Best 6 foods for baby brain development
குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்..!
உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும், சீராகவும், சீரான மூளை வளர்ச்சியில், வளர்ப்பது உங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஒரு கடமை.
இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு தேவையான அனைத்து விதமான தேவைகளையும் செய்துவிடுகிறார்கள்.
குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சித் திறன் என்பது சிறிய வயதில் சரியாக இருந்தால் மட்டுமே அந்த குழந்தையால் வளர்ந்த பிறகு இந்த சமுதாயத்தில் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் இயற்கையான சிறந்த உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
நாட்டுக்கோழி முட்டை
குழந்தைகளுக்கு கட்டாயம் முட்டை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் பிராய்லர் கோழி முட்டையை கொடுத்தால் அது குழந்தைக்கு பல்வேறு விதமான தீங்குகளை காலப்போக்கில் ஏற்படுத்தி விடும்.
அதனால் இயற்கையான முறையில் கிடைக்கும் நாட்டு கோழி முட்டையை குழந்தைக்கு கொடுப்பது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
கடல் உணவுகள்
கடல் உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது குறிப்பாக ஒமேகா-3 ஊட்டச்சத்து கடல் உணவில் அதிகமாக உள்ளது.
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடல் வளர்ச்சி,மூளை வளர்ச்சிக்கு சால்மன் மீன் போன்றவற்றை உங்களுடைய குழந்தைக்கு வாரமிருமுறை கொடுங்கள்.
வேர்க்கடலை
உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும்போது நீங்கள் பிஸ்கட் அல்லது சில ஸ்நாக்ஸ் வகைகளை கொடுக்கலாம், அதற்கு பதிலாக வேகவைத்த வேர்க்கடலை அல்லது வறுத்த வேர்க்கடலையை கொடுங்கள்.
இது குழந்தைக்கு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும், இருதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்கும்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் சிட்ரிக் ஆசிட் அதாவது வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
இதனால் உங்கள் குழந்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்குத் தேவையான அனைத்து வளர்ச்சியும் இதன் மூலம் கிடைக்கும்.
பால் பொருட்கள்
Best 6 foods for baby brain development பால் பொருட்களில் புரோட்டீன் ஊட்டச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவு கொண்டுள்ளது.
எனவே குழந்தைகளுக்கு தினமும் தவறாமல் பால் சார்ந்த பொருட்களை கொடுப்பது மிகவும் அவசியம்.
பீன்ஸ்
Best 6 foods for baby brain development பீன்ஸ் உண்மையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள் தான்,ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் மற்றும் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 போலிக் ஆசிட் நிறைந்துள்ளது ALA என்னும் மூளையின் செயல்பாட்டிற்கும், மூளை வளர்ச்சிக்கும், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.