Best health savings account full details 2022
சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன இதனால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்..!
கடந்த சில ஆண்டுகளாகவே சுகாதாரம் மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் அதிகமாக இருந்து வருகிறது.
மக்கள் பெரும்பாலும் மருத்துவ கட்டணங்களை செலுத்த இப்பொழுது அதிக அளவில் இன்ஷூரன்ஸ் திட்டங்களை நாடி உள்ளார்கள்.
ஆனால் தற்போது சுகாதார சேமிப்பு கணக்கு பற்றிய விழிப்புணர்வு நாடு முழுவதும் அதிகரித்து உள்ளது எனலாம்.
உண்மையில் சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது.
நம் நாட்டில் இப்பொழுது பல நபர்கள் மருத்துவ செலவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்கள் சரியானதாக கருதுகிறார்கள், பல ஆயிரக்கணக்கான மக்கள் சுகாதார சேமிப்பு பற்றி அறிந்திருப்பதில்லை.
இதற்கு வரி சலுகையும் இருக்கிறது
ஒரு சுகாதார சேமிப்பு கணக்கு என்பது ஒரு வகையான பணம் சேமிக்கும் திட்டம் என்று சொல்லலாம்.
இதன் மூலம் வரி சலுகையும் கிடைக்கும், இது உங்களுடைய பாக்கெட்டுக்களுக்கு வெளியே உள்ள மருத்துவ செலவினங்களை செலுத்த உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
கொரோனா வைரஸ் காலங்களில் அதிகரித்து வரும் கடுமையான செலவுகளுக்கு மத்தியில் இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இன்சூரன்ஸ் திட்டங்கள் ஓரளவு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தினாலும் மருத்துவமனைக்கு செல்லும், முன்பும் பின்பும், செலவினங்களுக்கு இன்னும் பெரிய தொகை தேவைப்படுகிறது.
எப்படி மக்களுக்கு செயல்படுத்தப்படுகிறது
HAS என்பது ஒரு சேமிப்பு கணக்கு ஆகும் இது அடிப்படை சுகாதார திட்டத்தின் கீழ் இல்லாதவை உட்பட மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
மக்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்து சுகாதாரம் தொடர்பான செலவினங்களுக்காக பயன்படுத்தக்கூடிய சாதாரண கணக்கு போல் இது செயல்படுத்தப்படுகிறது.
வட்டி விகிதம் எவ்வளவு
இந்த சிறந்த சேமிப்பு கணக்கிற்கு பொதுவான வழக்கமாக சேமிப்பு கணக்கை விட அதிகமான வட்டி வீதம் வழங்கப்படுகிறது.
இதை சுகாதார திட்டத்துடன் இணைக்கப்பட லாம், இந்த சேமிப்பு கணக்கில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும்.
முதலீடு செய்த நபர்கள் மருத்துவத் தேவைக்கு தேவையான அளவு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
எந்தெந்த வங்கிகள் இந்தியாவில் வழங்குகிறது
தற்போது இந்த சிறந்த சேமிப்பு திட்டத்தினை எச்டிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி வழங்குகிறது.
வட்டி விகிதம் 5 சதவீதம் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையிலான சுகாதார இன்சூரன்ஸ் வழங்குகிறது, இதற்கு பிரிமியம் வருடத்திற்கு 3,750 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
திட்டங்கள் பற்றிய முழு விவரம்
Best health savings account இந்தக் கணக்குக்கு மருத்துவமனையில் சேர்க்கும் முன் 30 நாட்களுக்கும், மருத்துவமனைக்கு பிந்தைய 60 நாட்களுக்கும் கட்டணங்களை வழங்கும்.
இது பகல் நேர சிகிச்சையுடன் சேர்ந்து வழங்கும் எச்டிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் சுகாதார கணக்கின் மூலம் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு பெற்றுக்கொள்ளமுடியும், கூடுதல் கட்டணத்தின் சலுகையும் கிடைக்கிறது.
குறைந்த பட்சம் எவ்வளவு தொகை
Best health savings account இந்த சிறப்பு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 25,000/-ரூபாய் கணக்கில் எப்பொழுதும் இருக்க வேண்டும், இந்த சிறப்பு கணக்கினை இணையதளம் அல்லது நேரடியாக சென்று தொடங்கிக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய பான் கார்டு, முகவரி சான்று, போன்ற உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும், இந்த கணக்கினை 21வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே தொடங்க முடியும்.