Best 5 vegetables list for summer in tamil
கோடைக்காலத்திற்கு சிறந்த நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பட்டியல்..!
கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நீரோட்டம் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காய்கறிகள் எப்போதும் அதிக பலன்களைக் கொடுக்கும்.
நாம் இந்த உலகத்தில் உயிருடன் இருக்கும் வரை எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மேலும் நாள்தோறும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள்.
உண்மையான காரணம் என்னவென்றால், நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தால் உடல் வறட்சி அடையாமல் இருக்கும்.
மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும், அதனால் உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், இருக்கும் மேலும் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதால்.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது சிறப்பாக செயல்படும், உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் தணிந்து விடும்.
பொதுவாக நமது உடலில் வறட்சி ஏற்பட்டால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும் குறிப்பாக மலச்சிக்கல், குடல் கோளாறு, மூல நோய், சிறுநீரகக் கற்கள், போன்றவை ஏற்படும்.
எனவே இத்தகைய உடல் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு வராமல் இருப்பதற்கு போதிய அளவு நீர்ச்சத்து உடலில் இருக்க வேண்டும்.
அதற்கு நீங்கள் தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் என்ற ஒரு அவசியமும் கிடையாது.
அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் இருக்கின்றது, அதை நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும், உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கிடைத்து விடும்.
வெள்ளரிக்காய்
பொதுவாக பல நபர்களுக்கு வெள்ளிரிக்காய் என்றால் மிகவும் பிடிக்கும் மிகவும் சுவையாக இருக்கும் இந்த காய்.
இந்த வெள்ளரிக்காயில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக இந்த வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு காய் வகை சேர்ந்தவை ஆகவே இந்த நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள், இதனால் உங்களது உடல் வறட்சி நீங்க மேலும் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.
தக்காளி
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபைன் போன்றவை நிறைந்துள்ளன மேலும் குறிப்பாக தக்காளி 90 சதவீத நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
எனவே இதனை சாப்பிட்டால் நீர்ச்சத்து குறைபாடு நீங்கும், உடல் எடையும் குறையும், மேலும் இதனை பச்சையாக சாப்பிட்டால் அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் எளிமையாக பெறலாம்.
கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிக அளவு இருக்கிறது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களும் அதிகம் நிறைந்துள்ளது.
உடலுக்கு மட்டுமன்றி சருமத்திற்கும், கூந்தலுக்கும், மிகவும் நல்லது எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால் உடல் வறட்சி நீங்கி பொலிவு பெறும்.
புடலங்காய்
Best 5 vegetables list for summer எடையை குறைக்க உதவும் குறைவான கலோரிகள் நிறைந்துள்ளது கொழுப்பில்லாமல் தேவையான ஆற்றலை உடலுக்கு தருகிறது குடல் இயக்கங்களை சீராக வைக்கிறது.
92% நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
சுரைக்காய்
Best 5 vegetables list for summer ஊட்டச்சத்து அதிகம் தரக்கூடிய காய்கறி உடலிருந்து நச்சுகளை நீக்கக்கூடியது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் வயிற்றில் தேவையில்லாமல் இருக்கும் உளை சதைகளை குறிக்கிறது.