உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும்(Best Health effects of too much uric acid 2021)
நமது இரத்தத்தில் பலவகையான தனிமங்கள் உள்ளது அதில் யூரிக் அமிலம் உள்ளது. இது சரியான அளவில் உடலில் உற்பத்தியாகும் போது எந்தவிதமான பிரச்சனைகளும் இருப்பதில்லை.
ஆனால் சில நேரங்களில் இதனுடைய உற்பத்தி அதிகமாகும் போது இதனால் உடலில் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படும், எனவே இந்த பிரச்சினை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
ஹைபார்யூரீசீமியா என்பது ஒரு உடல்நல பிரச்சனை உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், இந்த பிரச்சனை ஏற்படும். இதனால் உடலில் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளும் மேலும் பல ஆரோக்கிய பிரச்சனைகள் இதனால் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உலகில் பெரும்பாலான நபர்கள் இந்த யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள், நமது உணவு முறையானது இதற்கு முதன்மையாக உள்ளது. நமது உணவு முறையில் செய்யும் பல்வேறு வகையான மாற்றங்கள் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த முடியும்.
யூரிக் அமிலம் என்றால் என்ன?
உணவிலுள்ள ப்யூரின்களை உடைக்கும் பொழுது அதனால் யூரிக் அமிலம் உண்டாகிறது, நாம் உண்ணும் இறைச்சி, பால் பொருட்கள், ஆல்கஹால், பீன்ஸ், சர்க்கரை, போன்ற உணவுகளில் அடங்கி உள்ளன.
அவற்றை சாப்பிடும் போது அவற்றிலிருந்து ப்யூரின்கள் வெளியாகிறது, அவற்றை உடைப்பதற்கு உடலில் யூரிக் அமிலம் சுரக்கிறது, சாதாரணமாக இரத்தம் ஓட்டம் வழியாக யூரிக் அமிலமானது சிறுநீரகங்களுக்கு சென்று அங்கு வடிகட்டப்படும்.
உயர் யூரிக் அமிலம்
இரத்தத்தில் யூரிக் அமிலம் இருப்பது ஒரு இயல்பான விஷயமாகும், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இரத்தத்தில் யூரிக் அமிலம் உள்ளது.
இது எப்படி அதிகமாக இருந்தால் அதனால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, குறைவான அளவில் இருந்தால் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே ஆண்களுக்கு 2.5 மி.கி / முதல் 7.0 மி.கி /டி.எல் அளவில் இருக்க வேண்டும் பொதுவாக பெண்களுக்கு 1.5 மி.கி / முதல் 6.0 மி.கி /டி.எல் இரத்தத்தில் யூரிக் அமிலம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆனால் சில சமயங்களில் உடலில் யூரிக் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்கிறது, அல்லது அதை வடிகட்டும் பொழுது பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள அளவுக்கு அதிகமான அளவில் யூரிக் அமிலம் சுரக்கும் பொழுது, அது உயர் யூரிக் அமிலம் என்றழைக்கப்படுகிறது.
இது ஏற்படுவதற்கு என்ன காரணங்கள்
உயர் யூரிக் அமிலமானது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது மருத்துவர்களால்.
மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் இது உண்டாகிறது.
இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உணவு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய டையூரிக் மருந்துகள் கூட ஹைப்பர்யூரிசிமியாவை உண்டாக்குகிறது.
மற்ற காரணிகள்
பல நோய் நிலைகள் மற்றும் சிகிச்சை முறைகள் கூட ஹைப்பர்யூரிசிமியாவை உண்டாக்குகிறது இந்த நோய். புற்றுநோய் நோயாளிகளுக்கு கீமோதெரபி எனும் சிகிச்சை முறை அளிப்பதை பலர் தெரிந்து வைத்திருப்பார்கள், இந்த சமயத்தில் புற்றுநோய் செல்கள் இறந்து அவை ப்யூரின்களை வெளியிடுகிறது இதனால் யூரிக் அமிலம் அளவு உடலில் அதிகரிக்கிறது.
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கும் அதிக அளவு யூரிக் அமிலம் சுரப்பதற்கு ஒரு நிலை இருக்கிறது, இதனால் சிறுநீரகத்தில் கட்டாயம் பாதிப்பு ஏற்படுகிறது.
அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது.
