சிறந்த முதலீட்டு திட்டம் தேசிய கால்நடை பணி 2020(Best investment plan India 2020)
தேசிய கால்நடை திட்டம் 2014-2015 ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் இதனை தொடங்கியது இதன் நோக்கம் கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது. தேசிய கால்நடை திட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் (EDEG) கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற பின்பு இந்த திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டம் மூலம் கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப் பண்ணை, மற்றும் பன்றி பண்ணை, ஆகிய தொழில்களுக்கு மத்திய அரசு மானியம் கூடிய கடன்களை வழங்குகிறது.
கிராமப்புற மக்கள் எப்பொழுதும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வீடுதோறும் ஆடு, மாடுகளை வளர்ப்பது வழக்கம் அது தற்போது ஒரு சிறந்த தொழிலாக மாறிவிட்டது
பால், முட்டை, கறிக்கோழி, வாத்து, கினி கோழி, காடைக்கோழி ,ஆகியவைகள் மூலம் நல்ல லாபம் மற்றும் சிறந்த முதலீட்டுக்கான தொழிலாகவும் மாறிவிட்டது. சிலர் இந்த தொழிலை தங்களுடைய முழு நேர தொழிலாகவும் செய்ய தொடங்கியுள்ளனர்.
யார் யாரெல்லாம் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம்.
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திட்டம் மேலும் அனைத்து மக்களிடமும் இந்த திட்டம் சென்று சேரவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்கள், தனிநபர், விவசாயிகள், தொழில் முனைவோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு, அமைப்புசாரா குழுக்கள் , இந்த திட்டத்தினை தொடங்கலாம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி வங்கிகளில் இதற்கான கடன்களை பெறலாம்.
தேசிய கால்நடை திட்டம் தகுதியான நிதி நிறுவனங்கள்.
வணிக வங்கிகள்
கிராமப்புற கூட்டுறவு வங்கிகள்
மாநில கூட்டுறவு வங்கிகள்
மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்
தேசிய கால்நடை திட்டம்
நமது மத்திய அரசின் தேசிய கால்நடை திட்டம் மூலம் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை கோழிப்பண்ணை அமைத்து வருமானம் ஈட்டலாம். திட்டத்தின்படி கோழிப்பண்ணைக்கு முதலீட்டிற்கான நிதி வழங்கப்படுகிறது இதில் வான்கோழி, வாத்து, காடை கோழி, கினிக் கோழிகளை வளர்த்து கொள்ளலாம் மேலும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவருக்கு திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது,
எவ்வளவு தொகை மானியமாக வழங்கப்படும்.
உங்களுடைய திட்டம் குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் என்றால் அதில் 25 சதவீதம் அதாவது ரூபாய் 2.5 லட்சம் வரை மானியம் கிடைக்கும். மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மேலும் SC/ST பிரிவினர்களுக்கு அதிகபட்சம் 33 சதவீதம் அதாவது ரூபாய் 3 லட்சத்திற்கும் மேல் மானியமாக வழங்கப்படும்.
கோழிப் பண்ணைகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள்.
நாட்டுக்கோழி பண்ணை.
நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மேலும் SC/ST பிரிவினர்களுக்கு ரூபாய் 6.6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
கலப்பின கறிக்கோழி பண்ணை அமைப்பதற்கு வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூபாய் 11 லட்சமும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூபாய் 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
முட்டைக்கோழி பண்ணையில் 2000 முதல் 20 ஆயிரம் கோழிகள் வரை வளர்த்துக்கொள்ளலாம் மேலும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூபாய் 20 லட்சமும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு ரூபாய் 26 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
விற்பனைக் கூடம் மற்றும் நடமாடும் விற்பனைக்கூடம் அமைப்பதற்கு வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூபாய் 2.5 லட்சமும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு ரூபாய் 3.3 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.Meswake Best health benefits 2020 in Tamil
மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் தனிநபர்கள் வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறலாம் இதைப்பற்றி மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மையங்களை அணுகவும் மேலும் www.National livestock mission.com என்ற இணையதளத்தை காணலாம்.twitter
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் 7 உணவுகள்.