Best 6 insurance plans you must take
கண்டிப்பாக எடுக்க வேண்டிய 6 இன்சூரன்ஸ் திட்டங்கள் ஏன் என்ன காரணம், இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே வீண்செலவு என்ற கண்ணோட்டம் இப்பொழுது மறைந்து விட்டது, இது ஒரு அவசியம் என்பது பல நபர்களுக்கு புரிய ஆரம்பித்து உள்ளது இதற்கு முக்கிய கொரோனா வைரஸ் காரணம் எனலாம்.
இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் என்ன சமயத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களது உறவுகளை இழந்து தவித்த அந்த காலகட்டத்தில் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது, எத்தனையோ குடும்பங்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகிறது.
இன்ஷூரன்ஸ் என்பது பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு பாதுகாப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே அதனைப்பற்றி புரிந்திருக்கும்.
இது நம்மில் பலருக்கும் இப்பொழுது புரிய ஆரம்பித்திருக்கலாம், இன்சூரன்ஸ் பற்றி அவசியத்தை உணர்ந்து நீங்கள் உங்களுக்காக இல்லாவிட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி ஒருவர் எடுக்க வேண்டிய அவசியமான இன்ஷூரன்ஸ் திட்டங்களை பற்றி தான் முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
ஹெல்த் இன்சூரன்ஸ்
மனிதர்களுடைய இந்த காலகட்டத்தில் வாழ்வில் நோய் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது, அதிலும் தற்போதைய காலகட்டத்தில் புதிய வைரஸ் நோய்கள் பரவி வருகிறது என்பது அனைவரும் உணர்ந்த ஒரு விஷயம்.
அதனால் யாருக்கு என்ன பிரச்சினை வரும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலையில் இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிலும் ஃபேமிலி நண்பர்களுக்கு போன்ற பாலிசியை எடுத்துக் கொள்ளலாம், இதன்மூலம் குடும்பமே பாதுகாப்பாக இருக்கும்.
தனிநபர் விபத்து காப்பீடு
இந்த தனிநபர் விபத்து காப்பீடு ஒருவேளை விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது விபத்தால் ஏற்படும் உடல் நலத்திற்கு இழப்பீடு வழங்குபவை.
இதனை கவர் செய்யும் விதமான பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா இது மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு அறிவித்த ஒரு சிறந்த இன்சூரன்ஸ் திட்டமாக நம் நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டால் அல்லது நிரந்தரமாக ஊனம் அடைந்துவிட்டால் இழப்பீடு எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் இழப்பு பலனாக 2 லட்ச ரூபாயும் உடல் மற்றும் ஊனம் ஏற்பட்டால் 1 லட்சம் ரூபாயும், மத்திய அரசால் இழப்பீடு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நீங்கள் இணைந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் வருடத்திற்கு 12 ரூபாய் பிடித்துக் கொள்ளப்படும், இது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திகொண்டு இருக்கிறது அவற்றில் நீங்கள் எளிமையாக இணைந்து கொள்ளலாம்.
ஹோம் இன்சூரன்ஸ் திட்டம்
நீங்கள் வாடகை வீடு அல்லது சொந்த வீடு எதுவாக இருந்தாலும் சரி உங்களது வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு சிறந்த திட்டமாகும்.
இது இயற்கை பேரிடர் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியும் இதில் பல வகையான திட்டங்கள் உள்ளன.
அதில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் உங்களுடைய சொத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
சைபர் இன்ஷூரன்ஸ்
சைபர் இன்சூரன்ஸ் என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி பலர் நபர்களுக்கு நிச்சயம் ஏற்படும் அதாவது உங்களுடைய ஸ்மார்ட்போன், கணினி, கிளவுட் ஸ்டோரேஜ், உள்ளிட்டவற்றில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைத்திருப்பீர்கள்.
அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சைபர் இன்சூரன்ஸ் என்ற திட்டம் இருக்கிறது, பொதுவாக இது பெரிய அளவில் பணப்புழக்கம் நடைபெறும் இடத்தில் தேவைப்படுகிறது.
மோட்டார் வாகன இன்சூரன்ஸ்
மோட்டார் வாகன இன்சூரன்ஸ் திட்டத்தை பொருத்தவரையில் கண்டிப்பாக மூன்றாம் தரப்பு இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என சொல்வதால் இதனை வேறு வழியில்லாமல் செய்து வைக்கிறார்கள்.
ஆனால் இதன் மூலம் மூன்றாம் நபர் மட்டுமே பயன்பெற முடியும் ஆனால் இதில் காப்பீட்டாளர் உங்களுக்கு எந்தவிதமான காப்பீடும் கிடைக்காது.
எனவே ஒன் டேமேஜ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும், இதன் மூலம் தான் சொந்த சேதங்களுக்கு க்ளைம் செய்ய முடியும் இது இரண்டையும் கவர் செய்யும் விதமாக.
விரிவான காப்பீடுகளும் உள்ளன அவற்றை நீங்கள் எளிமையாக தேர்வு செய்து கொள்ளலாம்.
அவசியம் தேவை பாதுகாப்பு கவசம்
பொதுவாக இன்சூரன்ஸ் என்பது நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும், தவிர்க்க முடியாத அவசர கால கட்டங்களில் பாதுகாப்பு அளிக்கக்கூடிய திட்டமாக இருக்கிறது.
குடும்பத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்கள் இல்லாத சமயம் அந்த குடும்பம் எந்த அளவிற்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும்.
என்பதை பல நபர்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த சமயத்தில் குறைந்தபட்சம் பொருளாதார நிதி இன்சூரன்ஸ் திட்டம் மூலம் மூலம் கிடைக்கும்.
டெர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன
டெர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு வகையான ஆயுள் காப்பீடு திட்டமாகும், இந்த பாலிசியில் பாலிசிதாரர் உயிரிழந்த பிறகு பெரும் பலன் கிடைக்கும் மற்ற இன்சூரன்ஸ் திட்டங்கள் உடன் ஒப்பிடுகையில்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள்
இதில் பிரீமியம் மிகக் குறைவு, இதில் நீங்கள் செலுத்திய பிரீமியத்தில் பணம் திரும்ப கிடைக்காது, எனினும் பலன் மிகப்பெரியதாக இருக்கும்.
Top 10 health insurance company list India
இந்த பாலிசியில் பாலிசிதாரர் உடல்நலம் அடிப்படையில், பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது, இன்சூரன்ஸ் நிறுவனத்தால்.