுதும் உதவுகிறது.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் சால்மன் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கானாங்கெளுத்தி மீன்
தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மீனாக கானாங்கெளுத்தி எப்பொழுதும் இருக்கிறது இது கருவாடுயாகவும் பயன்படுத்தலாம்.
இந்த மீனை கொண்டு பலவகையான சுவையான உணவுகளை தயாரிக்க முடியும் கானாங்கெளுத்தி மீனில் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளன.
மேலும் இதில் மெக்னீசியம், இரும்பு, மற்றும் பொட்டாசியம், ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
மத்தி மீன்
சாப்பிடுவதற்கு எளிதாக இருக்கக்கூடிய ஒரு மீன் என்றால் அது மத்தி மீன் மட்டுமே இதில் உள்ள முட்கள் மிகவும் எளிதாக இருப்பதால் இதனை முட்கள் உடனே சாப்பிடலாம்.
இது ஒரு எண்ணெய் மீன் வகையாகும், கடல் மீன் என்பதால் கடலோரப் பகுதிகளில் அதிகமாக மத்தி மீன் கிடைக்கும் மற்ற மீன் வகைகள் போலவே இதையும் எளிதாக வறுக்க முடியும்
இதில் புரதம் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளன இதில் வைட்டமின், கால்சியம் அதிகமாக உள்ளது.
நெத்திலி மீன்
நெத்திலி மீன் தமிழகத்தில் மிகவும் பிரபலமான மீன் வகையாகும் தமிழக மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள், மளிகை கடைகளில் நெத்திலி மீன் கருவாடு குறைந்த விலையில் கிடைக்கிறது.
100 கிராம் நெத்திலி மீனில் 210 கிராம் கலோரிகள் 29 கிராம் புரதச்சத்து நிறைந்து உள்ளன.
சூரை மீன்
இது ஒரு கடல் மீன் மற்ற மீன்களைப் போலவும் இதையும் நீங்கள் எளிமையாக சமைக்கலாம், இது பல்வேறு வகையான ஊட்டச் சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது, ஆனால் கர்ப்பிணி பெண்கள் மற்ற நோய் உள்ளவர்கள் இந்த மீனை சாப்பிடக்கூடாது.
விவசாயம் சார்ந்த 10 அருமையான சுயதொழில் பட்டியல்கள்..!
முரண் கெண்டை மீன்
அதிக பசியோடு இருப்பவர்கள் பசியை கட்டுப்படுத்த இந்த மீனை சாப்பிடலாம் இந்த மீன் சிறியதாக இருப்பதால் இதை வைத்து க்கிரில் போன்ற சுவை மிகுந்த உணவுகளை தயார் செய்யமுடியும்.
Pal vali kunamaga patti vaithiyam 5 best tips
இதில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன, குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைக்கும் நபர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.