Best 8 tips improve the health of the stomach

Best 8 tips improve the health of the stomach

குடல் ஆரோக்கியம் காக்க எப்படி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்..!

இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது, முறையான உணவு உடலை மட்டுமின்றி மனதையும் மேம்படுத்துகிறது.

ஆனால் தற்போது நாகரிகம் காரணமாக உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்து உள்ளது, அதனால் மலச்சிக்கல் செரிமானமின்மை போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அது நம் உடலின் குடலின் ஆரோக்கியத்தை அழிக்க வழிவகை ஏற்படுகிறது.

எனவே எப்படி என்ன சாப்பிடனும் என்ற முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி னால் பல்வேறு பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

அதன்படி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நலமாக வாழ சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Best 8 tips improve the health of the stomach

பசி எடுத்தால் மட்டும்

பல நபர்கள் பசி எடுக்காமலே அவர்களுக்கு பிடித்தமான உணவை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள், இல்லாவிட்டால் அளவுக்கு அதிகமாக அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள்.

எனவே நீங்கள் முன்பு சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் நடந்த பிறகு நன்றாக பசிக்கும் போது மட்டுமே அடுத்த வேளை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அமைதி தேவை

அமைதியான மற்றும் வசதியான இடத்தில் சாப்பிட வேண்டும் அப்போது கால்களை மடக்கி உட்கார்ந்து வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் உணவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புத்தகம் படிப்பது, செல்போன், டிவி பார்ப்பது, போன்றவற்றை தவிர்த்து உணவில் மட்டும் கவனத்தை செலுத்தி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

Best 8 tips improve the health of the stomach

தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்

ஒரு நபரின் தேவைகளை பொறுத்து சாப்பாட்டின் அளவு மாறுபடுகிறது, வெவ்வேறு வயிற்றின் அளவு வளர்சிதைமாற்றம் அடிப்படையில் அனைவரும் சாப்பிடுகிறோம்.

எனவே உங்கள் வயிறும், மனமும் வரை, மட்டுமே சாப்பிட வேண்டும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என நம் முன்னோர்கள் கூறியதை மறந்து விடாதீர்கள்.

மிதமான சூட்டில் உணவு தேவை

முடிந்தவரை உங்கள் உணவை மிதமான சூட்டில் மட்டும் புதிதாக சமைத்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் செரிமான நொதிகள் முறையாக செயல்படும்,செரிமான சக்தியை பாதுகாக்க உதவும்.

ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து நேரடியாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மென்று சாப்பிட வேண்டும்

உணவை அப்படியே விழுங்கக்கூடாது, வேகமாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று உமிழ்நீருடன் சேர்த்து மெதுவாக விளங்கவேண்டும், மென்று சாப்பிடுவது செரிமானத்தின் முதல் மற்றும் முக்கியமான பகுதியாகும்.

முற்றிலும் தவிர்க்க வேண்டும்

சில காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், குளிர்பானங்கள், கடல் உணவுகள், சில நபர்களுக்கு ஒத்துக்கொள்ளாமல் பாதிப்பு ஏற்படக்கூடும்.

உதாரணமாக பால், பழம், மீன், போன்றவை ஒன்றாக சாப்பிட்டால் சில நபர்களுக்கு ஒத்துவராமல் வயிற்றுக்கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டு விடும்.

மிகச்சிறந்த உணவுகள்

Best 8 tips improve the health of the stomach  நீங்கள் சாப்பிடும் முன்பு உங்கள் உணவின் தரத்தை ஆராய்வது மிக முக்கியம் எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் அதிக அளவு எண்ணெய் உள்ள உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

அப்போதுதான் செரிமானம் எளிதாக இருக்கும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும் உலர்ந்த நிலையில் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூபாய் 60,000/- சம்பாதிக்க

உணவை ருசித்து சாப்பிடுங்கள்

Best 8 tips improve the health of the stomach  நீங்கள் எப்பொழுதும் உணவு சாப்பிடும்போது ஐம்புலன்களையும் பயன்படுத்தி ரசித்து ருசித்து மனநிறைவுடன் அமைதியாக சாப்பிட வேண்டும்.

உணவின் தோற்றம் அதன் நிறம் சுவை போன்றவற்றை பார்த்து ருசித்து சாப்பிட வேண்டும்.

Best 10 Tips for Curing Nervousness in tamil

முக்கியமாக உணவில் மட்டும் கவனம் ஈடுபட்டிருக்க வேண்டும், மேலும் தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Leave a Comment