Best 8 ulcer treatment home remedies in tamil
அல்சர் நோய் குணமாக பாட்டி வைத்தியம்..!
இப்போது உள்ள வாழ்க்கை முறை மாற்றங்களால் மனிதர்கள் முதலில் பாதிக்கப்படுவது ஒழுங்கற்ற உணவு முறைகளால் தான்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரியான நேரத்திற்கு சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை.
இதனால் பல்வேறு வகையான நோய்கள் மனிதனை தாக்குகிறது அதில் எப்போதும் முதன்மையாக இருப்பது அல்சர், இந்த அல்சர் பிரச்சனையை நாம் மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று நினைப்பது தவறான ஒரு செயல்.
இந்த பிரச்சினையை நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மூலமாக எளிதாக குணப்படுத்தலாம்.
அந்த வகையில் இந்த பதிவில் அல்சர் குணமாக நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம், அல்சர் வர என்ன காரணம் என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
அல்சர் நோய் வருவதற்கான காரணங்கள் என்ன
இந்த அல்சர் நோய் வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது.
அதுமட்டுமில்லாமல் முறையற்ற உணவு முறை, அதிக சூட்டில் விற்கப்படும் உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால், இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.
அல்சர் நோய் குணமாக பாட்டி வைத்தியம் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
அல்சர் குணமாக என்ன செய்யலாம்
சாப்பிடும் உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும், காலை, மதியம், இரவு, மூன்று வேளையும் சரியான நேரத்தில் சரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் 50 சதவீத நோய் வகைகள் குறையும்.
பொதுவாக நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும், எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
மனம் மகிழ்ச்சியாக இருந்தால் இந்த அல்சர் பிரச்சனை தானாக சரியாகிவிடும்.
அல்சர் நோயின் அறிகுறிகள் என்ன
அல்சர் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது, இந்த நோயின் முக்கியமான அறிகுறிகள் என்ன என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.
அடிவயிற்று வலி
திடீரென எடை குறைதல்
குமட்டல்
ரத்த வாந்தி
ஏப்பம்
வயிற்று உப்பசம்
கருப்பு நிறமாக மலம் வெளியேறுதல்
பச்சை வாழைப்பழம்
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் பச்சை வாழைப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், குடலில் இருக்கும் புண்கள் மெதுவாகத் குணமாக தொடங்கும்.
தேங்காய் பால்
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம்மகாக தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்.
குடல் புண், வாய்புண், தொண்டைபுண், அல்சர், போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும் அல்சர் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
ஆப்பிள் ஜூஸ்
அல்சர் முற்றிலும் குணமாக ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த ஆப்பிள் ஜூஸ் கடைகளில் வாங்கி குடிக்க கூடாது, வீட்டில் தயார் செய்து குடிக்கலாம், குறிப்பாக இதில் செயற்கையான சர்க்கரை சேர்க்கக்கூடாது.
அகத்திக்கீரை
அகத்திக் கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது சித்த மருத்துவத்தில், எனவே தினமும் ஒரு கப் அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால், அல்சர் பிரச்சனை முற்றிலும் சரியாகும், அகத்திக் கீரையை சூப் செய்து குடிக்கலாம்.
புழுங்கல் அரிசி கஞ்சி
தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனையை முழுவதும் சரிசெய்துவிடலாம்.
மணத்தக்காளிக் கீரை
மணத்தக்காளிக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது சூப் செய்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்றுப் புண், தொண்டை புண், வயிற்று உப்புசம், வாய் துர்நாற்றம், போன்றவை குணமாகும்.
அல்சர் குணமாக நெல்லிக்காய்
ulcer treatment home remedies தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அல்சர் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
சீரகம்
ulcer treatment home remedies அல்சர் பிரச்சனையை முற்றிலும் சரி செய்வதற்கு சீரகம், அதிமதுரம், தென்னம் பாளை பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பசும்பால் சேர்த்து அரைத்து.
சிறு எலுமிச்சை அளவு எடுத்துக் கொள்ளவும், பின்பு இவற்றை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், அல்சர் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவுகள்
ulcer treatment home remedies அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மது அருந்தவோ புகை பிடிக்கவும் கூடாது.
டீ, காபி, கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஏனெனில் பாலில் உள்ள புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து வயிற்றுப்புண்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும், அதாவது பால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாக உற்பத்தி செய்யும்.