Best 9 home remedies to increase breast milk
தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம் என்ன..!
பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரவும், போதிய ஊட்டச்சத்துகளை பெறவும், இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்பது அசைக்கமுடியாத உண்மை.
அதனால் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கிய கடமையாகும்,தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இதனை வற்புறுத்துகிறது.
இவ்வாறு இருக்கும் போது அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்று கேட்டால் அது சிந்திக்க வேண்டிய விஷயம் என்று சொல்லலாம்.
ஏனென்றால் சில பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தாய்ப்பால் அதிக அளவு சுரக்காது, இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தினால் கட்டாயம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
தாய்ப்பால் சுரக்க தாய்மை அடைந்த பெண்கள் சில எளிய வீட்டு வைத்தியதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து தங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்தை தரமுடியும்.
இதை விட ஒரு சிறந்த விஷயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது தாய் பால் சுரக்க பாட்டி வைத்தியம் என்ன.
லவங்கப்பட்டை பயன்பாடு தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பால் போதிய அளவு இல்லாமல் இருக்கும் போது பெண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக்கொண்டு சுடுதண்ணீரில் போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
கருப்பட்டி வெல்லம் பயன்பாடு
பனை மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்களை கொண்டவை.
குறிப்பாக சுக்கு மற்றும் மிளகு கலந்து கருப்பட்டியை தினமும் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க தொடங்கும்.
கூடுதலாக கருப்பட்டியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த சோகை வியாதி இருந்தால் தாய்மார்களுக்கு குணப்படுத்தும்.
சீரகம் பயன்பாடு
சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன இதை நீங்கள் தினமும் பருகி வர தாய்பால் நிச்சயம் அதிகரிக்கும்.
மேலும் சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, அதனால் ரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
சீரகத்தைத் சுடுநீரில் போட்டு தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு பயன்பாடு என்ன
பூண்டு உணவில் நாம் அதிகம் சேர்த்துக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள ஒரு சிறந்த பொருள் இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டை சேர்த்து அதிக அளவில் பயன்படுத்தி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
பப்பாளி பழம் பயன்பாடு என்ன
பப்பாளி பழங்கள் தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் உதவுகிறது, இதை பெண்கள் தினமும் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்க தொடங்கும்.
தாய்ப்பால் சுரக்க வெற்றிலை
Best 9 home remedies to increase breast milk வெற்றிலை மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ள ஒரு தாவரம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு போதிய அளவு தாய்ப்பால் இல்லை என்றால் அவர்கள் வெற்றிலை பயன்படுத்தலாம்.
வெற்றிலை ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை, வெற்றிலையை நெருப்பில் காட்டி பின் மார்பில் வைத்து கட்ட தாய்ப்பால் நன்றாக சுரக்க தொடங்கும்.
தாய்ப்பால் சுரக்க முட்டை இறைச்சி
Best 9 home remedies to increase breast milk சந்தையில் கிடைக்கும் தரமான நாட்டுக் கோழி முட்டைகளை வாங்கி வேக வைத்து தினமும் 2 முட்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நாட்டு கோழி, மீன், ஆட்டு இறைச்சி, முதலியன இறைச்சிகளை தேவையான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
இது குழந்தை பெற்ற தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள்
Best 9 home remedies to increase breast milk பசும்பால், நெய், வெண்ணெய், தயிர், முதலியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இது குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறையாமல் இருப்பதற்கான ஊட்டச்சத்து அனைத்தும் வழங்கும்.
கீரைகள் மற்றும் காய்கறிகள்
Best 9 home remedies to increase breast milk தாய்மார்கள் தினமும் தங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, போன்ற காய்கறிகளையும்.
மாதுளை, சாத்துக்குடி, ஆப்பிள், உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளையும் தினமும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.