Best 9 work from home jobs in tamil
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் வீட்டில் இருந்துகொண்டே.
எளிமையான செய்யக்கூடிய இணையதள வேலைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்தும் எளிமையாகவும் அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வேலைகளாக இருக்கும்.
இந்த வேலையை செய்வதற்கு உங்களிடம் மடிக்கணினி அல்லது கணினி இணையதள வசதியுடன் இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் தொழில் துறையில் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டது இப்பொழுது அனைவரும் சரியாக உணர்ந்து உள்ளார்கள்,
ஏதாவது ஒரு அவசர கால கட்டத்திற்கு வீட்டிலிருந்து செய்யக்கூடிய பணம் தரக்கூடிய ஒரு தொழிலை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் உணர்ந்து உள்ளார்கள்.
கொரோனா வைரஸ் இதோடு முடிந்தபாடில்லை இனிவரும் காலங்களில், எப்ப வேண்டுமானாலும், எந்த நேரமானாலும், ஊரடங்கு உத்தரவு கட்டாயம் பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை இந்த உலகத்தில் மறுபடியும் வரலாம்.
அவசரகால பயன்பாட்டிற்கு வீட்டிலிருந்து செய்யக்கூடிய ஒரு இரு தொழிலை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் அந்த தொழில் எப்பொழுது வேண்டுமானாலும் உதவி செய்யும்.
வாய்ஸ் ஓவர் வேலை (Voice over work)
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு உங்கள் வீட்டில் மைக்செட் வேண்டும்.
YouTube, TV shows,போன்ற துறைகளில் இதற்கான மதிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்தத் தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு கூகுளில் Voice Over Jobs என்று தேடினால் அதிகமான வேலைவாய்ப்புகள் வரும்.
அதில் உங்களுக்கு பிடித்த மொழியை தேர்ந்தெடுத்து நீங்கள் இந்த தொழிலை தொடங்கி கொள்ளலாம்.
போட்டோஷாப் எடிட்டிங் ஜாப் (Photoshop Editing Job)
இந்தத் தொழில் செய்வதற்கு உங்களுக்கு கண்டிப்பாக போட்டோஷாப் சாஃப்ட்வேர் பற்றிய அனைத்து விஷயங்களும் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் இதில் Thumbnail in making, logo making, போன்ற வேலைகள் இருக்கும்.
இந்த வேலையை நீங்கள் வீட்டில் இருந்து எளிமையாக செய்யலாம்Thumbnail in making, logo making என்று தேடினால் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது அதன் மூலம் நீங்கள் இந்த வேலையை தொடங்கி விடலாம்.
கண்டெண்ட் ரைட்டர் (Content Writer)
உங்களுக்கு நன்றாக கதை எழுத தெரிந்தால் கற்பனை கதை அல்லது உணர்ச்சிப்பூர்வமான கதை அல்லது வரலாற்று கதை அல்லது அறிவியல் சார்ந்த கதையை எழுதத் தெரிந்திருந்தால் போதும்.
இந்த வேலை உங்களுக்கு எளிமையாக இருக்கும் Content Writer Jobs என்று தேடினால் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இணைந்த சந்தைப்படுத்தல் (affiliate marketing)
அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் உள்ள இணையதள பொருட்களை வாட்ஸ்அப், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி நீங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
நீங்கள் ஷேர் செய்த லிங்கை கிளிக் செய்து மற்றவர்கள் பொருள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
இந்த கமிஷன் தொகையை உங்களுடைய வங்கி கணக்கிற்கு அமேசான், ஃப்ளிப்கார்ட், உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்து வைத்திருப்பார்கள்.
டேட்டா என்ட்ரி வேலைகள் (Data Entry Jobs)
ஒரு நிறுவனமும் கொடுக்கக்கூடிய (Data) தரவுகளை நீங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான உங்களது மெயில் ஐடிக்கு அந்த நிறுவனத்திலிருந்து (Data) தகவல்கள் வந்துவிடும்.
இணையதளத்தில் இதுபோன்ற பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் அதிகமாக கொட்டிக்கிடக்கிறது அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற வேலைகளில் சில சமயங்களில் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இணையதளத்தை பயன்படுத்தும் பொழுது.
மொழிபெயர்ப்பாளர் வேலைகள் (Translator Jobs)
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு (Translate) மாற்றுவதுதான் இதன் வேலை இதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த மொழியில் பேசலாம் அல்லது செய்யலாம்.
கூகுளில் (Tamil Translator Jobs) என்று தேடினால் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சோசியல் மீடியா மேனேஜர் (Social Media Manager)
சினிமா துறையில் உள்ள நடிகர்களுக்கு சோசியல் மீடியாவை Maintain செய்வதற்குகூட நேரம் இருக்காது.
அதனால் நீங்கள் நடிகர்களின் சோசியல் மீடியாவை Maintain செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதற்கு (Flipkart, Instagram,Twitter) போன்ற செயலிகளில் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்புகளை Freelancer.in,Fiverr.com என்ற வலைத்தளத்தில் நீங்கள் தேடினால் அதிகமான வேலைவாய்ப்புகள் இன்னும் கிடைக்கும்.
ஆன்லைன் பயிற்சி வேலை (Online Tutoring Work)
உங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு சொல்லித் தருவதன் மூலம் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
இதற்கு நீங்கள் Vedantu,SuperProf,போன்ற இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம்.
கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன
கஸ்டமர் கேர் (Customer Care Executive Jobs)
இந்த வேலையை நீங்கள் வீட்டில் இருந்து செய்யலாம் அல்லது பகுதி நேர வேலையாகவும் செய்யலாம் (Customer Care Jobs Work From Home) என்று இணையதளத்தில் தேடினால் அதில் அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்கிறது.
Best two wheeler 10 insurance companies
உங்களுக்கு தெரிந்த வேலையை நீங்கள் தேர்வு செய்யலாம் நீங்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிறுவனமே அதற்கான பயிற்சியையும் உங்களுக்கு வழங்கிவிடும்.