இந்தியாவில் சிறந்த ஐந்து திட்டங்கள் 2020 (Best Five Projects in India 2020 )
2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மருத்துவ காப்பீடு, உணவு பழக்க வழக்கம், போன்றவைகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டு என்று சொல்ல வேண்டும். மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கிட்டதட்ட 150 நாட்கள் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அனைத்தும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின.
வருங்காலத்தில் இதுபோல அவசரநிலை இந்த உலகில் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றக்கூடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு செயல்படுத்தும் சிறந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
தேசிய ஓய்வூதிய சேமிப்பு திட்டம்.
2004 ஆம் ஆண்டு மத்திய மாநில தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு கடன் பத்திரங்கல், கார்ப்பரேட் பாண்டுகள் ஈக்விட்டி ஆகிய முதலீடுகளில் முதலீடு செய்யலாம் இந்த முதலீட்டுத் திட்டத்தில் ரூபாய் 50 ஆயிரம் வரையில் 80 சிசிடின் (1பி) கில் வரிவிலக்கு உண்டு.
தேசிய சேமிப்பு சான்றிதழ்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் 33 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார் என்றாள் இந்த திட்டம் எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் வருவாய் ஈட்டக்கூடிய திட்டம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இதில் ரூபாய் ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு உண்டு.
இந்தத் திட்டத்தில் அனைவரும் எளிதாக இணைந்து கொள்வதற்கு தபால்துறை மூலம் இணைந்து கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
அடல் ஓய்வூதிய திட்டம் பற்றிய முழு விவரங்களையும் அறிவோம்.
இந்தியாவில் உள்ள 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
அரசு அலுவலகர்கள் மட்டுமின்றி சுய தொழில் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் இந்த திட்டத்தில் வரிவிலக்கு உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி
இந்த முதலீட்டுத் திட்டத்தில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் என இரு வகையான முதிர்வு திட்டங்கள் உள்ளன. இதில் வரி விலக்கு உண்டு திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் வருமான வரி பிரிவு 80 சிசிடின் (1பி) கீழ் வரிவிலக்கு உண்டு. ரூபாய் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
Best scheme Indian government in 2020.!!!!!
பொது வருங்கால வைப்பு நிதியில் அதிக அளவில் மக்கள் முதலீடு செய்கிறார்கள் காரணம் பாதுகாப்பானது இந்த திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் லாபம் கிடைக்கிறது.
கிசான் விகாஸ் பத்திரம்.
1988 ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது விவசாயிகள் மட்டும் இதில் இணைய முடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் தற்போது அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஊக்குவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எரிபொருள் விலை குறையாமல் இருப்பதற்கு மத்திய அரசு செய்யும் சிறந்த திட்டம்
இந்த திட்டத்தின் காலம் பத்து ஆண்டுகள் இதன் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம் இந்த திட்டத்திற்கு வரி விலக்கு சலுகை கிடையாது இந்த திட்டத்தை பயன்படுத்தி வங்கியில் எளிதாக கடன் பெற முடியும்.twitter