Best 5 schemes introduced Karunanidhi

Best 5 schemes introduced Karunanidhi

கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த சிறந்த திட்டங்கள்..!

திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் ஏற்படுத்திய ஒரு புரட்சியை அவர் பதித்த காலடித்தடங்கள்.

அவர் உருவாக்கிய திட்டங்கள், அவர் கொண்டுவந்த வளர்ச்சி பணிகள் என்ன, என்பதை இந்த கட்டுரை மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

திமுக தலைவர் கலைஞரின் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட சலுகைகளும் திட்டங்களும் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

தமிழுக்கும் தமிழகத்திற்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிமுகப்படுத்திய சிறந்த திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கலைஞரால் உருவாக்கப்பட்டது.

கைரிக்ஷாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷா அளிக்கப்பட்டது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ரிக்ஷாவில் வைத்து இழுத்துச் செல்லும் முறையை கலைஞர் கடுமையாக எதிர்த்தார்.

தமிழகத்தில் உள்ள சிறு குறு கிராமங்களும் கூட தார்சாலை வசதியை கலைஞர் ஏற்படுத்தினார்.

தனியார் வசம் சிக்கிய போக்குவரத்து துறையை முழுவதும் அரசுடமை ஆக்கினார்.

சிப்காட் தொழில் வளங்கள் உருவாக்கப்பட்டது

சிட்கோ தொழில் வளங்கள் கொண்டுவரப்பட்டது

மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டது

சேலத்தில் இரும்பு உருக்காலை கலைஞரால் கொண்டுவரப்பட்டது

தமிழகத்தில் உள்ள சிறு கிராமங்கள் அனைத்தும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது

தடையற்ற மின்சாரம் கிடைக்க தமிழகத்தில் 8 இடங்களில் மிகப்பெரிய மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல1997களில் தரமணி டைடல் பார்க் தொழில்நுட்பத்திற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டது.

14,600/- கோடி ரூபாய் மதிப்பிலான சென்னையில் மெட்ரோ திட்டம் கலைஞர் தொடங்கி வைத்தார்.

குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களிலிருந்து குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டன.

2010ஆம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது.

சென்னையில் அதிக அளவில் தொழிற்சாலை உருவாக்கி தமிழகத்தின் பொருளாதாரத்தில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தியது கலைஞர்.

அதனால் தான் சென்னை ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி தொழில் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன

25 Best schemes introduced by Karunanidhi

விவசாயிகளுக்கு கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள்

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் கொண்டு வரப்பட்டது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இது போன்ற சிறந்த திட்டம் விவசாயிகளுக்கு தொடங்கப்பட்டது.

உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விளைபொருட்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களும் சென்று சேர வழிவகை ஏற்படுத்தியது கலைஞர்.

விவசாயிகளுக்காக 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது கலைஞர்.

விவசாயக் கூலிகளுக்கு சம்பள நிர்ணயம் செய்யப்பட்டது.

கிராமப்புற வளர்ச்சிக்கு என தனியான நமக்கென திட்டம் உருவாக்கப்பட்டது.

அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றும் அறிமுகம் செய்யப்பட்டது.

கிராமப்புற மேம்பாட்டிற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

25 Best schemes introduced by Karunanidhi

அரசு ஊழியர்களுக்கு கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள்

அரசு ஊழியர்களுக்கு என குடும்ப நல திட்டம் உருவாக்கப்பட்டது

தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள்

திமுக ஆட்சிக்காலத்தில் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமணம் நிதி உதவி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தார்.

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

குடும்பத்தில் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்.

Best 5 schemes introduced Karunanidhi பெண்களுக்கு இலவச பட்டப்படிப்பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் மிகவும் வெற்றிகரமான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.

25 Best schemes introduced by Karunanidhi

தமிழகத்தில் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள்

இந்தியாவின் இறுதி புள்ளி அல்லது மறுமலர்ச்சி இந்தியாவின் தொடக்க புள்ளியாக இருக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது 133 அடி உயரத்தில்.

Best 5 schemes introduced Karunanidhi ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று கொடுத்தவர் கலைஞர்.

7 worst foods men should avoid for health

கோவையில் மிக பிரமாண்டமாய் தமிழறிஞர்கள் வெற்றிகரமாக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு தமிழக கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது.

ஆண்மையை பாதிக்கும் இந்த வகையான உணவுகளை

Best 5 schemes introduced Karunanidhi  தமிழ் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் மாற்றப்பட்டது.

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 

Leave a Comment