Best 8 biggest rivers in tamil nadu
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளின் பட்டியல்..!
தமிழ்நாடு என்றாலே எண்ணற்ற இயற்கை வளங்களும் செல்வச் செழிப்பும் நிறைந்துள்ளது எனலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மிகச்சிறந்த விவசாயிகளுக்கு ஏற்ற இயற்கை வளங்களை கொண்டிருந்தது.
இப்பொழுதும் தமிழ்நாட்டில் அதிக அளவில் வாழை, நெல், கரும்பு, பூக்கள், கேரட், பீன்ஸ், வேர்க்கடலை, போன்ற எண்ணற்ற பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு உயிர்நாடியாக இருக்கக்கூடிய முக்கிய நதிகளை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.
தமிழ்நாடு இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் என்று அழைக்கப்படும் சென்னை.
தமிழ்நாடு இந்திய துணை கண்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது இது யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா பிரதேசத்தில் எல்லைகளை பகிர்ந்துள்ளது.
இது வடக்கே கிழக்குத் மேற்கு தொடர்ச்சி மலையும் மேற்கில் நீலகிரி,மலைகளாலும், கிழக்கே வங்காள விரிகுடாக், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்திகாளழும் சூழப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் நாடு இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது, தமிழ்நாட்டில் மிக சிறந்த புலவர் திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்று புகழ்ந்துள்ளார்.
காவிரி ஆறு
காவிரி ஆறு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் நீர் கொடுக்கக்கூடிய ஒரு முக்கிய ஆறு ஆக இந்தியாவில் இருக்கிறது.
காவிரியாறு சுமார் 765 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஒரு மிகச்சிறந்த அதிக நீரினை வழங்கக்கூடிய ஒரு ஆறு தமிழ்நாட்டில் காவிரி ஆற்றினை நம்பி லட்சக்கணக்கான டெல்டா மாவட்டங்கள் இருக்கின்றன.
காவிரி ஆறு தமிழ்நாட்டு வரலாற்றில் இடம் பிடித்த ஒரு முக்கியமான நீர் ஆதாரத்தை வழங்கும் ஆறாக இருக்கிறது.
பாலாறு
தமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான நதி பாலாறு என்றழைக்கப்படுகிறது தமிழில் பாலாறு என்று அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவிலும் உற்பத்தியாகிறது தோற்றம் நந்தி மலையில் இருந்து இருக்கலாம்.
இந்த ஆறு கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் பாய்கிறது இந்த நதி சென்னை உட்பட வட தமிழகத்திற்கு அதிக அளவில் பயன் தருகிறது.
இது சுமார் 340 கிலோ மீட்டர் பாய்கிறது, பல ஆண்டுகளாக வழக்கத்திற்கு மாறாக வறண்ட மதங்களை கொண்டுள்ளது இருப்பினும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பலத்த மழையால் நதிக்கு புத்துயிர் அளித்து.
வட தமிழகத்தை மகிழ்ச்சி செய்தது மட்டும் இல்லாமல் இப்போது 2021 ஆம் ஆண்டு பெய்த அதிகப்படியான கனமழை காரணமாக பாலாற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் நீர் சென்றது.
திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பாலற்றாள் பயனடைகிறார்கள், வயலூர் என்ற இடத்தில் இந்த ஆறு வங்காள விரிகுடா கடலில் சேர்கிறது.
தாமிரபரணி ஆறு
தாமிரபரணி என்பது பெரும்பாலான ஆறுகளைப் போல் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலே உற்பத்தியாகி தமிழ்நாட்டிலே கடலில் கலக்கிறது என்று சொல்லலாம்.
பொதிகை மலைப் பகுதியில் உருவாகி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக ஓடி தூத்துக்குடியில் புன்னைக் காயல் அருகே மன்னார் வளைகுடாவில் கடலில் கலக்கிறது.
இந்த ஆறு ஆண்டு முழுவதும் ஓடும் ஒரு வற்றாத நதி இருப்பினும் மணல், அகழ்வு ஆய்வு, மற்றும் மாசுபாடு போன்ற சூழல் காரணமாக அதன் ஓட்டம் தடைபட்டுள்ளது.
கோகோ கோலா போல பன்னாட்டு நிறுவனங்கள் நீர் ஆதாரங்களை சுரண்டுவதுவதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
வைகை ஆறு
Best 8 biggest rivers in tamil nadu வைகை ஆறு மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் பாய்கிறது பாண்டிய பேரரசு செழித்து வளர்ந்தது அவர்கள் மதுரையை ஆட்சி செய்த போது.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக அளவில் பங்களிப்பை வழங்கினார்கள் வைகைகரை தமிழ் சங்கத்தின் மூலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தகவல் தெரிவிக்கிறது.
இந்த ஆறு தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது, தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த ஆறு பெரும்பாலும் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பாய்கிறது, இது இறுதியில் ராம்நாடு மாவட்டத்தின் கடற்கரையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
பவானி ஆறு
பவானி ஆறு காவிரி ஆற்றுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இரண்டாவது நீளமான நதியாகும் இது சுமார் 215 கிலோ மீட்டர் தூரம் தமிழ்நாட்டில் பாய்கிறது.
இது காவிரி ஆற்றின் கிளை நதியாக இது பெரும்பாலும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பவானி ஆறு நீலகிரி மலைப்பகுதியில் உருவாகி ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் பயன் தருகிறது.
அமராவதி ஆறு
Best 8 biggest rivers in tamil nadu அமராவதி ஆறு கரூர் திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும்.
பழனிமலைத் தொடரில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் இந்த ஆறு உற்பத்தியாகிறது.
இதனுடன் பாம்பாறு சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கிறது, அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது.
நொய்யல் ஆறு
நொய்யல் என்பது வெள்ளிங்கிரி மலை பகுதியில் உற்பத்தியாகும் காவிரி நதியின் கிளை நதியாகும்,நொய்யல் அருகே காவிரி ஆற்றில் கலப்பதால் நதியின் பெயர் வந்தது.
இந்த நதி முன்பு அண்டை சமூகங்களுக்கு ஒரு முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது, நீர் சேமிப்புக்கான கால்வாய்களின் விரிவான வலையமைப்பு உள்ளது.
ஆற்றின் மூலம் வழங்கப்பட்ட தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இந்த நீர் மேலாண்மை அமைப்பு மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதியில் மழை கணிசமாக குறைந்துள்ளது சில ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஊடகங்களில் அதிக அளவில் பிரசித்தி பெற்றது.
காரணம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் இயங்கி வரும் ஜவுளி நிறுவனங்கள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் தெரிவித்ததற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்பெண்ணையாறு
Best 8 biggest rivers in tamil nadu தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்று கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் தென்பெண்ணை ஆறு உருவாகிறது.
இறுதியில் தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது கர்நாடக மாநிலத்தில் 102 கிலோமீட்டர் நீளமும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் 180 கிலோ மீட்டர் நீளத்திலும்.
திருவண்ணாமலை,வேலூர் மாவட்டங்களில் 34 கிலோ மீட்டர் நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிலோ மீட்டர் நீளத்துக்கும் பாய்கிறது.
இறுதியில் தமிழ்நாட்டில் கடலூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.