மன அழுத்தம்
அதிகப்படியான மன அழுத்தமானது உடலில் பல்வேறு வகையான தீய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது, அதிகமான மன அழுத்தம் போதுமான அளவில் ஓய்வு இல்லாமை, சரியான தூக்கம் இல்லாமை மற்றும் உடற்பயிற்சி இல்லாமை போன்றவை யூரிக் அமிலம் அதிகமாக உடலில் சுரக்க காரணமாக இருக்கிறது.
இப்பொழுது இருக்கும் காலகட்டங்களில் சரியான அளவில் மன அழுத்தத்தை வைத்து இருந்தால் மட்டுமே, எந்த ஒரு நோயும் உங்களை அண்டாது.
அதற்கு நீங்கள் தியானம், யோகா, உடற்பயிற்சி, நடனமாடுதல், உங்களுடைய மனதிற்கு சந்தோஷம் கொடுக்கக் கூடிய செயல்களை செய்தல் போன்றவைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.
யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகளின் அறிகுறிகள்
பொதுவாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அதனுடைய அறிகுறிகள் தெரியாது, எனவே சில அறிகுறிகள் மூலம் நாம் அவற்றை கண்டறிய முடியும்.
ஒருவேளை யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு கீல்வாதத்தை ஏற்படுத்தும், இதனால் மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி கட்டாயம் ஏற்படும்.
மேலும் அதிக அளவு யூரிக் அமிலம்மானது சிறுநீரகத்தில் கற்களை தோற்றுவிக்கும், இது முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தப்போக்கு போன்றவை ஏற்படும், இதனை நீங்கள் அறிகுறியாக உணர்ந்து கொள்ளலாம்.
பரிசோதனை முறைகள்
யூரிக் அமிலம் உடலில் அதிகமாக இருப்பதை எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும், இருந்தாலும் சிலருக்கு சிறுநீரகத்தில் வலி போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த நிலையில் அவர்களுக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.
ஆனால் சில நேரங்களில் கீல்வாதம் யூரிக் அமிலத்தால் சிக்கல்களை ஏற்படுத்தும், மூட்டுகளில் யூரிக் அமிலம் சேருவதால் கீழ்வாதம் ஏற்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதனைத் தடுப்பது எப்படி
அதிக யூரிக் அமிலத்தை மருத்துவ முறைகள் கொண்டு தடுக்க முடியும், இதற்கு சில மருந்துகள் இருக்கிறது, இவை வலி மிகுந்த சிகிச்சைமுறை இருக்கிறது, ஆனால் அவை உடலில் யூரிக் கற்களை கரைத்து விடுகிறது, சிலருக்கு பல நாள்கள் இந்த சிகிச்சை முறை தேவைப்படுகிறது.
உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு அதிக அளவில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உடல் எடையை குறைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, செய்வதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த முடியும், இதனால் உங்களுடைய மூட்டுவலியும் சரி செய்ய முடியும்.
உணவு வழிமுறைகள்
நாம் உண்ணும் பல உணவுகளில் அதிகமாக ப்யூரின்கள் உள்ளது. நமது உடலுக்கு நன்மை அளிக்கும் வகையில் குறைந்த அளவு ப்யூரின்கள் கொண்ட உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். வான் கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, சில வகை மீன்களில் அதிக அளவு உள்ளது.
எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு கொண்ட பாலாடைக் கட்டிகள், போன்ற உணவுகளில் அதிகமாக ப்யூரின்கள் உள்ளது, எனவே அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மேலும் ஆல்கஹால், குளிர்பானங்கள், சோடா, அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், ஆகியவற்றிலும் அதிகமாக ப்யூரின்கள் நிறைந்துள்ளது.
உங்களுடைய வயது, உடல் எடை, உயரத்திற்கு, ஏற்ப கட்டாயம் தேவையான அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ரோட்டி, பாஸ்தா, தயிர், உருளைக்கிழங்கு, மற்றும் நவதானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் இந்த யூரிக் அமிலம் அதனை கட்டுப்படுத்த முடியும்.
Click here to view our YouTube channel
குறிப்பாக ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, மிளகு, போன்ற உணவுகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது எப்பொழுதும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்கும்.
why Cold Drinks are not good for health 2021
சில மருந்து மாத்திரைகளில் கூட யூரிக் அமிலம் அதிகமாக நிறைந்து இருக்கிறது, அதனால் உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சினைகள் என்றால் முதலில் மருத்துவரை அணுகி சோதனை செய்து பிறகு தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.