இந்த 7 வகையான பழச்சாறுகள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்(Best 7 types of fruit juices to lose weight)
இன்றைய உலகில் ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பிரச்சனைகளில் மிகவும் தொல்லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான் ஒருவருக்கு உடல் எடை அதிகமாக இருந்தால் அந்த நபரால் எந்த ஒரு வேலையையும் சரியாகவும் நிம்மதியாகவும் சரியான நேரத்தில் செய்ய முடியாது எதை செய்தாலும் சிறிது நேரத்தில் மூச்சு வாங்கி உடல் சோர்ந்துவிடும்.
எனவே பலர் இந்த உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்று தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள் மேலும் உணவில் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள் அதுமட்டுமின்றி தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன அதில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையைக் குறைப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையை முழுமையாகப் பார்க்கலாம்.
உண்மையில் பழச்சாறுகளை அடிக்கடி எடுத்துக்கொண்டால் பசி ஏற்படுவதை குறைக்கிறது மேலும் நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும் இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவது குறைக்கப்படும் குறிப்பாக உடல் எடை குறைய வேண்டும் என்றால் முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சி செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும் அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால்.
தர்பூசணி பழச்சாறு
உடல் எடை குறைப்பில் தர்பூசணி முக்கிய பங்காக உள்ளது அதிலும் இதனை தினமும் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தர்பூசணி பழச்சாறு குடித்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
அண்ணாச்சி பழச்சாறு
அண்ணாச்சி பழத்தை மட்டும் அரைத்தால் அது கெட்டியாக இருக்கும் ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொண்டால் பழச்சாறு போல் கிடைத்துவிடும் உங்களுக்கு பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கி விடும்.
அவகோடா பழச்சாறு
நிறைய நபர்கள் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தவறாக நினைத்துக் கொண்டு உள்ளார்கள் ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது அதிலும் அவகேடோவை அரைத்து அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறைந்துவிடும் மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால் இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.
தக்காளி பழச்சாறு
உங்களுக்கு விரைவில் உங்கள் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில் 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் 7 நாட்களில் நல்ல மாற்றம் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்.
ஆரஞ்சு பழச்சாறு
ஆரஞ்சு பழச்சாறு குடித்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும் அதிலும் குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்க வேண்டும் மேலும் வெதுவெதுப்பான தண்ணீரில் பழச்சாறு போட்டு குடிக்க வேண்டும்.
எங்கள் YouTube சேனல் பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க
திராட்சை பழச்சாறு
தினமும் காலையில் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பு ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி விரைவில் உடல் எடை குறைக்க உதவும்.
கொய்யாப்பழம்.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது உடலில் உள்ள கொழுப்புகளை எளிதில் கரைத்து விடும்.