Best 8 Foods to Protect Pancreas in tamil
கணையத்தை பாதுகாக்க உதவும் சிறந்த உணவு வகைகள்..!
கணையம் என்பது மனித உடலில் இருக்கும் மிகச் சிறந்த ஒரு பாகம் இதனுடைய பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது உங்களில் பல நபர்களுக்கு கணையம் என்றால் என்ன.
அதன் பணி என்று தெரியாது அதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கணையம் என்பது உங்கள் உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி ஆகும் அதைப்போன்று இதன் பணியும் மிகப் பெரியது.
அந்த பணி என்னவென்றால் உணவை செரிக்க வைக்க உதவும் நொதிகளை சுரக்க வைக்கிறது.
உணவில் உள்ள சத்துக்களை பிரித்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புவது அதுமட்டுமில்லாமல்.
கணையம் தான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் இன்சுலினை சுரக்கச் செய்கிறது.
இவ்வளவு சிறந்த வேலைகளை செய்கின்ற கணையத்தில் எவ்வாறு நச்சுகள் சேராமல் இருக்கும்.
எனவே கணையத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது உங்களுடைய முதல் கடமையாகும், அதற்கு சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
கணையத்தை வலுப்படுத்த வெள்ளைப்பூண்டு
உங்களுடைய அன்றாட உணவுகளில் சிறிதளவு வெள்ளைப்பூண்டை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பூண்டு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்பதால் இன்சுலினை சரியாக சுரக்க உதவுகிறது.
உணவில் பூண்டு சேர்ப்பதால் காயங்கள் மற்றும் கட்டிலிலிருந்து கணையத்தை முழுமையாக பாதுகாக்கலாம் மேலும் கணையத்தை அதிகமாக பலப்படுத்தலாம்.
கணையத்தை வலுப்படுத்த சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்னும் வேதிப்பொருள் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் முழுமையாக தடுக்கிறது.
கணையத்தை வலுப்படுத்த காளான்
காளானில் உள்ள உயர்தர நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி, இவைகள் கணையத்தை பலமடங்கு பலப்படுத்துகிறது.
கணையத்தை வலுப்படுத்த ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரி மற்றும் செர்ரி இந்த பழங்களில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது,எனவே இவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் கணையத்தைத் நீங்கள் பலப்படுத்தலாம்.
கணையத்தை வலுப்படுத்த தயிர்
அடுத்து தயிர் கணையத்தில் நோய் தொற்றுகளை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும்.
கணையத்தை வலுப்படுத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா, கரோட்டின், என்ற உயர்தர சத்துக்கள் நிறைந்துள்ளது, இந்த சத்துகள் புற்றுநோய் செல்கள் உருவாவதை முற்றிலும் தடுக்கிறது.
கணையத்தை வலுப்படுத்த தக்காளி
Best 8 Foods to Protect Pancreas in tamil தக்காளியில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் இருந்து பாதுகாப்பு வழங்கி கணைய புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கணையத்தை வலுப்படுத்த பசலைக்கீரை
Best 8 Foods to Protect Pancreas in tamil பசலைக்கீரை கணையத்தின் புற்றுநோயிலிருந்து கூட பாதுகாப்பு வழங்கும் திறன் கொண்டுள்ளது என மருத்துவம் தெரிவிக்கிறது இதை குறைந்தது வாரத்திற்கு 2முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.