Best 5 vitamin rich foods for hair in tamil
கோடை வெயிலுக்கு முடி அதிகம் கொட்டுதா அப்ப இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
இன்றைய மக்களின் முக்கியமான பிரச்சனையாக இருப்பது தலைமுடி உதிர்தல் பிரச்சினை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, வழுக்கை, நரை முடி, போன்ற ஏராளமான முடி சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது, அதிலும் இந்த கோடை வெயிலுக்கு முடி அதிகமாக கொட்டும் அதுமட்டுமில்லாமல் தலையில் ஈரப்பதம் என்பது அதிகமாக இருக்காது.
இதை சமாளிப்பதற்கு நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டும்மில்லாமல், முடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.
சில உணவுகள் உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, அந்தவகையில் முடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி இன்றியமையாதது.
முடி உதிர்வை தடுக்க உங்கள் உணவில் வைட்டமின் பி அனைத்து வடிவங்களிலும் சேர்க்க வேண்டும்.
நீங்கள் எப்போதும் தலை முடி மற்றும் உச்சந்தலையில் ஹேர் மாஸ்க்குகள்,எண்ணெய்கள் மற்றும் பிற பொருட்களை மேற்பூச்சு பயன்படுத்த வேண்டும்.
இவை நன்மை அளிக்கும் ஆனால் போதுமான வைட்டமின் இல்லாமல் அனைத்து தலைமுடி சிகிச்சைகளுக்கும் பயனற்றவை.
வைட்டமின்கள் உங்கள் தலைமுடியை நீளமாக, வலுவாகவும், ஆரோக்கியமாகவும், வைத்திருக்க உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கான சிறந்த வைட்டமின்களை பற்றி நீங்கள் இந்தக் கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின்-பி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
வைட்டமின்-பி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் காளான்கள், முழு தானிய பொருட்கள், பச்சை இலை காய்கறிகள், போன்றவையாகும் இந்த உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டுமின்றி, வலுவான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
நியாசின் நிறைந்த உணவுகள்
மாட்டிறைச்சி கல்லீரல், மீன், பீட்ரூட், வேர்கடலை, மாட்டிறைச்சி, மற்றும் சூரியகாந்தி விதைகளில் விட்டமின் பி3 அல்லது நியாசின் என்ற ஊட்டச்சத்து காணப்படுகிறது.
முடி உதிர்தலை தடுக்க இந்த உணவுகளை உங்கள் உணவில் எப்போதும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
வைட்டமின் பி5 நிறைந்த உணவுகள்
இது முட்டையின் மஞ்சள் கரு, சோளம்,காலிஃப்ளவர், ப்ராக்கோலி, சால்மன் மீன் மற்றும் தானியங்கள், போன்றவற்றில் காணப்படுகிறது முடி உதிர்வதை தடுக்க வைட்டமின் பி5 நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.
வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள்
Best 5 vitamin rich foods இந்த வைட்டமின் வாழைப்பழங்கள், பச்சை பட்டாணி, மிளகு தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள், மற்றும் வெண்ணெய் போன்றவற்றில் காணப்படுகிறது, ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கு இந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
வைட்டமின் பி7 நிறைந்த உணவுகள்
Best 5 vitamin rich foods வலுவான தலைமுடியை நீங்கள் பெற பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இது வெங்காயம், பாதாம், தானியங்கள், ஈஸ்ட், வாழைப்பழங்கள், மற்றும் சால்மன் ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகிறது.
தலைமுடி சேதம் மற்றும் நோய்களை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள், முடி உதிர்தலை தடுப்பதோடு முடி வளர்ச்சிக்கும் சிறப்பாக இருக்கும்.