Best Hair care Health 5 tips in Tamil
ஆண்கள் குளிர்காலத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முறைகள் உங்கள் முடியை பாதுகாக்க.!!!(Best Hair care Health 5 tips in Tamil)
ஆண்களுக்கு குளிர் காலத்தில் வியர்வை இல்லை, வியர்க்குரு இல்லை, உடல் துர்நாற்றம் இல்லை, இப்படி பல நன்மைகள் இருந்தாலும் குளிர்காலங்களில் சரும வறட்சி மற்றும் கூந்தல் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கிறது ஆண்களுக்கு.இப்பொழுது இருக்கும் தலைமுறை ஆண்களுக்கு 20 வயது முதலில் ஆரம்பமாகிறது கூந்தல் பிரச்சனை குறிப்பாக வெள்ளை முடி தோன்றுதல் அதிக மன அழுத்தம் காரணமாக முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் 10ல் 8 நபர்களுக்கு இந்தியாவில் உள்ளது.
கவனக்குறைவால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இளைய தலைமுறையினர்களுக்கு முக்கியமாக ஒரு பிரச்சனை உள்ளது அனைவருக்கும். அது முடி இல்லை என்பதைவிட இருக்கும் முடியை பாதுகாப்பது என்பது கடிதத்திலும் கடினமாக உள்ளது. சாதாரணமாக மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் முடிக்கு வறட்சி, அரிப்பு, பொடுகு தொல்லை, போன்றவை அதிகமாக ஏற்படும் இந்த பிரச்சனைகளை சாதாரணமாக விட்டுவிட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பெண்கள் போல ஆண்கள் உடல் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை காரணம் வேலை பளு முக்கியமாக அமைகிறது பெண்கள் உச்சி முதல் பாதம் வரை உடலை அழகாக வைத்துக் கொள்வார்கள் ஆனால் ஆண்கள் முகத்தை பற்றியே கவலைப் படுவதில்லை அதனால் முடி பராமரிப்பு என்பது அரிதாகவே செய்கிறார்கள். குளிர்காலங்களில் சில ஆயுர்வேத நடைமுறைகளை பின்பற்றினால் எளிதாக உங்கள் முடியை பராமரிக்கலாம் செலவில்லாமல்.
குளிர்காலங்களில் கூந்தல் பராமரிப்பு முறைகள்.
முதலில் கலப்படமில்லாமல் தூயத் தேங்காய் எண்ணெய் தினமும் உங்கள் தலைக்குத் தேய்த்துக் கொள்ளுங்கள் இது ஒன்று போதும் உங்கள் கூந்தல் பிரச்சனையே 90% சரி செய்து விடும்.
கற்றாழையை குளிப்பதற்கு முன்பு உங்கள் தலை முடிக்கு நன்கு தேய்த்துக் கொள்ளுங்கள் இதனால் உங்கள் உடம்பில் இருக்கும் சூடு குறைய ஆரம்பிக்கும் உங்கள் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியமான கரு நிறம் கிடைக்கும் இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அதிக கெமிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் கடுமையான ஷாம்பு உங்கள் ஸ்கால்ப்பை சேதப்படுத்த கூடும். ஆரோக்கியமான ஸ்கால்ப்தான் முடிக்கு அத்திவாரம் எனவே ஆர்கானிக் மற்றும் லேசான ஷாம்புவை பயன்படுத்துங்கள்.
உங்கள் முடிக்கு சரியான எண்ணெய்யை தேர்ந்தெடுங்கள்.
நம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் சரியான தீர்வாக உள்ளது. மேலும் இப்பொழுது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில ஆர்கானிக் எண்ணெய் கூட பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ,போன்றவைகளை உங்கள் தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மசாஜ் செய்யலாம்.
ஸ்கால்ப்கூட சருமம் போலத்தான் குளிர்காலத்தில் சருமம் எப்படி வரண்டு காணப்படும். அதுபோல ஸ்கால்ப்கூட வறண்டு விடும் எனவே ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு மிகவும் அவசியமாக மூடிக்கு எண்ணையை பயன்படுத்த வேண்டும்.
ஹேர் டிரையர் அறவே பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் அதிகப்படியான வெப்பம் ஸ்கால்ப்பில் படுவதால் அரிப்பு பிரச்சினை ஏற்படும் மேலும் கூந்தலின் வேர்களை கடினமாக பாதிக்கப்படுவதால் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
குளிக்கும் போது கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
தலைக்கு குளிக்கும் போது கண்டிஷனர் அப்ளை செய்வது என்பது உங்கள் முடிக்கு ஒரு பாதுகாப்பான அரணை ஏற்படுத்தும். அது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் இதனால் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் உங்கள் கூந்தல் விடுபடலாம் ஷாம்பு பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் பயன்படுத்த மறக்க வேண்டாம்.
உங்கள் நுரையீரலை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.!!!
உங்கள் உணவில் சரியான ஊட்டச்சத்தை தேர்ந்தெடுங்கள்.
உடலில் நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இப்போது இருக்கும் உணவு முறைகள் அமைந்துள்ளது குறிப்பாக துரித உணவுகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்ல விஷயமாக அமையும். மேலும் அதிகமான எண்ணெய் அதிகப்படியான, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள் இதனால் உங்கள் உடலுக்கும் நல்லது உங்கள் கூந்தலுக்கும் நல்லது மேலும் அதிகமாக நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.twitter