Best 6 symptoms of heart failure in tamil

இருதய செயலிழப்பு ஏற்பட போவதற்கான முன் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்(Best 6 symptoms of heart failure in tamil)

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளில் இதயத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது, நமது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை இதயம் செய்கிறது.

இப்போது உலகம் முழுவதும் இதயம் சார்ந்த பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள், இதனால் ஒருவருக்கு 40 வயது ஆனால் இதயம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு கட்டாயம் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நமது இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், பலவீனமான இருதயம் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் வழங்குவதில் இதயத்திற்கு உள்ள சிரமம் போன்றவை, அதிகபட்சமாக இதய செயலிழப்புக்கு வழிவகை செய்கிறது.

இருதய செயலிழப்பு என்பது சிலருக்கு திடீரென்று ஏற்படக்கூடிய பிரச்சனையாக இருப்பதால், இது ஒரு அபாயகரமான விஷயமாக இப்பொழுது மக்களால் பார்க்கப்படுகிறது.

இருதயப் பிரச்சினை என்பது அதிகம் வெளியில் தெரிவதில்லை அது காலப்போக்கில் அதிக ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது, எனவே நமக்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் அது உடலில் என்ன மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்துகொள்வது இப்போது முக்கியமாக இருக்கிறது.

Best 6 symptoms of heart failure in tamil

அறிகுறிகள் 1

இருதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்போது, சில அறிகுறிகள் முற்றிலும் இதயத்துடன் தொடர்பில்லமால் இருக்கும், ஆனால் அது இருதய செயலிழப்பிற்கான அறிகுறியாக இருக்கிறது.

சில சமயங்களில் தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுகிறது, இதனால் மூக்கில் இருந்து வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் சளி வெளியேறும். இது இதய செயலிழப்பு அதற்கான அறிகுறியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

காரணங்கள்

இருதயப் பிரச்சினை காரணமாக நுரையீரலில் அதிகமான திரவம் கோர்த்துக் கொள்கிறது, அதனால் இந்த அறிகுறியே இதய பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக சந்திப்பார்கள்.

அறிகுறிகள் 2

இருதயம் தொடர்பான பிரச்சினைகளில் முதலில் இருப்பது டி ஸ்பானியா என்பது ஒரு பொதுவான அறிகுறியாக இருக்கிறது, சாதாரணமாக ஓடும் போது அல்லது கடுமையான வேலைகள் செய்யும் போது ஒருவருக்கு மூச்சு வாங்கலாம்.

ஆனால் ஓய்வில் அல்லது தூக்கத்தில் இருக்கும்போது கூட தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இது சில சமயங்களில் திடீரென்று ஏற்படலாம், இதனால் அவர்கள் தூங்கும் போது சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த நிலையில் நாம் கவலையாகவும், சோர்வும், அமைதியற்ற, நிலையில் கண்டிப்பாக இருப்போம்.

காரணங்கள்

டிஸ்பானிய நிலையில் இந்த மாதிரியான விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என நீங்கள் கேட்கலாம், நுரையீரலிலிருந்து இரத்தம் இதயத்திற்கு திரும்புவதற்கு பதிலாக இதய பிரச்சனை காரணமாக இரத்தம் நுரையீரல் நரம்புகளுக்கு திரும்புகிறது.

இதனால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது, நுரையீரல் இயங்க முடியாமல் போவதால் அது சுவாச பிரச்சனைகளை அதிக அளவில் ஏற்படுகிறது.

Best 6 symptoms of heart failure in tamil

அறிகுறிகள் 3

உடல் சோர்வு முக்கியமான அறிகுறிகளாக இருக்கிறது, ஆனால் சோர்வு என்பது ஒரு சாதாரண அறிகுறி என்பதால் அது அதிகமாக கண்டு கொள்ளப்படுவதில்லை.

இது உங்கள் அன்றாட பணிகளை திறம்பட செய்வதை குறைக்கிறது எனவே இந்த நிலையில் நோயாளிகள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் எப்போதும் சோர்வாகவே உணர்கிறார்கள்.

காரணங்கள்

உடலின் அன்றாட இயக்கத்திற்கு இதயமானது போதுமான ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் கட்டாயம் அனுப்பும், ஆனால் இதயத்தில் பிரச்சினை ஏற்படும்போது இதனால் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தத்தை அனுப்பும் முடிவதில்லை.

