Best 8 Ways to Stay Healthy During Pregnancy
கர்ப்பகாலம் ஆரோக்கியமாய் அமைய 8 வழிகள்..!
ஒரு பெண் அவளுடைய வாழ்க்கையில் தாய்மை அடையும் போது அவள் தன்னை மட்டும் இல்லாமல் அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சியில் வைத்திருக்கிறாள்.
கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியமான உடல் இருக்கும்.
பிரச்சனைகள் இல்லாமல் கர்ப்ப காலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது.
ஆனால் ஆரோக்கியமான மருத்துவ வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து விடலாம்.
8 சிறந்த குறிப்புகள்
சதவீத உணவு
தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன்,பால், முட்டை, போன்றவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
போலிக் அமிலம் மாத்திரைகள்
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து, கற்பம் தரித்து 12வது வாரம் வரை தினமும் 400 மில்லிகிராம் மாத்திரையை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள்.
கீரை வகைகள், கோழி, தானியங்கள், சேர்க்கப்பட்ட போன்ற போலிக் அமிலம் உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
Best 8 Ways to Stay Healthy During Pregnancy மென்மையாக பதப்படுத்தப்படாத தடிமனான உணவுகள், வேக வைக்கப்படாத இறைச்சி வகைகள், அழுகிய முட்டைகள், முக்கியமாக மாட்டு மற்றும் பன்றி ஈரல், நுரையீரல், வைட்டமின் ஏ மாத்திரைகள், போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது மிக நல்லது.
முக்கியமாக ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள்
தொடர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டே இருந்தால் குறை பிரசவம் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது,எனவே கர்ப்பிணி பெண்கள் குறிப்பாக காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபயிற்சி செய்யலாம்.
தியானம், யோகா, போன்றவற்றை செய்யலாம் விவசாய வேலைகளை அதிக அளவில் செய்யலாம், இதனால் உடல் முழுவதும் பயிற்சி ஏற்படுவதால் இடுப்பு எலும்புகள் சரியாக விரிவடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தால் சிறு வயதில் உங்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடாமல் இருப்பின் நீங்கள் கர்ப்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்பு உங்கள் மருத்துவரை அணுகி அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது மிக நல்லது.
ரத்தப் பரிசோதனை மிக முக்கியம்
Best 8 Ways to Stay Healthy During Pregnancy கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டால் அல்லது உங்கள் அருகில் அம்மை நோய் பாதிக்கப்பட்ட நபர் யாராவது இருந்தால்.
நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உடைகளில் மிக கவனம் தேவை
இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல், போன்றவற்றில் நீங்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஆடை அணியும் போது இறுக்கமான ஆடைகள் முற்றிலும் தவிர்ப்பது மிக மிக நல்லது, அதிக சூடான நீர் குடிப்பது, சூடான நீரில் குளிப்பது, போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.
வாந்தி எடுப்பதை கட்டுப்படுத்துவது எப்படி
Best 8 Ways to Stay Healthy During Pregnancy முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வழக்கமாக ஒரு அறிகுறியாக இருக்கும், உலர் தானிய வகைகள் போன்ற உணவுகளை அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாந்தி வருவது குறையும்.
உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும், பொரித்த உணவுகளை தவிர்ப்பதாலும், வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.