Best 7 security tips Aadhar card using

Best 7 security tips Aadhar card using

இஷ்டத்திற்கு பயன்படுத்தாதீர்கள் ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் வெளியிடும் முக்கியமான எச்சரிக்கை..!

ஒரு காலத்தில் 10 முதல் 12 நபர்களை கொண்ட ஒரு முழு கூட்டுக்குடும்பத்திற்கும் ஒரே அடையாள அட்டை இருக்கும் அதுதான் ரேஷன் கார்டு.

ஆனால் இப்பொழுது எல்லாமே இந்தியாவில் தலைகீழாக மாறிவிட்டது, குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு கூட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

இப்படி அரசாங்கத்தினால் மிகவும் திட்டமிடப்பட்டு ஒட்டுமொத்த இந்தியர்களின் டிஜிட்டல் அடையாள அட்டையாக மாறியுள்ளது ஆதார் கார்டு,இதை மிகவும் அசால்ட்டாக இந்திய மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.

யார், எங்கே, எப்பொழுது, கேட்டாலும் கொடுப்பது

உள்ளூர் ஜெராக்ஸ் கடை தொடங்கி, வெளி ஊருக்கு சென்றாலும் நீங்கள் தங்கும் விடுதி வரை ஏன் கேட்கிறார்கள், எதற்கு ஸ்கேன் செய்கிறார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல்.

யார் எப்போது கேட்டாலும் ஆதார் அட்டையை எடுத்து நீட்டும் பழக்கம் மக்களிடம் பழகிவிட்டது, இதை அரசாங்கம் முழு எச்சரிக்கையாக அறிவிக்கிறது.

ஆதார் அட்டையை முறையாக பயன்படுத்துவது, பகிர்வது, வாங்குவது, எப்படி எக்காரணத்தைக் கொண்டும் எப்படியெல்லாம் பயன்படுத்தி விடக்கூடாது, ஏமார்ந்த கூடாது, என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Best 7 security tips Aadhar card using

பதிவிறக்கம் செய்வதில்

நீங்கள் உங்களின் இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், முடிந்தவரை உங்களின் சொந்த கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினியை பயன்படுத்துங்கள்.

இணையதள சென்டர் அல்லது யாரோ ஒரு நபரின் கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்ய கூடாது ஒருவேளை அப்படி செய்தாலும் கூட பதிவிறக்கம் செய்யப்பட்ட e-aadhar இன் அனைத்து விவரங்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

இணையதளத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும்

இ-ஆதார் சரியான இடத்தில் பதிவிறக்கம் செய்தால் மட்டும் போதாது அதை சரியான இணையதள வழியாகவும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இணையதளத்தில் ஆயிரக்கணக்கான போலியான வெப்சைட்கள் உள்ளன அங்கு சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்தால் உங்களுடைய அனைத்து விவரங்களையும் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் எப்பொழுதுமே உங்களுடைய இ-ஆதார் அட்டையை அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்த மட்டுமே பதிவிறக்கம் (https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html) செய்ய வேண்டும்.

Best 7 security tips Aadhar card using

பூட்டு போடாமல் இருப்பது

Best 7 security tips Aadhar card using உங்களின் ஆதார் பயோமெட்ரிக்ஸை வேறு யாரும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வசதியை (UIADI) வழங்குகிறது, அது ஆதார் லாக் / அண்ட் லாக் (Aadhar Lock / Unlock) ஆகும்.

இந்த வசதியை (mAadhaar) செயலி வழியாகவும் பயன்படுத்தலாம் அல்லது பின்வரும் இணையதள லிங்க் கிளிக் செய்து பயன்படுத்தலாம் (https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock).

இந்த வசதியை பயன்படுத்த உங்களுக்கு விஐடி அதாவது விர்சுவல் ஐடி (Virtual ID) கட்டாயம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவும் (VID) என்பது உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தற்காலிகமான 16க்கு ரேண்டம் நம்பர் ஆகும்.

ஹிஸ்டரி- யை சாதனை செய்யாமலிருப்பது

Best 7 security tips Aadhar card using அடிக்கடி உங்களின் ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) சரிபார்க்கவும் இதில் கடந்த 6 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட 50 ஆதார் பயன்பாடு வரலாற்றை நீங்கள் சரிபார்க்க முடியும்.

அந்த பட்டியலில் நீங்கள் செய்யாத ஒரு அங்கீகாரத்தை கண்டறிந்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் 1947 என்கின்ற எண்  வழியாக அல்லது (help@uidai.gov.in) வழியாக புகார் தெரிவிக்கலாம்.

கடவுச்சொல் புறக்கணிப்பு

Best 7 security tips Aadhar card using ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களுக்கான எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத அணுகல்களுக்கும் எதிராக செயல்படும் முதல் மற்றும் முக்கிய பாதுகாப்பு ஆகும்.

அதை உங்கள் (m-Aadhar) செயலிலும் பயன்படுத்தலாம் அதாவது ஆதார் விவரங்களை கொண்டிருக்கும் (m-Aadhar) செயலிக்கு 4 இலக்க பாஸ்வேர்டு செட் செய்யவும்.

மாஸ்க் போட்டால் ரிஸ்க் இல்லை

இது ஆதார் பாதுகாப்பை பற்றி கவலைப்படும் நபர்களுக்கு பரிந்துரைக்கும் ஒரு செயல் முறை நீங்கள் உங்கள் ஆதார் நம்பரை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால் நீங்கள் VID அல்லது Mask Aadhaar பயன்படுத்தலாம்.

இது வழக்கமான ஆதார் கார்டு போலவே செல்லுபடியாகும் மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்

கொடுப்பதில் மட்டுமில்லாமல் ஆதார் அட்டையை ஒரு ஐடி ஆக நீங்கள் பெறும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் பல நபர்கள் போலியான ஆதார் அட்டையை உங்களிடம் கொடுத்து உங்களை ஏமாற்றி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வாங்கும் ஆதார் கார்டை முற்றிலும் சரிபார்க்க வேண்டும், இதை இணையதளம் வழியாகவும் அல்லது மொபைல் செயலி வழியாகவும் சரிபார்க்கலாம்.

இணையதளம் வழியாக சரிபார்க்க e-aadhar அல்லது ஆதார் பிவிசி கார்டில் உள்ள க்யூ ஆர் (QR) கோடு ஸ்கேன் செய்யவும்.

இணையதளத்தில் சரிபார்க்க கீழ்வரும் இணையதள லிங்கில் குறிப்பிட்ட ஆதார் இன் 12 இலக்க எண்ணை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும் (https://myayaadhaar.uidai.gov.in/verifyAadhaar)

தவறான மொபைல் நம்பர்

Best 7 security tips Aadhar card using நீங்கள் சரியான மொபைல் நம்பர் அல்லது உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உங்களுடைய ஆதார் காடு உடன் இணைத்து உள்ளீர்களா என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்.

வாக்காளர் அடையாள அட்டை வீட்டிலிருந்து திருத்தம் செய்வது எப்படி..!

அதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதனை சரிபார்க்க வேண்டும், ஏதேனும் தவறு நடந்து இருந்தால் அதனை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.

5 best tips belly fat reduce in tamil

எப்படி கேட்டாலும் கொடுக்க கூடாது

எக்காரணத்தைக் கொண்டும் ஆதார் கார்டு தொடர்பாக உங்கள் மொபைலுக்கு வரும் OTP மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர கூடாது.

Leave a Comment