Best agriculture loan Indian government 2020
இந்தத் திட்டம் மூலம் நீங்கள் 3,00,000 ரூபாய் வரை பெற முடியும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.(Best agriculture loan Indian government 2020)
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு குறைந்த வட்டியில் கிசான் திட்டம் மூலம் கடன் அட்டை விவசாயிகளுக்கு வழங்குகிறது இதைப்பற்றி முழுமையாக ஒவ்வொரு விவசாயிகளும் தெரிந்து கொள்ளுங்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் உடனுக்குடன் கடன்கள் வழங்கப்படுகிறது
இதுவரை 2.4 இலட்சம் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை மூலம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது
மேலும் இந்தியாவில் விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்க்கு 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நமது மத்தியரசு
கிசான் கடன் அட்டை பெறுவதற்கு என்ன தகுதி தேவை.
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச 75 வயது. உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும் மற்றும் 60 வயதிற்க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு கண்டிபாக துணை விண்ணப்பதார்கள் தேவை என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது.
மற்றவர்கள் நிலத்தை குத்தகைக்கு. எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணையலாம்.
மீன் பண்ணை, கோழி பண்ணை, கால்நடை விவசாயம், இயற்க்கை ஊரம், தயாரித்தல் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் செய்யும் நபர்கள் இந்த திட்டத்தில் கடன் அட்டைப் பெற முடியும்.
கண்டிபாக விவசாயம் சார்ந்த தொழில். செய்யும் நபர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய வேண்டும் மேலும் போலியாக விண்ணப்பித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
கிசான் கடன் அட்டை வழங்கும் வங்கிகளின் விவரங்கள்.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் நீங்கள் இந்த கடன் அட்டை பெறலாம்.
State Bank of India
Indian Bank
Axis Bank
Indian Overseas Bank
HDFC Bank
ICICI Bank
போன்ற வங்கிகளில் கிசான் கடன் அட்டைகள் பெற முடியும்
கிசான் கடன் அட்டையில் கிடைக்கும் நன்மைகள்.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு விவசாயியும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு கிசான் கடன் அட்டைக்கு மத்திய அரசு எந்த விதமான கட்டணங்களும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்தத் திட்டம் மூலம் விவசாயிகள் அதிகபட்சமாக ரூபாய் 3 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் வேளாண் பணிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்கவும் கடன் அளிக்கப்படுகிறது இந்த திட்டம் மூலம்.
அதிகபட்சமாக ரூபாய் 1.65 லட்சம் வரை எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது இந்த சட்டத்தின்கீழ்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறையும்.
விவசாயிகள் அறுவடை காலங்களில் இந்தக் கடனை திருப்பி செலுத்தும் வசதியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து கடன் முடியும் இந்த திட்டத்தின் மூலம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் வங்கியில் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் மேலும் மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ள இந்திய குடிமகனுக்கான சான்றிதழ்களை வழங்கலாம். ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவை இதனுடன் இரண்டு சிறிய புகைப்படங்கள் தேவைப்படுகிறது மற்றும் நீங்கள் கடன் பெறும் வங்கியில் கேட்கப்படும் ஆவணங்கள்.
சிறந்த முதலீட்டு திட்டம் தேசிய கால்நடை பணி 2020.
உங்கள் கடன் தொகைக்கு உத்தரவு கிடைத்தவுடன் உங்கள் வீட்டிற்கு கிசான் கடன் அட்டை தபால் மூலம் அனுப்பப்படும் இதனைக் கொண்டு நீங்கள் உங்கள் வேளாண் சார்ந்த துறைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் கடன் வழங்கிய தொகை மட்டும் அரசாங்கம் வட்டி வசூலிக்கும்.twitter