Best 5 symptoms of TB in tamil
காசநோய் அறிகுறிகள் என்ன..!
உலகில் மாறி வரும் பருவ நிலை மற்றும் உணவு முறைகளால் பல நோய்கள் அதிவேகமாக பரவி வருகிறது.
அந்த வகையில் காசநோய் முக்கியமானதாக உள்ளது,இந்த நோய்க்கு மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ், என்ற வைரஸ் மூலம் தொற்றக் கூடிய நோயாக இருக்கிறது.
இதனை ஆங்கிலத்தில் (Tuberculosis) TB என்று அழைக்கப்படுகிறார்கள்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி பரவும் தன்மை கொண்டது.
காசநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்பதையெல்லாம் இந்த கட்டுரையை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இது மைக்ரோ பாக்டீரியா டியூபர்குளோஸிஸ் என்ற வைரஸ் மூலம் உருவாகிறது, காசநோய் உள்ள நபர்களிடம் இருந்து வெளிப்படும் மூச்சுக் காற்றின் மூலம் மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது.
இது காற்றின் மூலம் பரவக்கூடிய நோய்யாகும், கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இந்த நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த நோய் யாருக்கெல்லாம் வரும்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு காசநோய், மலேரியா, மஞ்சள்காமாலை,போன்ற நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு, சிறுநீரக நோயாளிகளுக்கும், புற்றுநோய் நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காச நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்படுத்துதல், போன்றவற்றால் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்,HIV உள்ளவர்களுக்கு காச நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காசநோயின் அறிகுறிகள் என்ன
symptoms of TB in tamil தொடர்ந்து 3 வாரங்களுக்கு அதிகமான இரும்பல் மேலும் இருமும்போது ரத்தத்துடன் சில திரவங்கள் வெளி வருவது போன்றவை இருந்தால் அது காசநோயின் அறிகுறியாகும்.
உமிழ்நீரை வெளியிடும்போது திரவங்களுடன் நாற்றம் வெளிப்பட்டால் அது பாக்டீரியா நோய்கள் அல்லது எச்சில் நீர் போன்று வெளிப்பட்டால் அது வைரஸ் நோயாகும், ரத்தம் கலந்து வெளிப்பட்டால் அது காச நோய் ஆகும்.
காச நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, அல்லது இருமல் போது வலி ஏற்பட்டாலோ, நெஞ்சு வலி நெஞ்சின் மேல் கை வைத்து அழுத்தும் போது வலி ஏற்பட்டாலும், அதுகாச நோயின் முக்கிய அறிகுறிகள்.
சாதாரணமாக இருக்கும் உடல் எடையைவிட கணிசமாக எவ்வித உடல் உழைப்பு இன்றி உடல் எடை குறைதல், பசியின்மை போன்றவை, காச நோய்க்கான முக்கிய அறிகுறி.
உடல் நடுக்கம், இரவில் அதிகமாக வியர்வை, அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காச நோய்க்கான அறிகுறி.
காய்ச்சல் வருவதற்கு காரணம் காசநோய் வைரஸ் உடலில் இனப்பெருக்கம் செய்வதை தடுப்பதற்காக உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் ஏற்படும்.
காச நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன
symptoms of TB in tamil இந்த நோய் உடலில் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இருக்காது, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்தவுடன், சில அறிகுறிகள் வெளிப்படும் காசநோயின் 2வது வகையான அறிகுறியாகும்.
இந்த நோய் நுரையீரலை பாதிக்காமல் மற்ற பகுதிகளைப் பாதிக்கும்.
நோய்க்கான அறிகுறிகள் பாதிப்படைந்த பகுதியில் வீக்கமடைதல், அதிக தலைவலி, நரம்பியல் பிரச்சனை, உடல் பலமிழந்து காணப்படுதல்.
இந்த நோயில் இருமல் வராது ஏனெனில் இது நுரையீரலை பாதிக்கப்படுவதில்லை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவாரங்களில் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
காச நோய் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது
சளி பரிசோதனை
மார்பக எக்ஸ்ரே பரிசோதனை
மாண்டோ,பரிசோதனை மூலம் நோய் கண்டறியப்படுகிறது.