சிறுநீரகம் செயலிழந்துவிட்டதை வெளிக்காட்டும் அறிகுறிகள் அதற்கான காரணங்களும்(Best 5 symptoms of kidney failure causes)
சிறுநீரக நோயானது ஒரு அமைதியான கொலையாளி என்று மருத்துவர்கள் தங்களுடைய முறையில் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்படுவது விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால கண்டறிதல் இல்லாததால் மட்டுமல்ல டயாலிசிஸ் கருவிகள் பற்றாக்குறை மாற்று அறுவை சிகிச்சைக்கான அதிக செலவு மற்றும் உறுப்பு தானம் தொடர்பான புதிய கடுமையான அரசு விதிமுறைகள் போன்ற காரணங்களால் உயிரிழப்பு என்பது அதிகமாக இருக்கிறது இந்தியாவில்.
உடலின் கழிவுகளை அகற்ற உதவும் உடல் உறுப்புகள் சிறுநீரகங்கள் இந்த உறுப்புகள் சரியாக இயங்கினால் தான் உடல் இயக்கம் சரியாக இருக்கும்.
இருதய நோய், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, இந்த 3 நோய்களும் மக்களை அதிகளவில் கொன்று குவித்து வருகிறது.
இந்தியாவில் இப்பொழுது இந்த நோய் கிராமங்களில் கூட அதிக அளவில் காணப்படுகிறது, அந்த அளவிற்கு இந்த நோயின் தாக்கம் மிகத்தீவிரமாக மக்களிடத்தில் உள்ளது.
5 நிமிடத்திற்கு ஒருமுறை 2 நபர்கள் இந்த நோயால் உயிரிழக்கிறார்கள் அல்லது ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் நபர்கள் இந்த நோயால் உயிரிழக்கிறார்கள் அல்லது 24 மணி நேரத்திற்கு ஒரு முறை 547 நபர்கள் இந்த நோயால் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சில நேரங்களில் 2 சிறுநீரகங்களும் திடீரென்று செயலிழந்து அதன் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி விடுகிறது, இதுபோன்ற சிறுநீரக செயலிழப்புக்காண காரணங்கள், அதற்கான சிகிச்சைகளையும் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லா உயிரினத்துக்கும் முதுகின் கீழ் பகுதியில் பாதுகாப்பாக உள்புறமாக அமைந்துள்ள ஒரு ஜோடி சிறிய உறுப்புகள் தான் இந்த சிறுநீரகங்கள், ஆனால் இவைகள் செய்யும் வேலைகள் என்பது மிகவும் அற்புதமானது.
மனிதனிடத்தில் எவ்வளவு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி இருந்தாலும் சிறுநீரகங்கள் செய்யும் வேலைகளை மனிதனால் செயற்கையான முறையில் செய்ய வைக்கவே முடியாது.
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்றுவது இதன் செயல்பாடுகள்.இதன் வேலை செய்வது குறைவது அல்லது முழுவதும் தடைபடுவதால் சிறுநீரக செயலிழப்பு என்று கருதப்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பின் இறுதி நிலை தான் ESRT எனப்படும் நிலை சிறுநீரக நோய் ஆகும். இது தான் நீண்ட கால சிறுநீரக செயலிழப்பின் இறுதிக் கட்டமாகும்.
சிறுநீரகங்கள் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.
ஆட்டோ இம்யூன் நோய்கள்
சில மரபணு நோய்கள்
நெப்ரோடிக் நோய்க்குறி
சிறுநீரகப் பாதை பிரச்சினைகள்
போன்ற பிரச்சனைகள் தான் சிறுநீரக செயலிழப்புக்கு முக்கியமாக இருக்கிறது.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.
சிறுநீரகங்கள் மிக மோசமாக சேதம் அடையும் வரை அதனுடைய அறிகுறிகள் அரிதாக தோன்றும் அல்லது தோன்றவே தோன்றாது கடைசி கட்டத்தில் தான் சிறுநீரக செயலிழப்பு அதிக அளவில் தெரியவரும்.
சிறுநீரக செயலிழப்பை நெருங்குவதற்கான அறிகுறிகள் முதன்மையானது, மற்றும் அதிகப்படியான உடல் கழிவுகள் வெளியேறுவது தான் இது போன்ற அறிகுறிகளை நீங்கள் நன்கு கவனித்தால் அதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும் உங்களுடைய சிறுநீரகங்களை.
