Best money saving plan tips in life 2022

Best money saving plan tips in life 2022

உங்களுடைய வருமானம் உயர்ந்தாலும், சேமிப்பு இல்லை ஏன்? நீங்கள் செய்யும் சில தவறுகள் என்ன..!

உங்களுடைய ஒவ்வொரு ஆண்டு வருமானம் உயர்ந்தாலும், வருமான உயர்வு அளவிற்கு சேமிப்பு உயரவில்லை, என்ற புலம்பல் பல நபர்களிடம் இருப்பதை பார்த்து வருகிறோம்.

வருமானம் உயர்ந்தால் மட்டுமே போதாது அந்த வருமானத்திற்கு ஏற்றபடி சிக்கனமாக இருந்து சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் கட்டாயம் குறைந்தபட்சம் 30 சதவீதம் சேமிக்க வேண்டும் என்ற வழக்கத்தை கடைபிடித்தால் போதும் வாழ்க்கையில் பொருளாதார பிரச்சினை வராது.

வருமானமும் சேமிப்பும் எவ்வளவு

உங்களுடைய வாழ்க்கைத் தரம் அல்லது பொருளாதாரம் உயர உயர உங்களுடைய வாழ்க்கையின் குறிக்கோள்கள் மற்றும் நீங்கள் வாங்கும் பொருட்களின் தரம் என்பது வேறுபடுகிறது.

இதனால் உங்களுடைய பணம் அதிகளவில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமே.

சேமிப்பு தொகை எவ்வளவு

வருமானம் அதிகரித்தால் செலவு செய்வதிலும் அதிகரிப்பதில் என்ன தவறு என்று கேள்வி அனைவரும் எழுப்புகிறார்கள்.

ஆனால் இதே வருமானம் கடைசிவரை இருக்குமா என்று நிச்சயமாக தெரிவிக்க முடியாது.

அதனால் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பு தொகையின் அளவையும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும், அப்போதுதான் உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரம் என்பது நிலையாக இருக்கும்.

Best money saving plan tips in life 2022

என்ன மாற்றம் தேவை வாழ்க்கையில்

வருமானம் குறைவாக இருக்கும் போது இட்லி, தோசை, தயிர் சாதம், என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் திடீரென்று வருமானம் அதிகமாக வந்தவுடன்.

பிரியாணி, பீட்சா, பர்கர், என அதிக விலையுள்ள பொருட்களை சாப்பிடுகிறார். அதேபோல் ஆடை அணிகலன்கள், வீட்டு அலங்கார பொருட்கள்.

இரண்டு சக்கர வாகனம், கார், ஏசி, பிரிட்ஜ், செல்போன், போன்ற பொருட்களையும் வருமானம் அதிகமாக அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வதால்.

சேமிப்பு என்பது இல்லாமல் போய்விடுகிறது ஒருவருடைய வாழ்க்கையில்.

இதனுடைய விளைவுகள் என்ன

எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் மாத கடைசியில் செலவுக்கு கூட பணம் இல்லை என்ற திண்டாட்டம் 80% மக்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது.

இதுதான் பொருளாதாரத்தில் ஏற்படும் கடுமையான பக்கவிளைவுகள் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் பல்வேறு சமயங்களில் கடன் வாங்குவதால் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் கடன் சார்ந்ததாகவே இருந்து விடுகிறது.

ஆடம்பரச் செலவுகள் என்ன

உங்களுடைய செலவுகளுக்கு விலைவாசி மற்றும் பணவீக்கம் காரணமாக இருந்தால் உங்கள் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு உங்கள் வருமானம் வளர்ச்சிக்கு ஏற்ற சேமிப்பை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆடம்பரமான, அனாவசியமான செலவுகளை குறைக்க ஆரம்பிக்கும் போதும், உங்களுடைய பொருளாதாரம் தானாக உயரத் தொடங்கும்.

Best money saving plan tips in life 2022

மாதம் பட்ஜெட் எவ்வளவு

Best money saving plan tips in life 2022 ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும் என்பது அனைத்து பொருளாதார வல்லுநர்களின் மிக முக்கிய அறிவுரையாக இருக்கிறது.

அடுத்த மாதம் எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என ஒரு சின்ன குறிப்பை நீங்கள் வைத்துக் கொண்டால் போதும்.

அதுதான் உங்கள் பட்ஜெட், பட்ஜெட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் செலவாகும் வருமானத்தில் 30 சதவீதம் கண்டிப்பாக சேமிப்பாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்களை மட்டும்

Best money saving plan tips in life 2022 தேவையான பொருட்களை மட்டும் வாங்க வேண்டும் என்றும் தேவையற்ற பொருட்களை வாங்கக் கூடாது என்றும் என்பதை எப்போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

செல்போன், கார், இருசக்கர வாகனம், ஆகியவை தேவையான பொருட்களாக இருந்தாலும் அதன் தேவையும் சதவீதக் கணக்கில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இருசக்கர வாகனம்,கார், ஆகியவை தேவை என்றால் மட்டுமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

செல்போனை பொருத்தவரை 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உங்கள் பட்ஜெட் போன் வாங்கினால் போதும்.

செல்போன், டிவி, இரண்டு சக்கர வாகனம்,ஆகியவற்றிற்கு செலவு செய்யும் பணம் உங்களுடைய சேமிப்பில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொழுதுபோக்கும் செலவு எவ்வளவு

Best money saving plan tips in life 2022 பொழுதுபோக்கு என்பது உங்களுடைய வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்று ஆனால் அதே நேரத்தில் செலவில்லாத பொழுதுபோக்குகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

மால், நட்சத்திர ஹோட்டல், சினிமா தியேட்டர், என ஆடம்பரமான பொழுதுபோக்கு சென்றால் அதிக செலவாகும்.

அதற்கு பதிலாக சுற்றுலா செல்லும் இடங்களில் செல்லலாம் பீச், பார்க், பொழுதுபோக்கு மைதானம், கோயில், என்று சென்றால் மனம் திருப்தியாக இருக்கும், செலவுகளும் குறைவாக இருக்கும்.

ஒப்பிட்டுப் பார்க்க கூடாது

Best money saving plan tips in life 2022 நம்மில் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பக்கத்து வீட்டில் ஏதாவது புதிய பொருள் ஒன்று வாங்கினால் அதை நாம் உடனே வாங்க வேண்டும் என்ற மனப்பான்மை குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்

உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், கார் வாங்கி விட்டால் நீங்களும் கார் வாங்க வேண்டும் என்பது உங்களுடைய மன நிலையாக இருக்கும்.

6 best secret healthy relationship in couples

இதுபோன்ற மனநிலையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும் உங்களுக்கு எது தேவையோ, உங்களுடைய வருமானத்திற்கு எது சரியோ, அதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும் உங்களுடைய  பொருளாதாரம் எப்பொழுதும் உச்சத்தில் இருக்கும்.

Leave a Comment