இதனால் சில முக்கிய உறுப்புகளுக்கு மட்டும் இரத்தத்தை அனுப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது இருதயம். எனவே உடல் மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு அனுப்பவேண்டிய இரதத்தை திருப்பி முக்கிய உறுப்புகளான மூளை போன்றவற்றிற்கு அனுப்புகிறது. எனவே நாம் சோர்வாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

அறிகுறிகள் 4

உடல் திசுக்களில் அதிகமான அளவில் திரவ உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் கைகள், கால்கள், கணுக்கால்கள், போன்ற உடல் பகுதிகளில் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது.

இது உடல் எடை கூடுவதற்கு வழிவகை செய்கிறது, இதனால் நமது உடலில் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.

காரணம்

இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படும்போது அது மற்ற உடல் பாகங்களுக்கு இரத்தத்தை சரியான விகிதத்தில் செலுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது, இதனால் இரத்தத்தை செலுத்தும் விகிதம் அளவு குறைகிறது.

அனைத்து திசுக்களிலும் திரவ உற்பத்தி இதனால் தொடங்குகிறது, இதன் விளைவாக சிறுநீரகங்களில் செயல்பாட்டிலும் பிரச்சனைகள் உருவாகிறது.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள சோடியத்தை நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றுகிறது, அவற்றின் செயல்பாட்டில் புதிய பிரச்சனைகள் ஏற்படும் போது அது குறைவான அளவில் சோடியம் மற்றும் தண்ணீரை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

திசுக்களில் திரவம் தேங்குவதால் இதுவும் ஒரு காரணமாக கூட அமைகிறது.

அறிகுறிகள் 5

பசியின்மை மற்றும் குமட்டல் என்பது இருதய செயல் இழப்பிற்கு முக்கியமான காரணியாக உள்ளது. இதனால் நமக்கு பசி எடுக்காமல் இருக்கலாம், நமது உடல் எடை வெகுவாக குறைய இது மூலகாரணமாக இருக்கிறது.

ஆனால் இது ஒரு சாதாரண அறிகுறியாகவே மக்கள் கருதுகிறார்கள், இதை இதய பிரச்சனையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

காரணங்கள்

இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் வயிற்றில் செரிமான அமைப்பில் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. செரிமான அமைப்பானது உடலில் ஆற்றல் மூலமாக செயல்படுகிறது ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான ஆற்றலை செரிமான அமைப்பை தருகிறது.

அதில் ஏற்படும் பிரச்சனையானது மற்ற உறுப்புகளையும் அதிகமாக பாதிக்கிறது, செரிமான அமைப்பு குறைவான இரத்தத்தை பெறுவதால் ஜீரணக்கோளாறுகள் உற்பத்தியாகிறது.

அறிகுறிகள் 6

இருதயம் வேகமாகத் துடிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம் மற்றும் எப்போதும் ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருக்கும்.

காரணங்கள்

ஒருவேளை இதயம் பலவீனம் அடையும் போது இரத்தத்தில் சரியான அளவில் அழுத்தத்தை அதனால் கொடுக்க முடியாமல் போகும். ஆனால் உடலுக்கு தேவையான அளவில் இரத்தத்தை அது கட்டாயம் கொடுத்தாக வேண்டும், இதற்காக இதயமானது வேகமாக துடிக்க செய்யும்.

இதன்மூலம் ஒட்டுமொத்த உடலுக்கு இரத்தத்தை செலுத்த முயற்சி மேற்கொள்ளும் இருதயம்.

Click here to view our YouTube channel

இருதய செயலிழப்பு என்பது ஒரு மோசமான பிரச்சனையாக உருவாகிறது, இதை கவனிக்காமல் இருக்கும் பொழுது அது மேலும் மோசமாகிறது. இதனால் இருதய செயலிழப்பு தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

Best 5 Benefits of eating Beef in tamil

இந்த அறிகுறிகளை ஆரம்பக்கட்டத்தில் கவனிக்காமல் விடுவது எதிர்காலத்தில் தீவிர அபாயத்தை ஏற்படுத்தும், மேலும் இந்த பிரச்சனைகளை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கையே வாழ்வது ஒரே தீர்வாக அமையும்.

இதற்கு தினமும் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தியானம் செய்தல், போன்றவை பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

Leave a Comment