அரிப்புகள் ஏற்படுவது, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி, பசியின்மை, கால் மற்றும் கணுக்காலில் வீக்கம், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுவது, அல்லது மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுவது, தூங்குவதில் சிரமம் ஏற்படுவது, மூச்சுப் பிரச்சினைகள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, முதுகுவலி, மூட்டுவலி, இரத்த போக்கு ஏற்படுவது, போன்ற அறிகுறிகளும் சிறுநீரக செயலிழப்பிற்கான முக்கியமான அறிகுறிகளாக இருக்கிறது.
நோய் கண்டறியும் பரிசோதனை.
சிறுநீர் வெளியீட்டு அளவை அளவீடு செய்வது, சிறுநீர் சோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், போன்ற சில சோதனைகள் மற்றும் நடைமுறைகளை கொண்டு சிறுநீரக செயல்பாட்டை மருத்துவர்கள் கண்டறிவார்கள்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் இதற்கு ஒரே தீர்வாக டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கு இருக்கிறது.
டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகும் மக்கள் நீண்டகாலம் கட்டுப்பாட்டுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே நீண்ட காலம் உயிருடன் வாழ முடியும்.
சிறுநீரக நோயாளிகள் உயிரிழப்புக்கு முக்கியமாக இருப்பது மருத்துவ செலவிற்கு ஆகும் தொகை மட்டுமே ஒரு முறை டயாலிஸிஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
இதனால் மாதத்திற்கு 35,000 முதல் 40,000 வரை கட்டாயம் சிறுநீரக நோயாளிகள் செலவு செய்தாக வேண்டும் உயிருடன் இருக்க வேண்டும் என்றால்.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கூட தங்களுடைய பொதுமக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் திணறுகிறது காரணம் இதற்கு ஆகும் செலவுகள் மட்டுமே.
டயாலிசிஸ் செய்யும் பொழுது இந்தத் துறையில் அனுபவம் பெற்ற மருத்துவ ஊழியர்கள் கட்டாயம் நோயாளியுடன் இருக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் இந்த டயலாக் சிகிச்சையின்போது மின்சாரத் துண்டிப்பு என்பது மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக இருக்கிறது இதனால் சில நேரங்களில் நோயாளிகளில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் 262 அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான வசதிகள் இல்லை மாவட்டத்திற்கு இருக்கும் பொது மருத்துவமனைகளிலும் 1 அல்லது 2 டயாலிசிஸ் இயந்திரம் உள்ளது. ஆனால் இவை ஒரு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து நோயாளிகளுக்கும் பற்றாக்குறையாகவே இருக்கிறது.
மொத்தத்தில் இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அவருடைய வாழ்க்கை என்பது அதற்கு பிறகு மிகவும் கடினமான சூழ்நிலையை அமைந்துவிடும்.
எப்படி பாதுகாத்துக் கொள்வது.
ஆரோக்கியம் நிறைந்த இயற்கையான முறையில் விளைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சோடியம் உப்பு அதிக அளவில் சேர்த்த உணவுகளை தவிர்த்து விடவேண்டும்.
What are the benefits of having sex
கட்டாயம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும், அப்போதுதான் உடல் உறுப்புகள் சரியான முறையில் வேலை செய்யும். ஒருவர் தொடர்ந்து 5 முதல் 6 ஆண்டுகள் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது கட்டாயம் சிறுநீரக நோய் ஏற்படும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சூட்டில் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள் உங்களுடைய சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கும்.
Click here to view our YouTube channel
மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த ஒரு சிறிய உடல் உபாதைகளுக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
அதிக நாட்களுக்கு தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
உடல் பருமன் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
உங்களுடைய உடல் எடை மற்றும் வயதிற்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரையின்படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Nipah virus symptoms treatment new update 2021
முக்கியமாக உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்ற வேண்டும் அதற்கு நடைப்பயிற்சி செய்யலாம் அதிகாலையில் அல்லது தினமும் குறைந்தது 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் சிறுநீரக நோய் மட்டுமல்ல மற்ற நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடித்தல் மற்றும் அதிக அளவில் ஆல்கஹால் எடுத்துக்கொள்வது சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கும்.