Best Health Benefits of redsnapper Fish 2022
சங்கரா மீன்கள் மீன்களில் பல வகைகள் இருக்கிறது, பார்வைக்கு கவர்ந்திழுக்கும் தொட்டி மீன்களைப் போன்று மிகுந்த அழகுடன் இளஞ்சிவப்பு நிறத்தை.
பொதுவான பண்பாக கொண்டிருக்கும் சங்கரா மீன் நம்ம ஊரில் பரவலாக அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மீன் வகைகளில் ஒன்றாக இருக்கிறது.
சங்கரா மீன் பொதுவாக குழம்பின் சுவைக்கு ஏற்றவை புளி சற்று அதிகமாக ஊற்றி சங்கரா மீன்கள் போட்டு வைக்கப்படும் மீன் குழம்பு சுவையாக இருக்கும்.
வறுவலுக்கு சுவையாகவே இருக்கும் பொதுவாக சங்கரா மீன்கள் எளிதில் உடையும் தன்மையோடு இருக்கும், என்பதால் வறுவல் செய்ய வேண்டுமாயின் சற்று பெரிய சைஸ் சங்கரா மீனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கிலோவிற்கு மூன்று அல்லது நான்கு மீன்கள் அளவிற்கு பெரிய சைஸ்யாக இருப்பதை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
செலீனியம், பொட்டாசியம், வைட்டமின் கே, மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த சங்கரா மீன் குறைந்த கலோரி நிறைந்த புரதம்.
இந்த ஊட்டச்சத்துக்களை வழக்கமாக அதிகமாக உள்ளடக்கிய ஒரு உணவு தீவிர மருத்துவ நிலைமைகளை தடுப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட வகையில் பயன் அளிக்கும்.
செலினியம்
அதிகம் நிறைந்த இந்த சங்கரா மீனில் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை உடலில் அதிகரிக்கிறது மற்றும் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய இது தேவைப்படுகிறது.
இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக முடக்குவாதம், புற்றுநோய், மற்றும் இதய நோய்களுக்கு, வழிவகுக்கும் டிஎன்ஏ பாதிப்பை தடுக்கிறது, உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
வைட்டமின் ஏ
உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மற்றும் தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு இது முக்கியமானதாக தேவைப்படுகிறது.
வைட்டமின் ஏ உயிரணு இனப்பெருக்கம் மற்றும் வேறு பாட்டிலும் ஒரு பங்கு வகிக்கிறது.
தினமும் நீங்கள் போதுமான அளவு வைட்டமின் ஏ சாப்பிடுவது, கண்புரை அல்லது கண் தொடர்பான மாகுலர் போன்ற கண் கோளாறுகளை உருவாக்கும், அபாயத்தை குறைத்துவிடுகிறது.
வைட்டமின் ஏ ஒரு கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்து மற்றும் குடல்களால் உறிஞ்சப்படுவது உணவு கொழுப்பின் ஆதாரம் தேவைப்படுகிறது.
பொட்டாசியம்
பொட்டாசியம் ஒரு தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும் வளர்சிதை மாற்றத்தில் தேவையான என்சைமன்களைத் தூண்டுவதற்கு மென்மையான தசைகள் சரியாக சுருங்குவதற்கு உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
போதுமான பொட்டாசியம் அளவு இல்லாத உணவுகள் மூலம் உடலில் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ், மற்றும் சிறுநீரக கற்கள் ஆகியவற்றின் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
நீங்கள் தொடர்ந்து அதிக அளவு சோடியத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்.
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!
சோடியம் உட்கொள்ளுதலை குறைப்பதற்கும் உங்கள் பொட்டாசியம் அளவை அதிகரிப்பதற்கு, நீங்கள் சிறந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் அதில் ஒன்றுதான் இந்த சங்கரா மீன்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை தவறாமல் நீங்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய், பெருந்தமனி தடிப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
New 50 name of the girl baby with the letter C
குழந்தைகள் வாரத்திற்கு 2 முறை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வருவதால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கடல் சார்ந்த உணவுகளில் மட்டுமே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது.